இந்தியாவின் மிகப்பெரிய ஐடி நிறுவனங்களில் எப்போதும் கேள்விப்படாத விஷயமெல்லாம் இந்த காலாண்டு முடிவில் கேட்கப்படும் காரணத்தால் அனைத்து தரப்பு மக்களும் அதிர்ச்சியில் உள்ளனர். இந்திய பொருளாதாரத்தில் ஐடி துறை முக்கிய பங்கு வகிக்கும் வேளையில் இத்துறையில் ஏற்படும் பாதிப்பு வங்கித்துறை முதல் நுகர்வோர் சந்தை வரையில் பாதிக்கும்.
இந்த வாரத்தில் இந்தியாவின் மிகப்பெரிய ஐடி நிறுவனங்களான டிசிஎஸ், இன்போசிஸ், ஹெச்சிஎல் தனது செப்டம்பர் காலாண்டு முடிவுகளை வெளியிட்ட நிலையில், 3 நிறுவனங்களும் சந்தை கணிப்புகளை பூர்த்தி செய்யும் வகையில் லாபம், வருவாய் பெற்றுள்ளது.

ஆனால் எப்போதும் ஊழியர்கள் எண்ணிக்கை அதிகரித்து வரும் டிசிஎஸ், இன்போசிஸ், ஹெச்சிஎல் நிறுவனங்களில் முதல் முறையாக ஒரே காலாண்டில் 3 நிறுவனத்திலும் ஊழியர்கள் எண்ணிக்கை குறைந்துள்ளது. ஜூன் காலாண்டை ஒப்பிடுகையில் செப்டம்பர் காலாண்டில் டிசிஎஸ், இன்போசிஸ், ஹெச்சிஎல் நிறுவனங்களில் சுமார் 16,162 ஊழியர்கள் எண்ணிக்கை குறைந்துள்ளது.
செப்டம்பர் காலாண்டில் டிசிஎஸ் நிறுவனத்தில் 6333 ஊழியர்களும், இன்போசிஸ் நிறுவனத்தில் 7530 ஊழியர்களும், ஹெச்சிஎல் நிறுவனத்தில் 2299 ஊழியர்களும் குறைந்துள்ளனர். இதற்கு முக்கிய காரணமாக பார்க்கப்படுவது சர்வதேச பொருளாதாரத்தில் நிலவும் மந்த நிலை தான்.
இந்திய ஐடி சேவை நிறுவனங்களின் பெரும் பகுதி வர்த்தகம் வெளிநாடுகளில் இருந்து பெற்று வருகிறது. டாப் 5 பெரிய ஐடி சேவை நிறுவனங்கள் அனைத்தும் 90 முதல் 95 சதவீதம் அளவிலான வருமானத்தை வெளிநாட்டு சந்தையில் இருந்து பெற்று வருகிறது.
இந்த நிலையில் அமெரிக்கா, பிரிட்டன், ஐரோப்பாவில் பணவீக்கம் அதிகரிப்பு, வேலைவாய்ப்பில் மந்த நிலையில், பொருளாதாரத்தில் மந்தம் என பல பிரச்சனைகள் இருக்கும் காரணத்தால் வெளிநாட்டு நிறுவனங்கள் டெக் சேவைக்காக செலவு செய்யும் அளவீட்டை குறைத்துள்ளது, பல சந்தைகளில் மொத்தமாக நிறுத்தியுள்ளது.
இதை உண்மையாக்கும் வகையில் செப்டம்பர் காலாண்டில் டிசிஎஸ், இன்போசிஸ், ஹெச்சிஎல் நிறுவனங்களின் அமெரிக்க சந்தை வருமானம் 1 சதவீதம் அளவில் தான் வளர்ச்சி அடைந்துள்ளது. அமெரிக்க அரசு எப்படியாது ஷட்டவுன் பிரச்சனையில் இருந்து தப்பிக்க வேண்டும் என்பதில் தீவிரமாக உள்ளது.


Click it and Unblock the Notifications