இந்திய ஐடி துறை 2025 ஆண்டு துவக்கத்தில் இருந்து தொடர்ந்து பெரும் சவால்களை எதிர்கொண்டு வருகிறது. ஒருப்பக்கம் ஏஐ, புதிய தொழில்நுட்பம் என புதிய வர்த்தகதத்திற்காக போராடி வரும் இதேவேளையில் போதுமான திறன் இல்லாமல் நிறுவனத்தில் குவிந்திருக்கும் ஊழியர்களை எப்படி கையாளுவது என புரியமால் மாட்டிக்கொண்டு விழித்து வருகிறது.
இப்படியிருக்கையில் பங்குச்சந்தையில் தொடர் இந்திய ஐடி சேவை நிறுவனங்களின் பங்குகள் சரிந்து வருகிறது. இதற்கு முதலும் முக்கியமான காரணமாக இருப்பது வெளிநாட்டு நிறுவன முதலீட்டாளர்கள் (FII) என்றால் மிகையில்லை. இந்திய பங்குச்சந்தையில் FII ஆதிக்கம் குறைந்து உள்நாட்டு முதலீட்டாளர்களின் ஆதிக்கம் அதிகரித்து இருந்தாலும் FII முதலீடுகள் புதிய முதலீடுகளை ஈர்க்க முக்கியமான காரணியாக உள்ளது.

இந்த நிலையில் FII முதலீட்டாளர்கள் 2025 ஆம் ஆண்டில் இதுவரையில் இந்திய ஐடி நிறுவனங்களில் மட்டும் சுமார் 50,000 கோடி ரூபாய் மதிப்பிலான ஐடி பங்குகளை விற்றுள்ளதால், நிஃப்டி ஐடி இண்டெக்ஸ் 25% சரிந்து, இந்திய பங்குச்சந்தைசந்தையின் மோசமான செயல்பாடும் குறியீடாக மாறியுள்ளது.
ஜூலை மாதம் வரையில் இந்திய சந்தைகளிலிருந்து FII-கள் சுமார் 95,600 கோடி ரூபாய் முதலீட்டை வெளியேற்றியுள்ளனர், இதில் பாதிக்கும் மேல் ஐடி துறையிலிருந்து வந்துள்ளது கூடுதல் அதிர்ச்சி தகவலாக உள்ளது. இந்த வெளிநாட்டு நிறுவன முதலீட்டாளர்கள் கடந்த மாதம் முதல் ஐடி துறை நிறுவன பங்குகளை அதிகளவில் விற்பனை செய்து வருகின்றனர்.
ஜூலை மாதம் சுமார் 20,000 கோடி ரூபாய் அளவிலான பங்குகள் விற்கப்பட்டன, இதற்கு 2026ஆம் நிதியாண்டின் முதல் காலாண்டு முடிவுகள் ஏமாற்றமளிக்கும் விதமாக இருந்த காரணத்தாலும், அதிகளவிலான பணிநீக்கம், நிர்வாக மறுசீரமைப்பு நடவடிக்கைகளை ஐடி நிறுவனங்கள் மேற்கொண்டது முக்கிய காரணமாக உள்ளது.
இந்திய பங்குச்சந்தையில் ஒரு காலத்தில் உலகளாவிய முதலீட்டாளர்களின் விருப்பமான துறையாக இருந்த ஐடி துறை தற்போது பெரும் அழுத்தத்தில் உள்ளது. கடந்த ஆண்டுகளில் ஐடி பங்குகள் உயர்ந்த வளர்ச்சியை கண்டிருந்தாலும், தற்போதைய சூழல் அவற்றின் மதிப்பு பெரிய அளவில் குறைத்துள்ளது.
இந்த சரிவுக்கு அடிப்படை காரணமாக மாறி வரும் தொழில்நுட்பம், அமெரிக்காவின் வரி, உலகளாவிய வாடிக்கையாளர்களின் தொழில்நுட்ப பட்ஜெட் மற்றும் செலவு செய்யும் வாய்ப்புகள் குறைந்துள்ளது ஆகியவை முக்கியமான காரணங்களாக உள்ளது. FIIகளின் வெளியேற்றம், இந்திய சந்தையின் ஒட்டுமொத்த நம்பிக்கையை குறைத்து, மற்ற துறைகளுக்கும் அழுத்தத்தை ஏற்படுத்தியுள்ளது.
இந்திய ஐடி துறையின் முன்னணி நிறுவனமான டாடா கன்சல்டன்சி சர்வீசஸ் 12,000 ஊழியர்களை வேலையிலிருந்து நீக்கியதால் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளது. டிசிஎஸ் பங்குகள் 2025ல் மட்டும் இதுவரையில் 26.28 சதவீதம் சரிந்துள்ளது. அதன் 52 வார உச்சத்தில் இருந்து சுமார் 40.46 சதவீதம் சரிந்துள்ளது.
இதேபோல், இன்ஃபோசிஸ் அதன் உச்ச விலையிலிருந்து 29% சரிந்துள்ளது, HCL டெக்னாலஜீஸ் 27% சரிந்துள்ளது, விப்ரோ மற்றும் LTIMindtree ஆகியவை 26% சரிந்துள்ளது. மேலும் மிட் லெவல் ஐடி சேவை நிறுவனங்களான ஓரக்கிள் 36% சரிவை கண்டுள்ளது, பெர்சிஸ்டென்ட் சிஸ்டம்ஸ் 25% சரிந்துள்ளது, கோஃபோர்ஜ் 20% குறைந்துள்ளது.
More From GoodReturns

ஆனந்த் ஸ்ரீனிவாசன்: படிச்சு படிச்சு சொன்னேன்.. யாரும் கேட்ல 'Big Drop'.. வெள்ளி அதோ கதி..!!

ஈரான் போர்: கதிகலங்கி நிற்கும் தைவான்.. 11 நாட்கள் கெடு..!!

கிடுகிடுவென சரியும் தங்கம், வெள்ளி விலை! இது வாங்குவதற்கு சரியான நேரமா? நிபுணர்களின் அதிரடி ஆலோசனை!

52 வார சரிவில் HDFC வங்கி பங்குகள்.. ஓரேயொரு நபர் செய்த வேலையால்.. ரூ.1 லட்சம் கோடி காலி..!!!

என்னப்பா புது புது பிரச்சனையா கிளம்புது.. ஈரான் போரால் 'இந்த' பொருட்கள் விலை தாறுமாற உயரபோகுது..!!

இந்தியர்கள் உடனே வெளியேறலாம்; நாங்களே டிக்கெட் போட்டு தரோம்: அமெரிக்க அரசின் அட்டூழியம்

ரேஷன் அட்டை வைத்திருப்பவர்களுக்கு முக்கிய அப்டேட்.. 3 மாதத்திற்கான பொருள் ஒரே நேரத்தில்.. மத்திய அரசின் முடிவு

ஈரான் போரில் டிரம்ப் போடும் கணக்கே வேற..! குறி வச்சது கமேனிக்கு இல்ல..! வெளிவரும் உண்மை..!

தங்கம் விலை ரூ.17,000 சரிவு: ஈரான் போரால் தங்க சந்தையில் ஏற்பட்ட மாற்றம்..! இந்த வாரமும் விலை குறையுமா?

டிரம்ப் அடித்த அந்தர் பல்டி.. ஈரான் மீதான தடை நீக்கம்.. எல்லாம் தலைகீழாக மாறுதே..!!

3 வாரத்தில் சின்னாபின்னமான துபாய் ரியல் எஸ்டேட்.. தள்ளுபடி விற்பனை ஆரம்பம்.. இந்த ஏரியாவில் தடாலடி விலை சரிவு



Click it and Unblock the Notifications