இந்தியாவில் கொரோனா பாதிப்பு மிகவும் மோசமான நிலையில் இருந்த போது முதலாவதாக முன்வந்து ஊழியர்களுக்கு வீட்டில் இருந்து பணியாற்ற அனுமதி அளித்தது ஐடி துறை நிறுவனங்கள் தான்.
இந்நிலையில் ஒமிக்ரான் வைரஸ் பரவி வரும் வேளையில் ஊழியர்களைப் பாதுகாக்கும் வண்ணம் முக்கிய முடிவை நாட்டின் முன்னணி ஐடி நிறுவனங்களான டிசிஎஸ், இன்போசிஸ், ஹெச்சிஎல் எடுத்துள்ளது.
ஐடி துறை
பொதுவாக ஐடித் துறையில் அவ்வப்போது ஊழியர்கள் வீட்டில் இருந்து பணியாற்றுவது இயல்பான ஒன்று, ஆனால் ஒட்டுமொத்த ஊழியர்களும் வீட்டில் இருந்து பணியாற்றினால் அதன் மூலம் ஏற்படும் வர்த்தக பாதிப்பு, கொரோனா தொற்றால் ஊழியர்கள் உடல் நிலை பாதிப்பு, வருமான பாதிப்பு என அனைத்தையும் ரிஸ்க் எடுத்து வரலாற்றிலேயே முதல் முறையாக 100 சதவீத ஊழியர்களுக்கும் வொர்க் ப்ரம் ஹோம் கொடுத்தது ஐடி நிறுவனங்கள்.
கொரோனா தொற்று
இந்தியாவில் கொரோனா தொற்று எண்ணிக்கை குறைந்துள்ளதாலும், பெரும்பாலான ஊழியர்களுக்கு வேக்சின் பாதுகாப்புக் கொடுக்கப்பட்ட நிலையில் கடந்த 3 மாதங்களாக ஐடி நிறுவனங்கள் தங்களது ஊழியர்களைப் பகுதி பகுதியாக அலுவலகத்திற்கு அழைத்து வரும் நிலையில் ஒமிக்ரான் பாதிப்பு நாட்டின் பல மாநிலத்தில் அடுத்தடுத்து கண்டுபிடிக்கப்பட்டு வருகிறது.
டாடா கன்சல்டன்சி சர்வீசஸ்
இந்தியாவின் மிகப்பெரிய ஐடி சேவை நிறுவனமாக இருக்கும் டாடா கன்சல்டன்சி சர்வீசஸ் நிறுவனம் ஏற்கனவே 90 சதவீத ஊழியர்களை அலுவலகத்திற்கு அழைத்துள்ள நிலையில், 10 சதவீத அசோசியேட் ஊழியர்கள் மட்டுமே வீட்டில் இருந்து பணியாற்றி வருகின்றனர்.
சுழற்சி முறை
தற்போது ஒமிக்ரான் வைரஸ் பரவி உள்ள காரணத்தால் திட்டமிட்டு அளவாக ஊழியர்களை அழைக்கவும், அல்லது ஏற்கனவே அலுவலகத்தில் இருந்து பணியாற்றும் ஊழியர்களுக்குத் தற்காலிகமாக அல்லது சுழற்சி முறையில் வீட்டில் இருந்து பணியாற்ற அனுமதி அளிக்கப்படும் என முடிவு எடுத்துள்ளது.
இன்போசிஸ்
இந்திய மென்பொருள் ஏற்றுமதி நிறுவனமான டிசிஎஸ் நிறுவனத்தின் சக போட்டி நிறுவனமான இன்போசிஸ் தனது பெங்களூர் அலுவலகத்தில் புதிதாகப் பரவி வரும் ஒமிக்ரான் வைரஸ் பாதிப்பைக் கருத்தில் கொண்டு எச்சரிக்கையான அணுகுமுறையை எடுக்க உள்ளதாக தெரிவித்துள்ளது. இதன் மூலம் இன்போசிஸ் ஊழியர்கள் அடுத்தச் சில மாத காலம் வீட்டில் இருந்து பணியாற்றும் வாய்ப்பை பெறுவார்கள்.
ஹெச்சிஎல் டெக்னாலஜிஸ்
சமீபத்தில் அமெரிக்காவில் ஹெச்1பி விசா ஊழியர்களுக்கு மிகவும் குறைவான சம்பளம் கொடுப்பதாகக் குற்றம்சாட்டப்பட்ட ஹெச்சிஎல் புதிதாகப் பரவி வரும் கோவிட் 19 வேரியன்ட் வைரஸான ஒமிக்ரான் பரவலை கண்காணித்து அதன் பின் ஊழியர்களை அலுவலகத்திற்கு அழைப்பது குறித்து முடிவு செய்வதாக அறிவித்துள்ளது.
10 சதவீத ஊழியர்கள்
தற்போது ஹெச்சிஎல் டெக் அலுவலகத்தில் 10 சதவீத ஊழியர்கள் மட்டுமே பணியாற்றி வரும் நிலையில் மீதமுள்ள ஊழியர்கள் வீட்டில் இருந்து பணியாற்றி வருகிறார்கள். இந்தச் சூழ்நிலையில் ஹெச்சிஎல் நிறுவனம் அடுத்தச் சில வாரங்களுக்கு அல்லது மாதங்களுக்குத் தனது ஹைபிரிட் மாடலை தொடர்வதாக அறிவித்துள்ளது.
More From GoodReturns

வேலையை விட போறீங்களா? ஏப்ரல் 1 வரை வெயிட் பண்ணுங்க..!! சட்டமே மாறுது.. ஊழியர்கள் கை ஓங்க போகுது!!

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

தங்கம் விலை எங்கே போகும்? கோல்டு ETF-க்கு புதிய அபாயம் – ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!

தங்கம் விலை அதிரடி சரிவு: மதுரை மக்களுக்கு கிடைத்த பொன்னான வாய்ப்பு!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

டிரம்ப்-இன் ஈரான் போர் நிறுத்த அறிவிப்பு பின்னணியில் விளையாடிய பல்லாயிரம் கோடி பணம்!!

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?



Click it and Unblock the Notifications