ரத்த வெள்ளத்தில் இந்திய ஐடி நிறுவன பங்குகள்.. அமெரிக்காவில் விழுந்த அடி, பெங்களூர், சென்னையில் எதிரொலி..!!

இந்திய ஐடி நிறுவனங்களின் பங்குகள் பிப்ரவரி 4 அன்று கடுமையான சரிவை சந்தித்தன. அமெரிக்க AI நிறுவனமான அன்த்ரோபிக் தனது கிளவுட் AI சாட்பாட்டுக்கு புதிய சட்ட ப்ளக்கின்-களை அறிமுகப்படுத்தியதால், சாஃப்ட்வேர் மற்றும் SAAS நிறுவனங்களுக்கான நெருக்கடி அதிகரிக்கும் என்ற அச்சம் எழுந்தது. இதனால் நேற்றைய அமெரிக்க வால் ஸ்ட்ரீட் சந்தையில் டெக் பங்குகள் சரிந்ததால் இன்று இந்திய ஐடி பங்குகளும் பெரும் சரிவை பதிவு செய்தது.

இன்றைய வர்த்தகத்தில் நிஃப்டி ஐடி குறியீடு 7 சதவீதத்திற்கு மேல் சரிந்தது. இது மார்ச் 2020 கொரோனா காலத்திற்கு பிறகு ஐடி பங்குகள் எதிர்கொண்ட மிகப்பெரிய ஒரு நாள் சரிவாகும். சாட்ஜிபிடி அறிமுகம் செய்யும் போது கூட ஐடி பங்குகள் இந்த அளவுக்கான சரிவை பதிவு செய்யவில்லை.

ரத்த வெள்ளத்தில் இந்திய ஐடி நிறுவனங்கள்.. அமெரிக்காவில் விழுந்த அடி, பெங்களூர், சென்னையில் எதிரொலி!

இன்றைய வர்த்தகத்தில் இன்போசிஸ் மற்றும் எல்டிஐ மைண்ட்ட்ரீ பங்குகள் தலா 8 சதவீதத்திற்கு மேல் சரிந்தன. கோஃபோர்ஜ் 8 சதவீதம், பெர்சிஸ்டென்ட் சிஸ்டம்ஸ், எம்ஃபேசிஸ், டாடா கன்சல்டன்சி சர்வீசஸ் (TCS) ஆகியவை தலா 7 சதவீதம் சரிந்தன. டெக் மஹிந்திரா மற்றும் எச்சிஎல் டெக்னாலஜிஸ் 6 சதவீதம், விப்ரோ 5 சதவீதம் இழந்தன. இதனால் இந்தியாவின் முன்னணி ஐடி நிறுவனங்களின் மொத்த சந்தை மதிப்பு சுமார்வ ரூ.2 லட்சம் கோடி குறைந்தது.

ஜியோஜித் இன்வெஸ்ட்மென்ட்ஸ் தலைமை முதலீட்டு ஆய்வாளர் வி.கே. விஜயகுமார் கூறுகையில், அமெரிக்கா-இந்திய வர்த்தக ஒப்பந்தத்தால் ஏற்பட்ட பங்கு உயர்வு தொடர்வது கடினம். அமெரிக்க டெக் பங்குகள் சரிவால் இந்திய ஐடி குறியீடு இன்று மொத்த பங்குச்சந்தையை சரிவுக்கு கொண்டு செல்லப்பட்டு உள்ளது. ஐடி பங்குகள் மதிப்பீடு அதிகமாக உள்ளதால் நீண்டகால உயர்வுக்கு அடிப்படை ஆதரவு இல்லை என்பதால் சரிவை கட்டுப்படுத்த முடியவில்லை என விளக்கினார்.

அன்த்ரோபிக் கடந்த வாரம் கிளவுட் கோவொர்க் AIக்கு சட்டம், விற்பனை, மார்க்கெட்டிங், தரவு பகுப்பாய்வு உள்ளிட்ட பணிகளை தானாக செய்யும் 11 ப்ளகின்களை வெளியிட்டது. இது ஐடி சேவை நிறுவனங்களின் நீண்ட கால வர்த்தக மாடலை அசைத்து பாத்துள்ளது என்று சந்தை ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.

இன்று நிஃப்டி ஐடி சரிவு என்பது குறுகிய கால பிரச்சனை அல்ல, ஐடித்துறையின் கட்டமைப்பில் ஏற்றபடும் மாற்றம் என்று நிபுணர்கள் கூறுகின்றனர். AI தொழில்நுட்பம் அதிகளவில் தொழிலாளர்களை சார்ந்து இருப்பதை குறைத்து வருகிறது. இதனால் ஐடி வேலைவாய்ப்புகளும் மாற்றி வருகிறது.

பெரிய ஐடி நிறுவனங்கள் பல ஆண்டுகளாக செய்ய வேண்டி பணிகளை இத்தகைய ஏஐ ப்ளகின்கள் மற்றும் ஏஐ சேவைகள் மூலம் ஒரு சில வாரங்களில் முடிக்கிறது. இது நேரம், செலவு, தொழிலாளர் தேவையை என அனைத்தையும் குறைக்கிறது.

இதனால் சேவை அடிப்படையிலான ஐடி துறையின் வர்த்தக மாடலுக்கு பெரும் ஆபாத்தாக மாறுகிறது. இந்த மாற்றத்தால் தற்போது ஐடி நிறுவனங்களின் லாப அளவுகள் குறைக்கிறது, பில்லபிள் நேரத்தை குறைக்கிறது, தொடக்க நிலை வேலைகளை குறைக்கிறது.

ஆனால் ஏஐ தொழில்நுட்பத்திற்கு ஒரு நல்ல பக்கமும் உள்ளது. பொருளாதார நிச்சயமின்மை அதிகரிக்கும் போது, நிதி நெருக்கடியால் தவிக்கும் நிறுவனங்கள் AI தொழில்நுட்பத்தை வேகமாகவும், அதிமாகவும் பயன்படுத்த துவங்கியுள்ளது. இதனால் செலவு குறைப்பு நடப்பது மட்டும் அல்லாமல் எதிர்பார்க்கக்கூடிய பலன்களும், திறன்களும் ஒரு நிறுவனத்திற்கு கிடைக்கிறது. இதனால் நிறுவனத்தை மூடும் அளவுக்கு செல்ல வேண்டிய அவசியம் இல்லை.

மேலும் ஏஐ மூலம் நிறுவனத்தில் நீண்டகால இயக்க திறனை உருவாக்க முடியும் என்பதால் நிறுவனங்கள் AI-யில் அதிகளவில் முதலீடு செய்கின்றன. AI தளங்கள் இனி வரும் காலத்தில் ஆப்ஷனாக இருக்கப்போவது இல்லை, அவசியமாகிறது.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+