கொரோனா காலத்தில் வர்த்தகப் பாதிப்பே இல்லாமல் தப்பித்த ஒரே துறை ஐடி என்றால் மிகையில்லை, தற்போது நிலக்கரி தட்டுப்பாடு காரணமாக ஏற்பட்டு உள்ள மின்சாரப் பற்றாக்குறை பிரச்சனையில் இருந்தும் தப்பிக்கும் பணியில் நாட்டின் முன்னணி ஐடி சேவை நிறுவனமான டிசிஎஸ் மற்றும் இன்போசிஸ் இறங்கியுள்ளது.
கொரோனா தொற்று 2ஆம் அலை
இந்தியா கொரோனா தொற்று 2ஆம் அலையில் இருந்து வேகமாக மீண்டு வரும் நிலையில் அலுவலகம் முதல் பள்ளிகள் வரையில் அனைத்து துறையும் முழுமையாக இயங்க துவங்கிய நிலையில், 1.5 வருடத்திற்கு அதிகமாக வீட்டில் இருந்து பணியாற்றும் ஐடி நிறுவன ஊழியர்கள் அலுவலகத்திற்கு அழைத்து வரும் வேளையில் மின்சாரப் பற்றாக்குறை ஏற்பட்டு உள்ளது ஐடி நிறுவனங்களுக்குப் பெரும் சுமையாக மாறியுள்ளது.
மின் வெட்டுப் பிரச்சனை
இந்நிலையில் நாட்டின் முன்னணி ஐடி சேவை நிறுவனங்கள் அனைத்தும் மின் வெட்டு ஏற்பட்டால் அதைச் சமாளிக்கத் தேவையான முன்னெச்சரிக்கை பணிகளை எடுத்து வருகிறது.
பவர் பேக்அப்
இது மட்டும் அல்லாமல் வீட்டில் இருந்து பணியாற்றும் ஊழியர்களுக்குப் பவர் பேக்அப் ரெடி செய்துகொள்ளும் படியும் வெளிநாட்டு வாடிக்கையாளர்களுக்கான சேவை எந்த நேரத்திலும் தடைப்படக் கூடாது என்பதையும் முக்கிய அறிவுரையாக அறிவித்துள்ளது. இது ஐடி ஊழியர்கள் மத்தியில் அதிர்ச்சி அளிக்கும் விஷயமாக மட்டும் அல்லாமல் பெரும் சுமையாக மாறியுள்ளது.
பீஹார் மற்றும் ஜார்கண்ட்
இதற்கு முக்கியக் காரணம் தற்போது பீஹார் மற்றும் ஜார்கண்ட் மாநிலத்தில் ஏற்பட்டு உள்ள 14 மணிநேர மின்வெட்டு தான். எவ்வளவு பவர் பேக்அப் உருவாக்கினாலும் ஒரு வீட்டில் அல்லது அலுவலகத்தில் ஒரு நாளுக்கு 14 மணிநேர மின்வெட்டைச் சமாளிக்க முடியாது.
நிலக்கரி தட்டுப்பாடு
அதேவேளையில், இந்திய ஐடி நிறுவனங்களின் வெளிநாட்டு வாடிக்கையாளர்களுக்கும் இந்தியாவில் ஏற்பட்டு உள்ள நிலக்கரி தட்டுப்பாடு மூலம் உருவாகியுள்ள மின் பாற்றக்குறை உலக நாடுகளிலும் முக்கியச் செய்தியாக உருவெடுத்துள்ளது.
இன்போசிஸ் மற்றும் டிசிஎஸ்
இந்த நிலையில் தான் இன்போசிஸ் மற்றும் டிசிஎஸ் நிர்வாகம் தனது உயர் அதிகாரிகளுக்கு மின்சாரப் பிரச்சனையைச் சமாளிக்கத் தேவையான நடவடிக்கையை அனைத்து மட்டத்திலும் எடுக்க உத்தரவிட்டுள்ளது.
மத்திய அரசு
ஆனால் மத்திய அரசு நிலக்கரி தட்டுப்பாடு குறித்து இன்னும் ஒப்புக்கொள்ளாமல் உள்ளது, ஆனால் பஞ்சாப், பீஹார், ஜார்கண்ட் ஆகிய மாநிலத்தில் அதிக மின் வெட்டு உள்ளது.
More From GoodReturns

வேலையை விட போறீங்களா? ஏப்ரல் 1 வரை வெயிட் பண்ணுங்க..!! சட்டமே மாறுது.. ஊழியர்கள் கை ஓங்க போகுது!!

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

தங்கம் விலை எங்கே போகும்? கோல்டு ETF-க்கு புதிய அபாயம் – ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!

தங்கம் விலை அதிரடி சரிவு: மதுரை மக்களுக்கு கிடைத்த பொன்னான வாய்ப்பு!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

டிரம்ப்-இன் ஈரான் போர் நிறுத்த அறிவிப்பு பின்னணியில் விளையாடிய பல்லாயிரம் கோடி பணம்!!

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?



Click it and Unblock the Notifications