உலகமே எதிர்பார்த்துக் காத்திருந்த அமெரிக்க அதிபர் தேர்தல் முடிவுகளில் டொனால்டு டிரம்ப் மாபெரும் வெற்றியைப் பதிவு செய்து 2வது முறையாக அதிபர் தேர்தலில் வெற்றிபெற்றுள்ளார். டிரம்ப்-ன் வருகை பல மாற்றங்களை அமெரிக்காவிலும் உலகளவிலும் கொண்டு வரும் என எதிர்பார்க்கப்படும் வேளையில் முதல் அதிரடி இந்தியா ஐடி துறையில் எதிரொலித்துள்ளது.
அமெரிக்கத் தேர்தலில் டொனால்டு டிரம்ப் வெற்றிபெற்றுள்ளது மூலம் இந்தியப் பங்குச்சந்தையில் முன்னணி ஐடி நிறுவனங்களான டிசிஎஸ், இன்போசிஸ், ஹெச்சிஎல், எல்டிஐ மையின்டுட்ரீ போன்ற நிறுவனங்களின் பங்குகள் 4 சதவீதத்திற்கும் அதிகமாக வளர்ச்சி அடைந்துள்ளது. இதேபோல் சில முன்னணி ஐடி மிட் சைஸ் ஐடி நிறுவன பங்குகளும் அதிகளவிலான வளர்ச்சியைப் பதிவு செய்துள்ளது.

அமெரிக்க அதிபர் தேர்தலில் டொனால்டு டிரம்ப் வெற்றி மூலம் இந்திய ஐடி நிறுவனப் பங்குகள் அதிரடியாக உயர என்ன காரணம்..? முதலும் முக்கியமாக இருப்பது டாலர் மதிப்பு உயர்வு. டொனால்டு டிரம்ப் ஆட்சிக்கு வருவது உறுதியான நொடியில் இருந்து டாலர் மதிப்பு தாறுமாறாக உயர்ந்து ரூபாய் மதிப்பு தொடர்ந்து சரிந்து வரலாற்றுச் சரிவைப் பதிவு செய்து வருகிறது.
டாலர் மதிப்பு உயர்வு இந்திய ஐடி நிறுவனங்களுக்கு நேரடியாகப் பலன் அளிக்கிறது, ஏனெனில் இந்திய ஐடி நிறுவனங்கள் அதிகளவிலான வர்த்தகத்தை அமெரிக்காவில் வைத்திருக்கும் வேளையில் டாலர் மதிப்பு உயரும் போது இதன் வருவாய், லாப அளவீடுகளும் உயரும்.
இந்திய ஐடி நிறுவனங்கள் அமெரிக்காவில் அதிகளவில் வர்த்தகம் செய்தாலும், இந்தியாவில் தான் அதிகப்படியான செலவுகளை செய்து வருகிறது. இதனால் லாபத்தின் மார்ஜின் பெரிய அளவில் அதிகரிக்க வா
டிரம்ப் தலைமையிலான ஆட்சியில் எடுக்கப்படும் கொள்கை ரீதியான முடிவுகள், அமெரிக்க டாலர் மதிப்பை தொடர்ந்து வலுப்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுவதால், ஐடி நிறுவனங்களுக்குச் சாதகமாக இருப்பதாக நிபுணர்கள் கூறுகின்றனர்.
ஆனால் பிரபல ப்ரோகரேஜ் நிறுவனமான ஜேஎம் பைனான்சியல், டிரம்ப் ஆட்சியின் மூலம் இந்திய ஐடி சர்வீசஸ் நிறுவனங்களுக்கு மந்தமான வளர்ச்சியை மட்டுமே அளிக்கும் என நம்புவதாகத் தெரிவித்துள்ளது.
குறிப்பாக விசா தொடர்பாக அமெரிக்க அதிபராகப் பதவியேற்கும் டொனால்டு டிரம்ப் எடுக்கும் முடிவுகள் இந்திய ஐடி நிறுவனங்களின் எதிர்காலத்தைத் தீர்மானிக்கும் விஷயமாக இருக்கும் எனக் கூறப்படுகிறது.
More From GoodReturns

ஒட்டுமொத்த அமெரிக்காவுக்கும் ஷாக் கொடுத்த எலான் மஸ்க்.. டிரம்ப்-க்கு சவாலா..? யாரு சாமி நீ..?!

வேலையை விட போறீங்களா? ஏப்ரல் 1 வரை வெயிட் பண்ணுங்க..!! சட்டமே மாறுது.. ஊழியர்கள் கை ஓங்க போகுது!!

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

தங்கம் விலை எங்கே போகும்? கோல்டு ETF-க்கு புதிய அபாயம் – ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

பொசுக்குன்னு தங்கம் விலை எகிறிவிட்டதே.. மொத்தமும் காலி.. இதென்ன மாயம்.. !

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!

தங்கம் விலை: மதுரையில் அதிரடி சரிவு! மார்ச் 23, 2026 நிலவரம் மற்றும் எதிர்கால கணிப்புகள் வெளியானது

தங்கம் விலை அதிரடி சரிவு: மதுரை மக்களுக்கு கிடைத்த பொன்னான வாய்ப்பு!!

எங்க கிட்ட பேச்சே கிடையாது..!! டிரம்ப் மூக்கை உடைக்கும் அளவுக்கு பதில் கொடுத்த ஈரான்..!



Click it and Unblock the Notifications