பொதுவாக பங்கு சந்தை என்றாலே வேண்டாம் ஒதுங்கும் காலம் போய், தற்போது தேடிபிடித்து எது நல்ல பங்கு? எதில் முதலீடு செய்தால் நல்ல லாபம் கிடைக்கும். எந்த துறை சார்ந்த பங்குகளில் முதலீடு செய்யலாம். இப்படி கேள்விகளில் எழுந்து வருகின்றன.
குறிப்பாக மருத்துவ பங்குகள், ஐடி துறை சார்ந்த பங்குகள் என ஒவ்வொருவரும் அவரவர் மன நிலைக்கு ஏற்ப பங்குகளை வாங்கி குவிப்பர்.
இந்த நிலையில் இன்று விப்ரோ, இன்ஃபோசிஸ் நிறுவனங்கள் புதிய பெரிய டீலை பெற்றுள்ளதாக கூறியுள்ள நிலையில், அதன் பங்குகள் இன்று புதிய உச்சத்தினை பெற்றுள்ளன.
உச்சத்தில் ஐடி பங்குகள்
குறிப்பாக நிஃப்டி ஐடி குறியீடும் நல்ல ஏற்றத்தில் காணப்படுகிறது. இதில் குறிப்பாக Mphasis, mindtree பங்குகள் 4% மேலாக ஏற்றம் கண்டுள்ளன. Coforge, லார்சன் & டூப்ரோ இன்ஃபோடெக், டாடா கன்சல்டன்ஸி சர்வீசஸ், ஹெச்சிஎல் டெக்னாலஜிஸ் உள்ளிட்ட பங்குகள் 1.42% - 3.22% வரை ஏற்றம் கண்டுள்ளன. இதுவே டெக் மகேந்திரா, நாக்குரி உள்ளிட்ட பங்குகள் முறையே 0.86% மற்றும் 0.34% என ஏற்றம் கண்டுள்ளன.
இந்த பங்குகளும் புதிய உச்சம்
இதே பிர்லாசாப்ட் மற்றும் பெர்சிஸ்டன்ஸ் சிஸ்டம்ஸ் உள்ளிட்ட பங்குகளும் புதிய உச்சத்தினை தொட்டுள்ளன. விப்ரோ கிட்டதட்ட 5% ஏற்றம் கண்டு 381.65 ரூபாயாக உள்ளது. இந்த நிறுவனம் 700 மில்லியன் டாலர் மதிப்பிலான ஒப்பந்தத்தினை மெட்ரோ ஏஜி நிறுவனத்துடன் போட்டுள்ள நிலையில், இந்த ஏற்றம் கண்டுள்ளது.
இன்ஃபோசிஸ் பங்கும் புதிய உச்சம்
இந்தியாவின் முன்னணி நிறுவனமான இன்ஃபோசிஸ், ஜெர்மனை அடிப்படையாகக் கொண்ட டைம்லர் ஏஜி நிறுவனத்திடம் இருந்து ஓரு மெகா டீலை பெற்றுள்ளது. உலகெங்கிலும் கொரோனாவின் தாக்கம் அரங்கேறி வரும் இந்த நிலையில், ஏற்கனவே இன்ஃபோசிஸ் நிறுவனம் ஒரு பெரிய டீலை வென்றது. இந்த நிலையில் தற்போது இந்த மெகா கூட்டணியானது அமைந்துள்ளது. இது இன்ஃபோசிஸ் நிறுவனத்திற்கு மற்றொரு மிகப்பெரிய வெற்றியாக கருதப்படுகிறது. இதற்கிடையில் தான் இந்த நிறுவனத்தின் பங்கு விலையானது 3% மேலாக ஏற்றம் கண்டுள்ளது.
லாபம் தரலாம்
மோதிலால் ஆஸ்வால் ஆய்வாளர்கள், இன்ஃபோசிஸ் மற்றும் விப்ரோ நிறுவனங்களுக்கு பெரிய வாய்ப்புகள் கிடைத்துள்ளது, இந்த துறையில் உள்ள நேர்மறையான வளர்ச்சியினை சுட்டிக் காட்டுகின்றன. அதிலும் தற்போது புதிய கொரோனா பரவல் காரணமாக இது இன்னும் டிஜிட்டல் வளர்ச்சிக்கு வித்திடும். இதனால் ஐடி நிறுவனங்களுக்கு அவுட்சோர்ஸிங் பணிகள் கிடைக்கலாம். இதனால் இந்திய ஐடி பங்குகள் நீண்டகால நோக்கில் லாபம் தரலாம் என்றும் நிபுணர்கள் கூறியுள்ளனர்.
More From GoodReturns

வேலையை விட போறீங்களா? ஏப்ரல் 1 வரை வெயிட் பண்ணுங்க..!! சட்டமே மாறுது.. ஊழியர்கள் கை ஓங்க போகுது!!

மாருதி சுசூகி கார் வைத்திருப்பவர்களுக்கு ஜாக்பாட்.. வந்தது Quickstop சேவை.. பட்டுபட்டுன்னு வேலை முடியும்..!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

மக்களுக்கு பெரும் ஏமாற்றம்.. மத்திய அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு..!!

SGB: தங்க பத்திரம் வாங்கியுள்ளீர்களா.. முதல்ல இதை படிங்க.. ஏப்ரல் 1 முக்கியமான நாள்..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

UPI -இல் பணம் அனுப்ப புதிய விதிமுறை: ஏப்ரல் 1 முதல் வருகிறது மேஜர் மாற்றம்!! மக்களே உஷார்!!

இந்தியாவுக்கு கிரீன் சிக்னல் கொடுத்த ஈரான்..!! 6 ஆண்டுகளில் இல்லாத முடிவினை எடுத்த மோடி அரசு..!!

அமெரிக்கா–ஈரான் பதற்றம்: முதலீட்டாளர்களுக்கு புதிய “ரிவர்ஸ்” ஸ்ட்ராடஜி சொன்ன ஈரான் தலைவர்..!!

டிரம்புக்கு ஈரான் தந்த ரகசிய பரிசு என்ன தெரியுமா? : அவரே சொல்லிட்டாரு..!!



Click it and Unblock the Notifications