இந்திய ஐடி துறையின் சூப்பர்ஸ்டாராக விளங்கும் TCS, இன்போசிஸ், HCL, விப்ரோ தனது காலாண்டு முடிவுகளை வெளியிட்டதில் இருந்து ஒரு முக்கியமான விஷயம் தெரிய வந்துள்ளது. அதுவும் குறிப்பாக ஐடி ஊழியர்கள் தொடர்பான ஒரு தகவல் தெரிய வந்துள்ளது.
நடப்பு நிதியாண்டில் TCS, இன்போசிஸ், HCL, விப்ரோ ஆகிய நிறுவனங்களில் ஐடி ஊழியர்கள் அதிகளவில் வெளியேறியும், ஊழியர்கள் எண்ணிக்கை குறைந்தும், பிரஷ்ஷர்களுக்கு வாய்ப்பு அளிக்காமலும் இருந்தது. ஆனால் அடுத்த நிதியாண்டில் (2026) குறிப்பிடத்தக்க அளவில் பணியாளர் சேர்க்கைக்கு தயாராகி வருகிறது என்ற முக்கியமான தகவல் தற்போது தெரிய வந்துள்ளது.

ஐடி சேவைக்கான தேவை மேற்கத்திய நாடுகளில் குறிப்பாக அமெரிக்க சந்தையிலும், ஐரோப்பிய சந்தையிலும் மீண்டும் அதிகரித்து வருவதும், பொருளாதார வளர்ச்சி உயரும் பாதையில் இருப்பதே இந்த முடிவுக்கு காரணமாகும்.
TCS: நாட்டின் நான்கு முன்னணி ஐடி நிறுவனங்களின் சமீபத்திய காலாண்டு முடிவுகளின் படி ஆய்வு செய்யும் போது, நடப்பு நிதியாண்டின் மூன்றாவது காலாண்டில் டிசிஎஸ்-ன் பணியாளர் எண்ணிக்கை சிறிதளவு குறைந்தது. டிசம்பர் 31 ஆம் தேதி நிலவரப்படி 607,354 பணியாளர்களைக் கொண்டிருந்த டிசிஎஸ்-ன் அட்ரிஷன் விகிதம் 13 சதவீதமாக இருந்தது. இருப்பினும், நிறுவனம் 2025ஆம் ஆண்டு கல்லூரிகளில் இருந்து 40,000 பிரஷ்ஷர்களை பணியமர்த்த திட்டமிட்டுள்ளது டிசிஎஸ்.
Infosys: இன்ஃபோசிஸ் இதே டிசம்பர் காலாண்டில் சிறிய அளவில் பணியாளர்களை சேர்த்து, அதன் மொத்த பணியாளர் எண்ணிக்கை 3,17,718-லிருந்து 3,23,379 ஆக உயர்ந்தது. இதேபோல் இன்போசிஸ்-ன் அட்ரிஷன் விகிதம் 13.7 சதவீதமாக அதிகரித்தது. 2025 ஆம் ஆண்டில் 15,000 முதல் 20,000 வரை பிரஷ்ஷர்களை பணியமர்த்த திட்டமிட்டுள்ளது.
HCL Tech: எச்.சி.எல்.டெக் 3வது காலாண்டில் அட்ரிஷன் விகிதம் 13.2 சதவீதமாக அதிகரித்தது. இந்த காலாண்டில் 2,134 பணியாளர்கள் வெளியேறியுள்ளனர். கடந்த ஆண்டு இதே காலத்தில் 2,24,756 பேராக இருந்த மொத்த பணியாளர் எண்ணிக்கை டிசம்பர் 2024 இறுதியில் 2,20,755 ஆக இருந்தது. இந்நிறுவனம் தனது புதிய பணியாளர் சேர்க்கை இலக்கை தற்போதைய நிதியாண்டில் 10,000-க்கும் மேற்பட்டதாக இருந்து 7,000 ஆக குறைத்துள்ளது.
Wipro: விப்ரோ நடப்பு நிதியாண்டின் டிசம்பர் காலாண்டில் பணியாளர் எண்ணிக்கையில் சிறிய அளவில் சரிவை கண்டது. இருப்பினும், அடுத்த நிதியாண்டு 2025-26-ல் 10,000 முதல் 12,000 வரை பிரஷ்ஷர்களை பணியமர்த்த திட்டமிட்டுள்ளது.
இதன் மூலம் இந்த ஆண்டில் முன்னணி இந்திய ஐடி நிறுவனங்களில் சுமார் 70,000-க்கும் மேற்பட்ட பிரஷ்ஷர்கள் சேர்க்கப்படுவார்கள் என்று இந்த ஆய்வின் மூலம் தெரிய வந்துள்ளது. பல வருடங்களுக்கு பின்பு ஐடி நிறுவனங்கள் அதிக எண்ணிக்கையில் ஊழியர்களை சேர்த்துள்ளது.
More From GoodReturns

ஈரான் போர்: கதிகலங்கி நிற்கும் தைவான்.. 11 நாட்கள் கெடு..!!

52 வார சரிவில் HDFC வங்கி பங்குகள்.. ஓரேயொரு நபர் செய்த வேலையால்.. ரூ.1 லட்சம் கோடி காலி..!!!

என்னப்பா புது புது பிரச்சனையா கிளம்புது.. ஈரான் போரால் 'இந்த' பொருட்கள் விலை தாறுமாற உயரபோகுது..!!

இந்தியர்கள் உடனே வெளியேறலாம்; நாங்களே டிக்கெட் போட்டு தரோம்: அமெரிக்க அரசின் அட்டூழியம்

ஈரான் போரில் டிரம்ப் போடும் கணக்கே வேற..! குறி வச்சது கமேனிக்கு இல்ல..! வெளிவரும் உண்மை..!

டிரம்ப் அடித்த அந்தர் பல்டி.. ஈரான் மீதான தடை நீக்கம்.. எல்லாம் தலைகீழாக மாறுதே..!!

இந்திய மக்களை துரத்தும் புதிய பிரச்சனை.. ஈரான் போர் மூலம் உங்க பர்ஸ்-க்கு வேட்டு..!!

தங்கம் விலை 7 மடங்கு! வெள்ளி விலை 2.5 மடங்கு அதிகரிக்க வாய்ப்பு! ராபர்ட் கியோசாகி அதிரடி கணிப்பு!

சென்செக்ஸ், நிஃப்டியை புரட்டிப்போட்ட 90 நிமிடம்.. என்ன நடந்தது..? முழுக்க முழுக்க மேஜிக்

40 ஆண்டுகள், 15 நெருக்கடி.. தட்டி தூக்கிய பங்கு சந்தை.. முதலீட்டாளர்களுக்கு முக்கிய பாடம்..!

13 ஆண்டுகளாக வேலை பார்த்தவரை ஒரே நொடியில் தூக்கி எறிந்த ஐடி நிறுவனம்: கண்ணீரில் சென்னை டெக்கி



Click it and Unblock the Notifications