அமெரிக்காவில் பணியாற்ற இந்திய ஐடி நிறுவனங்களுக்கு கிடைக்கும் H-1B விசாக்களின் எண்ணிக்கை யாரும் எதிர்பார்க்காத அளவுக்கு கடுமையாகக் குறைந்துள்ளது. இந்தியாவில் பெரும்பாலும் ஐடி சேவை நிறுவனங்கள் தான் ஹெச்1பி விசாவை பயன்படுத்தி தனது ஊழியர்களை அமெரிக்காவில் பணியில் அமர்த்தி வருகிறது. இதை இந்திய ஐடி சேவை நிறுவனங்களுக்கு முக்கியமான வர்த்தக முறையாக இருந்து வருகிறது.
இந்த நிலையில் 2வது முறையாக ஆட்சியை பிடித்த டிரம்ப், முதல் நாளில் இருந்து ஹெச்1பி விசா மற்றும் குடியேற்ற விதிமுறைகளில் அடுத்தடுத்த மாற்றங்களை கொண்டு வருகிறார். இதனால் ஹெச்1பி விசாவையும், அமெரிக்க சந்தையை அதிகம் நம்பியிருந்த இந்திய ஐடி நிறுவனங்கள் தனது வர்த்தக யுக்தியை மாற்ற துவங்கியது. இதன் விளைவு ஹெச்1பி விசா ஒப்புதல் எண்ணிக்கையில் பெரும் சரிவு.

2025 நிதியாண்டில் இந்தியாவின் மிகப்பெரிய 7 ஐடி நிறுவனங்கள் வெறும் 4,573 புதிய H-1B விசாக்களையே பெற்றுள்ளன. இந்த எண்ணிக்கை 2015ஆம் ஆண்டை காட்டிலும் 70 சதவீதமும், 2024ஆம் ஆண்டை காட்டிலும் 37 சதவீதமும் குறைவு என்று அமெரிக்காவின் நேஷனல் ஃபவுண்டேஷன் ஃபார் அமெரிக்கன் பாலிசி (NFAP) வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளது. இது ஐடி துறையில் பணியாற்றும் இளைஞர்களுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
அமெரிக்காவில் புதிதாக பணியமர்த்த ஊழியர்கள் பட்டியிலில் H-1B விசா மூலம் நியமித்த நிறுவனங்களில் டாப் 5 இடத்தில் இந்திய நிறுவனங்களில் TCS மட்டுமே உள்ளது. அமேசான், மெட்டா, மைக்ரோசாஃப்ட், கூகுள் ஆகியவை முதல் நான்கு இடங்களைப் பிடித்துள்ளது. எப்போதும் இந்திய நிறுவனங்கள் ஆதிக்கம் செலுத்தும் பட்டியல் தற்போது தலைகீழாக மாறியுள்ளது. இது முதல் முறையாக நடந்துள்ளது.
அதேபோல் இப்பட்டியலில் இடம்பெற்ற டாப் 25 இடங்களில் இந்தியாவைச் சேர்ந்த மூன்று நிறுவனங்கள் மட்டுமே உள்ளது அடுத்த அதிர்ச்சி தகவலாகும். இது இந்திய ஐடி நிறுவனங்கள் அமெரிக்க சந்தையின் வர்த்தகத்தை காப்பாற்ற ஹெச்1பி விசாவை அதிகம் நம்பியிருப்பது குறைந்து வருவதை வெளிப்படையாக காட்டுகிறது.
இந்தியாவின் மிகப் பெரிய ஐடி நிறுவனமான TCS 2025-ல் 846 புதிய H-1B விசாக்களைப் பெற்றுள்ளது. இது 2024-ல் 1,452, 2023-ல் 1,174 அளவில் இருந்தது. இதேபோல் புதிய விசாக்களுக்கு நிராகரிப்பு விகிதம் 2 சதவீதமாக உள்ளது.
ஆனால் கவனிக்க வேண்டிய விஷயமாக இருப்பது, அமெரிக்காவில் ஏற்கெனவே பணியாற்றுபவர்களுக்கு விசா நீட்டிப்பில் இருக்கும் நிராகரிப்பு 7 சதவீதமாக உயர்ந்துள்ளது. இது 2024-ல் 4 சதவீதமாக இருந்தது குறிப்பிடத்தக்கது. அதாவது புதிய விசா வழங்குவதிலும் சரிவு, விசா நீட்டிப்பு எண்ணிக்கையிலும் சரிவு ஏற்பட்டு உள்ளது. 2025ஆம் ஆண்டில் டிசிஎஸ் மொத்தமாக 5,293 விசா நீட்டிப்புகளைப் பெற்றுள்ளது.
இன்ஃபோசிஸ், விப்ரோ, எல்டிஐ மைண்ட்டிரீ ஆகியவை விசா நீட்டிப்புக்கு 1 முதல் 2 சதவீதம் வரை நிராகரிப்பு விகிதத்தைக் கொண்டுள்ளன. ஆனால் புதிய விசாக்களுக்கு நிராகரிப்பு விகிதம் அதிகரித்துள்ளது. எச்சிஎல் அமெரிக்கா 6 சதவீதம், எல்டிஐ மைண்ட்டிரீ 5 சதவீதம், கேப்ஜெமினி 4 சதவீதம் நிராகரிப்பு விகிதத்தைக் கொண்டுள்ளன. TCS 2 சதவீதத்துடன் மிகக் குறைந்த நிராகரிப்பு விகிதத்தைக் கொண்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
டிரம்ப் ஆட்சியில் அமெரிக்காவில் H-1B விசா கொள்கைகள் கடுமையாக்கப்பட்டு வருகின்றன. இதனால் இந்திய ஐடி நிறுவனங்களுக்கு விசா கிடைப்பது கடினமாகியுள்ளது. ஒருப்பக்கம் அமெரிக்காவில் செயல்படும் நிறுவனங்கள் அமெரிக்கர்களை அதிகம் பணியில் அமர்த்த முடிவு செய்துள்ளது, மறுபுறம் அமெரிக்க நிறுவனங்கள் அதிகளவில் வெளிநாட்டு ஊழியர்களை பணியில் அமர்த்த முற்படுவதால் இந்திய நிறுவனங்களுக்கும், இந்திய ஊழியக்களுக்கும் வாய்ப்புகள் குறைகிறது.
இந்த நிலை இனி இந்திய ஐடி துறையில் பணியாற்றும் இளைஞர்களுக்கு "அமெரிக்காவில் வேலை என்பது வெறும் கனவாக மாறிவிடுமா என்ற அச்சம் எழுத்துள்ளது .அதே நேரம் இந்தியாவில் ஐடி துறை வளர்ச்சி அதிகரித்து வருவதால், உள்நாட்டிலேயே வேலைவாய்ப்புகள் அதிகரிக்க வாய்ப்பு உள்ளது.
More From GoodReturns

இந்தியர்களே தங்கம் விலையை பத்தின கவலையே இனி வேண்டாம்!! ரெடியானது நாட்டின் பெரிய தங்க சுரங்கம்!!

தங்கம் விலை எங்கே போகும்? கோல்டு ETF-க்கு புதிய அபாயம் – ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை

வேலையை விட போறீங்களா? ஏப்ரல் 1 வரை வெயிட் பண்ணுங்க..!! சட்டமே மாறுது.. ஊழியர்கள் கை ஓங்க போகுது!!

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

மீண்டும் Lockdown..? மீண்டும் வொர்க் ப்ரம் ஹோம்.. சர்வதேச அமைப்பு கொடுத்த வார்னிங்..!!

இந்தியாவுக்கு கிரீன் சிக்னல் கொடுத்த ஈரான்..!! 6 ஆண்டுகளில் இல்லாத முடிவினை எடுத்த மோடி அரசு..!!



Click it and Unblock the Notifications