சென்னை: இந்தியாவின் முன்னணி ஐடி சேவை நிறுவனமாக டாடா கன்சல்டன்சி சர்வீஸ் நிறுவனம் செயல்பட்டு வருகிறது. டாடா குழுமத்துக்கு சொந்தமான இந்த நிறுவனம் தங்களுடைய ஊழியர்களில் 2 சதவீதம் பேரை அதாவது 12000க்கும் அதிகமான ஊழியர்களை பணி நீக்கம் செய்வதாக கடந்த வாரம் அறிவித்தது. இந்த சூழலில் டிசிஎஸ் நிறுவனத்தின் மற்றொரு நடவடிக்கையும் தற்போது பேசுபொருளாக மாறியிருக்கிறது.
டிசிஎஸ் நிறுவனம் தங்கள் நிறுவனத்தில் ஒப்பந்த முறையில் பணியாற்ற ஊழியர்களை தேர்வு செய்யும் நடைமுறைகளை தொடங்கியிருக்கிறதாம். தாங்களாக நேரடியாக ஊழியர்களை தேர்வு செய்வது ,நேர்காணல் நடத்துவது உள்ளிட்டவற்றை நடத்தாமல் மூன்றாவதாக ஒரு நிறுவனத்தை இதற்காக நியமனம் செய்திருக்கிறதாம். மின்ட் தளம் வெளியிட்டு இருக்கும் செய்தியின் படி டிசிஎஸ் நிறுவனம் அமெரிக்காவை சேர்ந்த Pantoon Service என்ற நிறுவனத்தோடு இதற்காக ஒப்பந்தம் செய்திருக்கிறது.

டிசிஎஸ் நிறுவனத்திற்கு தேவையான ஒப்பந்த அடிப்படையில் பணியாற்றும் ஊழியர்களை தேர்வு செய்து வழங்கும் பொறுப்பினை இந்த நிறுவனம் பெற்றிருக்கிறது. இந்த ஊழியர்களுக்கான சம்பளமும் நேரடியாக டிசிஎஸ் நிறுவனத்தின் வழியாக செல்லாமல் Pantoon Service நிறுவனம் வழியாக செல்லும் என தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஒப்பந்த ஊழியர்களுக்கு அழைப்பு விடுப்பது, நேர்காணல் நடத்துவது , அவர்களுக்கான சம்பளத்தை வழங்குவது உள்ளிட்ட அனைத்து பொறுப்புகளையும் Pantoon Service நிறுவனம் கையாள இருக்கிறது. டிசிஎஸ் நிறுவனத்தின் மனிதவளத்துறை இதில் எந்த நேரடி தொடர்பும் கொண்டு இருக்காது என அந்த செய்தி குறிப்பிடுகிறது . தங்களுடைய நிறுவனத்தில் ஒப்பந்த ஊழியர்கள் பணியமர்த்தலில் வெளிப்படை தன்மையை கடைப்பிடிக்க வேண்டும் என்பதற்காக இப்படி ஒரு நிறுவனத்திடம் ஒப்பந்தம் செய்திருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
Pantoon Service நிறுவனம் முதல் கட்ட நேர்காணல் நடத்திய பிறகு இறுதி நேர்காணல் மட்டுமே டிசிஎஸ் நிறுவனம் நடத்தும் என அந்த செய்தி குறிப்பிடுகிறது. இது தொடர்பாக இரண்டு மாதங்களுக்கு மேலாகவே டிசிஎஸ் நிறுவனம் Pantoon Service நிறுவனத்திடம் பேச்சுவார்த்தை நடத்தி வந்ததாகவும் தற்போது அது நடைமுறைக்கு வந்திருப்பதாகவும் தகவல்கள் வெளியாகி இருக்கின்றன .
டிசிஎஸ் நிறுவனம் தங்கள் நிறுவனத்திற்கு தேவையான முழு நேர ஊழியர்களை தொடர்ந்து தன்னுடைய ஹெச்ஆர் மூலமாகவே பணிக்கு அமர்த்தும் தெரிவித்து இருக்கிறது. பொதுவாக இதுபோல ஒப்பந்த முறையில் நியமனம் செய்யும் ஊழியர்கள் ஓர் ஆண்டுக்கு மட்டுமே வேலையில் இருப்பார்கள். இவர்களுக்கு 30,000 ரூபாய் முதல் 1 லட்சம் ரூபாய் வரை சம்பளம் வழங்கப்படும்.
More From GoodReturns

பெங்களூரு IT ஊழியர்களுக்கு ஷாக்!80% பேர் வேலையை இழக்கப்போகிறார்களா? AI-யால் இன்னும் என்ன ஆகுமோ?

இந்தியர்களே தங்கம் விலையை பத்தின கவலையே இனி வேண்டாம்!! ரெடியானது நாட்டின் பெரிய தங்க சுரங்கம்!!

தங்கம் விலை எங்கே போகும்? கோல்டு ETF-க்கு புதிய அபாயம் – ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை

மாருதி சுசூகி கார் வைத்திருப்பவர்களுக்கு ஜாக்பாட்.. வந்தது Quickstop சேவை.. பட்டுபட்டுன்னு வேலை முடியும்..!

SGB: தங்க பத்திரம் வாங்கியுள்ளீர்களா.. முதல்ல இதை படிங்க.. ஏப்ரல் 1 முக்கியமான நாள்..!!

தங்கம், வெள்ளி விலை அடுத்த 1 வருடத்தில் எங்கிருக்கும்? இப்போது முதலீடு செய்வது லாபமா? நஷ்டமா?

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

மக்களுக்கு பெரும் ஏமாற்றம்.. மத்திய அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

ஓசூர் இளைஞர்களுக்கு குட் நியூஸ்..!! இனிமே ஓசூர் தான் Tech Hub..!! டைடல் பார்க் பணிகள் பரபர..!!



Click it and Unblock the Notifications