அமெரிக்க வங்கிகள் திவால்.. டிசிஎஸ், இன்போசிஸ்-க்கு புதிய பிரச்சனை.. ஐடி ஊழியர்களே உஷார்..!

இந்தியாவின் முன்னணி தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களான டாடா கன்சல்டன்சி சர்வீசஸ் மற்றும் இன்ஃபோசிஸ் ஆகியவை அமெரிக்காவில் உள்ள பிராந்திய வங்கிகளுக்கு (Regional Banks) அதிக வெளிப்பாட்டைக் கொண்டுள்ளன என்று ஜே.பி.மோர்கன் நிறுவனத்தின் ஆய்வாளர்கள் வெள்ளிக்கிழமை வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்தனர்.

அமெரிக்காவில் Regional Bank-க்குள் அதிகப்படியான ஆதிக்கம் செலுத்தும் இதேவேளையில், தற்போது அந்நாட்டில் உருவாகியுள்ள நிதியியல் சந்தை தடுமாற்றத்திற்கு இந்த பிராந்திய வங்கிகள் தான் முக்கிய காரணமாக உள்ளது.

இந்த நிலையில் அமெரிக்காவில் உள்ள பிராந்திய வங்கிகளுக்கு சேவை அளிப்பது மூலம் இந்திய ஐடி சேவை நிறுவனங்கள் தங்களது மொத்த வருவாயில் 2-3 சதவீத பங்கைக் கொண்டுள்ளன என J.P. மோர்கன் நிறுவனம் தெரிவித்துள்ளது.

சிலிக்கான் வேலி வங்கி

சிலிக்கான் வேலி வங்கி

தற்போது திவாலாகியுள்ள சிலிக்கான் வேலி வங்கியில் TCS, Infosys மற்றும் LTIMindtree ஆகியவை 10 - 20 அடிப்படை புள்ளிகள் வருவாய் பங்கு இருக்கலாம் எனவும் ஜேபி மோர்கன் தெரிவித்துள்ளது. அதிலும் முக்கியமாக டாடா குழுமத்தின் டிசிஎஸ் நிறுவனம் சிலிக்கான் வேலி வங்கி வருவாய் பங்கீட்டில் முன்னணியில் உள்ளது என தெரிவித்துள்ளது ஜேபி மோர்கன்.

TCS, Infosys, LTIMindtree

TCS, Infosys, LTIMindtree

இந்த நிலையில் TCS, Infosys மற்றும் LTIMindtree ஆகிய மூன்று நிறுவனங்களும் நான்காவது காலாண்டில் சிலிக்கான் வேலி வங்கி-க்கு வருவாய் பங்கீட்டை கொண்டு காரணமாக தனிப்பட்ட முறையில் ஒதுக்கீடுகளை ஒதுக்க வேண்டியிருக்கும் எனவும் ஜேபி மோர்கன் ஒரு குறிப்பில் தெரிவித்துள்ளது.

அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய ஒன்றியம்

அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய ஒன்றியம்


சிலிக்கான் வேலி வங்கி, சிக்னேச்சர் வங்கியின் சரிவு மற்றும் அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய ஒன்றியம் முழுவதும் பணப்புழக்கம் பற்றிய கவலைகள் ஆகியவை ஒன்றிணைந்து வங்கி தொழில்நுட்பத்திற்கான பட்ஜெட் குறைக்கப்படும். இதனால் இப்பிரிவு வர்த்தகத்தை அதிகம் நம்பியிருக்கும் ஐடி நிறுவனங்கள் அடுத்த சில வருடத்திற்கு புதிய திட்டங்களை பெறும் வாய்ப்பை இழக்கிறது.

இதேபோல் தற்போது கையில் இருக்கும் திட்டங்களும் நிறுத்தி வைக்கப்படவும் வாய்ப்புகள் உள்ளது.

 மேக்ரோ பொருளாதாரச் சூழல்

மேக்ரோ பொருளாதாரச் சூழல்

இந்தியாவின் தகவல் தொழில்நுட்பத் துறையானது அதன் முக்கிய சந்தைகளான ஐரோப்பா மற்றும் அமெரிக்காவில் ஏற்கனவே சவாலான மேக்ரோ பொருளாதாரச் சூழலை எதிர்கொள்கிறது, அங்கு தொழில்நுட்பச் செலவுகள் நீண்ட கால ஒப்பந்தங்களில் முடிவெடுப்பதில் தாமதங்கள் அதிகரிக்கலாம்.

ஐடி துறை நிறுவனங்கள்

ஐடி துறை நிறுவனங்கள்

வங்கி நெருக்கடிகள் மூலம் அடுத்த இரண்டு காலாண்டுகளில் ஐடி துறை நிறுவனங்களின் வருவாய் மாற்றங்களை பாதிக்கும், மேலும் அடுத்த நான்கு காலாண்டுகளில் வருவாயை பாதிக்கக்கூடிய புதிய திட்டங்கள் மீதான முடிவுகள் பின்னுக்குத் தள்ளப்படும் என ஜேபி மோர்கன் தெரிவித்துள்ளது.

BFSI பிரிவு

BFSI பிரிவு

இந்திய தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள் வங்கி, நிதிச் சேவைகள் மற்றும் காப்பீட்டுத் துறை (BFSI) துறையிலிருந்து தங்கள் வருவாயின் பெரும்பகுதியைப் பெறுகின்றன.

கிருதிவாசன், மோஹித் ஜோஷி

கிருதிவாசன், மோஹித் ஜோஷி

இதே காலக்கட்டத்தில் டிசிஎஸ் BFSI பிரிவு தலைவர் கிருதிவாசன் சிஇஓ-வாக உயர்ந்துள்ளார், இன்போசிஸ் BFSI பிரிவு தலைவரான மோஹித் ஜோஷி நிறுவனத்தை விட்டே வெளியேறி டெக் மஹிந்திரா சிஇஓ-வாக உயர்ந்துள்ளார். அப்போ ஊழியர்கள் நிலைமை.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+