இந்தியாவின் முன்ணி ஐடி நிறுவனங்களில் ஒன்றான டிசிஎஸ் அதன் பணியமர்த்தல் தொடர்பான அறிவிப்பினை வெளியிட்டுள்ளது.
இது குறித்த டிசிஎஸ் நிறுவனத்தின் அறிவிப்பில், பிஇ, பிடெக், எம் எம் டெக், எம்சிஏ, எம் எஸ்சி உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளில் இருந்து, 2022ம் ஆண்டு பாஸ் அவுட் பிரெஷ்ஷர்களை பணியமர்த்துவதாக தெரிவித்துள்ளது.
இதற்கு பதிவு செய்வதற்கு கடைசி நாள் ஏப்ரல் 15 ஆகும். தேர்வு தேதிகள் விரைவில் அறிவிக்கப்படும் என்றும், இதன் முடிவுகள் வெளியான பிறகு நேர்காணல் தேதி அறிவிக்கப்படும் என்றும் தெரிவித்துள்ளது.
கைவிட்ட சீனா.. சர்வதேச நாணய நிதியத்திடம் கையேந்தும் இலங்கை.. பில்லியன் கிடைக்குமா?

எப்படி விண்ணப்பிப்பது?
இதற்காக டிசிஎஸ்-ன் அதிகாரப்பூர்வ தளமான https://nextstep.tcs.com/campus/#/ என்ற தளத்தில் பதிவு செய்து கொள்ளுங்கள்.
மேற்கண்ட டிசிஎஸ் தளத்தினை லாகின் செய்து கொண்டு, அப்ளிகேஷனை பதிவு செய்து கொள்ளுங்கள்.
இதில் உங்களது அப்ளிகேஷன் நிலை குறித்தும் டிராக் செய்து பார்த்துக் கொள்ளலாம்.

தகுதி வாய்ந்த விண்ணப்பதார்கள்?
உயர் கல்வியில் விண்ணப்பதார்கள் குறைந்தபட்சம் அனைத்து பாடங்களிலும் 70% அல்லது 7 CGPA மதிப்பெண்கள் பெற்றிருக்க வேண்டும்.
இதே பத்தாம் வகுப்பு, 12ம் வகுப்பு உள்ளிட்ட படிப்புகளில் 60% அல்லது 6 CGPA மதிப்பெண்கள் பெற்றிருக்க வேண்டும்.
விண்ணப்பதாரர் குறிப்பிட்ட கால இடைவெளியில் படிப்பை முடித்திருக்க வேண்டும். அரியர் உள்ளிட்ட எந்த பிரச்சனையும் கொண்டிருக்க கூடாது.
உங்களது கல்வியில் எந்த இடைவெளியும் இருக்க கூடாது. அப்படி இருந்தால் முன் கூட்டியே கூறுவது அவசியம்.

முழு நேர படிப்புகள் மட்டுமே பரிசீலனை
அதே போல முழு நேர படிப்புகள் மட்டுமே பரிசீலிக்கப்படும், பகுதி நேரம், தொலைதூர கல்வி படிப்புகள் என்பது கணக்கில் எடுத்துக் கொள்ளப்படாது. இதில் வயது தகுதி 18 முதல் 28 வயதுக்குள் இருக்க வேண்டும்.

டிசிஎஸ் ஆஃப் கேம்பஸ் ஹயரிங் 2022
இதேபோல டிசிஎஸ் ஆஃப் கேம்பஸ் ஹயரிங் 2022 என்ற திட்டத்தினையும் அறிவித்துள்ளது. இதில் 2019, 2020 மற்றும் 2021ம் ஆண்டில் முடித்த பொறியியல் மாணவர்கள் விண்ணப்பிக்கலாம் என அறிவித்துள்ளது. இதற்கும் கடைசி தேதி ஏப்ரல் 15 ஆகும்.
இந்த கேம்பஸில் பிஇ, பிடெக், எம் இ, எம் டெக், எம்சிஏ மற்றும் எம் எஸ்சி முடித்திருக்க வேண்டும். இது அங்கீகரிக்கப்பட்ட கல்லூரி அல்லது பல்கலைக் கழகமாக இருக்க வேண்டும். கல்வியில் எந்த இடைவெளியும் இருக்க கூடாது. அதேபோல முழு நேர கல்லூரியில் படித்திருக்க வேண்டும்.