இந்திய பொருளாதாரத்தில் முக்கிய பங்கு வகிக்கும் ஐடி துறை தொடர்ந்து பல பிரச்சனைகளை எதிர்கொண்டு வரும் வேளையில் புதிதாக பட்டம் பெற்றவர்கள் இத்துறைக்குள் நுழைய முடியாத மந்தமான வேலைவாய்ப்பு சூழ்நிலை உருவாகியிருப்பது மட்டும் அல்லாமல் இத்துறையில் இருக்கும் பல லட்சம் ஊழியர்கள் மிகவும் குறைவான சம்பள உயர்வையும், பல மாதங்களுக்கான சம்பள உயர்வு அரியர் தொகையை இழந்து வரும் நிலையில் அதிர்ச்சி அளிக்கும் தகவல் வெளியாகியுள்ளது.

இந்தியாவின் டாப் 10 ஐடி சேவை நிறுவனங்களில் சுமார் 20 லட்சம் பேர் பணியாற்றி வருகின்றனர், இதில் 9 நிறுவனங்களில் ஐடி ஊழியர்களின் எண்ணிக்கை செப்டம்பர் காலாண்டு முடிவில் குறைந்துள்ளது. இதுப்போன்ற சம்பவம் கடந்த 25 ஆண்டுகளில் நடக்காத ஒன்று எனவும் இந்த நிலை தொடர்ந்தால் மோசமான விளைவுகள் ஏற்படும் என கணிக்கப்பட்டு உள்ளது.
2023 ஆம் ஆண்டு துவக்கத்தில் அமெரிக்காவில் வங்கிகள் திவாலானதில் இருந்து இந்திய ஐடி சேவை நிறுவனங்கள் அதிகப்படியான பிரச்சனையை எதிர்கொள்ள துவங்கியது, ரஷ்யா - உக்ரைன் போர் மூலம் இந்திய ஐடி துறைக்கு அதிகம் பாதிப்பு இல்லாமல் இருந்த நிலையில் இப்போது இஸ்ரோல் - ஹமாஸ் போர் மூலம் மத்திய கிழக்கு சந்தையில் வர்த்தக பாதிப்பு அதிகரித்துள்ளது.
சர்வதேச அளவில் நிலவும் பொருளாதார மந்தநிலை மற்றும் ஜியோபொலிட்டிக்கல் பிரச்சனைகள் அமெரிக்காவில் துவங்கி, பிரிட்டன், ஐரோப்பா, மத்திய கிழக்கு நாடுகள், ஆசியா, ஆஸ்திரேலியா வரையில் ஐடி மற்றும் டெக் சேவைக்காக செலவிடுவதை நிறுவனங்கள் நிறுத்தியுள்ளது. ஆனால் இதேவேளையில் குறுகிய கால திட்டங்கள் தொடர்ந்து வந்தாலும் இதனால் இந்திய ஐடி சேவை நிறுவனங்களுக்கு பெரிய லாபம் இல்லை என்பதே உண்மை.
இந்த நிலையில் இந்தியாவின் மிகப்பெரிய ஐடி சேவை நிறுவனமான டிசிஎஸ் முதல் Persistent Systems போன்ற நடுத்தர ஐடி சேவை நிறுவனம் வரையில் டாப் 10 நிறுவனத்தில் மார்ச் மாதம் 21.1 லட்சம் பேர் பணியாற்றிய நிலையில், செப்டம்பர் 30 காலாண்டு முடிவில் அதாவது 6 மாத காலத்தில் மொத்த ஊழியர்கள் எண்ணிக்கை 20.6 லட்சமாக குறைந்துள்ளது.
இதன் மூலம் டாப் 10 நிறுவனங்களில் மொத்த ஊழியர்கள் எண்ணிக்கை 50,129 பேர் குறைந்துள்ளது. இந்திய ஐடி சேவை துறை நிறுவனங்கள் இந்த ஆண்டு மிகவும் சிறிய அளவிலான (slow growth) வளர்ச்சியை மட்டுமே பதிவு செய்யும் என ஏற்கனவே கணிக்கப்பட்ட நிலையில் தற்போது 50000 ஊழியர்கள் எண்ணிக்கை வெறும் 6 மாதத்தில் குறைந்தது பெரும் அதிர்ச்சியாக உள்ளது.
இந்த மந்தமான வளர்ச்சி அடுத்த ஒரு வருடத்திற்கு இருக்கும் என கணிக்கப்படும் வேளையில், செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பமும் பெரிய அளவில் வளர்ச்சி அடைந்து வரும் வேளையில் அதிகப்படியானோர் தங்களுடைய வேலையை இழக்க கூடும் என்ற அச்சம் இந்திய ஊழியர்கள் மத்தியில் அதிகரித்துள்ளது. இதேபோல் கடந்த 15 மாதத்தில் டாப் 10 ஐடி சேவை நிறுவனத்தின் மொத்த ஊழியர்களின் எண்ணிக்கையில் 77,578 பேர் குறைந்துள்ளனர்.
More From GoodReturns

தங்கம் விலை எங்கே போகும்? கோல்டு ETF-க்கு புதிய அபாயம் – ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை

வேலையை விட போறீங்களா? ஏப்ரல் 1 வரை வெயிட் பண்ணுங்க..!! சட்டமே மாறுது.. ஊழியர்கள் கை ஓங்க போகுது!!

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

மீண்டும் Lockdown..? மீண்டும் வொர்க் ப்ரம் ஹோம்.. சர்வதேச அமைப்பு கொடுத்த வார்னிங்..!!

இந்தியாவுக்கு கிரீன் சிக்னல் கொடுத்த ஈரான்..!! 6 ஆண்டுகளில் இல்லாத முடிவினை எடுத்த மோடி அரசு..!!

தங்கம் விலை இன்று கோயம்புத்தூரில் அதிரடி ஏற்றம்..! நகைப்பிரியர்களுக்கு ஷாக்..!



Click it and Unblock the Notifications