2025-ஆம் ஆண்டில் 40,000 ஊழியர்களை பணியமர்த்தும் டிசிஎஸ்.. ஃபிரஷர்களே ரெஸ்யூம் ரெடி பண்ணுங்க!

இந்தியாவின் மிகப்பெரிய தொழில்நுட்ப நிறுவனமான டாடா கன்சல்டன்சி சர்வீசஸ் (TCS) 2025-ஆம் ஆண்டில் அதிக அளவிலான பணியாளர்களை பணியில் அமர்த்தவுள்ளதாகத் தெரிவித்துள்ளது. TCS நிறுவனத்தின் HR ஆபிஸரான மிலிந்த் லக்காட் 2025-ஆம் நிதியாண்டில் 40,000 பிரஷர்களை வேலைக்கு அமர்த்தவுள்ளதாக தெரிவித்துள்ளார். 2026-ஆம் நிதியாண்டில் இந்த எண்ணிக்கை இன்னும் அதிகரிக்கலாம் என்றும் கூறியுள்ளார். அது மட்டுமல்லாமல் ஆர்ட்டிஃபிஷியல் இன்டெலிஜென்ஸ், ஜெனரேட்டிவ் ஏஐ உள்ளிட்ட அதிநவீன தொழில்நுட்பங்களில் பணியாற்ற ஏதுவாக பயிற்சி வழங்கவும் திட்டமிட்டுள்ளது.

டிசிஎஸ் நிறுவனம் நல்ல வருவாய் ஈட்டக்கூடிய ஒரு நிறுவனமாகும். இப்போது இந்நிறுவனம் அனுபவிக்க மூத்த ஊழியர்களை நியமிப்பதில் கவனம் செலுத்தி வருகிறது. ஏனெனில் முக்கிய வணிகத் துறைகளில் வளர்ச்சி ஏற்படுவதற்கான போக்கு நிலவி வருவதால், இந்த நடவடிக்கையை டிசிஎஸ் நிறுவனம் எடுத்து வருகிறது.

 2025-ஆம் ஆண்டில் 40,000 ஊழியர்களை பணியமர்த்தும் டிசிஎஸ்.. ஃபிரஷர்களே ரெஸ்யூம் ரெடி பண்ணுங்க!

மேலும் இந்தியாவில் TCS போன்ற பிற IT நிறுவனங்களும் வளர்ச்சி பாதையை நோக்கி நகர்ந்து கொண்டிருக்கின்றன. சுமார் 1 வருடங்களுக்கும் மேலாக நிறுத்தப்பட்டிருந்த கேம்பஸ் இன்டர்வியூக்கள் மூலம் மாணவர்களை பணியில் அமர்த்தும் செயல்முறையை மீண்டும் தொடங்கியிருக்கிறது. இதற்காக டிசிஎஸ் நிறுவனம் பைனல் இயர் மாணவர்களுடன் இணைந்து, அவர்களை தொழிலுக்கு ஏற்றவாறு தயார் செய்வதற்கு பயிற்சி வழங்கவும் திட்டமிட்டுள்ளது.

டிசிஎஸ் நிறுவனம் தொழில்நுட்ப வெண்டர்களுடன் இணைந்து செயல்படுகிறது. இதன் மூலம் மாணவர்கள் இறுதி செமஸ்ட்டர்களில் இருக்கும் போது சிறப்பு பயிற்சிகளை வழங்க தொழில்நுட்ப வல்லுநர்கள் மற்றும் கல்வி நிறுவனங்களுடன் இணைந்து ஒரு திட்டத்தை உருவாக்கி வருகிறது. இதனால் மாணவர்கள் விரைவாக வேலை வாய்ப்பை பெற முடியும்.

தற்போது 5 நாட்கள் அலுவலகத்திற்கு வந்து வேலை செய்ய வேண்டும் என்ற பாலிசியை TCS நிறுவனம் வலியுறுத்துகிறது. மேலும் ஊழிய உயர்வு, பதவி உயர்வு போன்றவை இந்த அலுவலகத்திற்கு வரும் பாலிசியை அடிப்படையாக வைத்து கணக்கிடப்படும் என்றும் கூறப்படுகிறது. அலுவலக கலாச்சாரத்தை வலுப்படுத்தவும், அனைவரும் ஒத்துழைத்து பணியாற்றவும், கற்றல் வாய்ப்புகளை அதிகரிக்கவும் இந்த நடவடிக்கையை டிசிஎஸ் நிறுவனம் எடுத்துள்ளதாகக் கூறப்படுகிறது.

2024-ஆம் நிதியாண்டில் கடந்த 19 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு முதல் முறையாக 19,249 பணியாளர்கள் டிசிஎஸ் நிறுவனத்தில் குறைந்து காணப்பட்டனர். கடந்த காலாண்டில் ஊழியர்கள் வெளியேறும் விகிதம் 12.1 சதவீதத்திலிருந்து 12.3 சதவீதமாக உயர்ந்துள்ளது.

ஆனால் கடந்த ஆண்டு இதே காலாண்டில் இருந்த 14.9 சதவீதத்தை விட ஊழியர்கள் வெளியேறும் விகிதம் இந்த காலாண்டில் குறைவாகவே உள்ளது. நிதி ரீதியாக பார்க்கும்போது டிசிஎஸ் நிறுவனம் இரண்டாவது காலாண்டில் 11,999 கோடி நிகர லாபத்தை பதிவு செய்துள்ளது. கடந்த ஆண்டோடு ஒப்பிடுகையில் இந்த காலாண்டில் வருவாய் விகிதம் 7.6 சதவீதம் அதிகரித்து ரூ. 64,559 கோடியாக இருக்கிறது.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+