டிசிஎஸ், இன்போசிஸ், HCL எடுத்த ஷாக் முடிவு.. ஐடி ஊழியர்களுக்கு இனி அதிக சம்பளமா.. நோ சான்ஸ்..!!

இந்தியாவின் முன்னணி ஐடி சேவை நிறுவனங்கள் தற்போது புதிய வர்த்தகத்தைப் பெறுவதில் பெரும் போராட்டத்தையும், தடுமாற்றத்தையும் எதிர்கொண்டு வருகிறது. இந்த வேளையில் அமெரிக்காவின் வட்டி விகித குறைப்பு தான் அனைத்து பிரச்சனைகளுக்கும் தீர்வு என காத்திருக்கும் ஐடி நிறுவனங்களுக்கு, அமெரிக்காவின் ரெசிஷன் அச்சம் அதிகரித்துள்ளது பெரும் நெருக்கடியாக மாறியுள்ளது.

இந்த நிலையில் இந்தியாவின் முன்னணி ஐடி சேவை நிறுவனங்கள் அனைத்தும் தனது லாபத்தின் மார்ஜின் அளவை அதிகரிக்கும் முக்கியமான முடிவை எடுத்துள்ளது. பொதுவாக ஐடி சேவை நிறுவனங்கள் பாஜெக்ட்-ஐ வாங்கிவிட்டு ஆட்களை பணியில் அமர்த்தும், இது நீண்ட காலமாக இருக்கும் நடைமுறை என்றாலும், இதில் ஒரு சிக்கல் உள்ளது.

டிசிஎஸ், இன்போசிஸ், HCL எடுத்த ஷாக் முடிவு.. ஐடி ஊழியர்களுக்கு இனி அதிக சம்பளமா.. நோ சான்ஸ்..!!


சில குறிப்பிட்ட தொழில்நுட்பத்தில் ஊழியர்கள் இல்லாத பட்சத்தில் ஐடி நிறுவனங்கள் சந்தையில் இருக்கும் கன்சலடன்சிகளை சப்கான்டிராக்டராக இணைத்துக்கொண்டு அதிக தொகைக்கு டெக் ஊழியர்களை வேகமாகவும், அதிகமாகவும் தனது ப்ராஜெக்ட்-க்கு ஏற்றார் போல் பணியில் அமர்த்தும்.

ஐடி சேவை நிறுவனங்களின் வர்த்தகம் சிறப்பாக இருக்கும் வரையில் சப்கான்டிராக்டர்-க்கு கொடுக்கும் தொகை பெரிய பிரச்சனையாகத் தெரியவில்லை, ஆனால் தற்போது புதிய வர்த்தகத்தைப் பெறுவதில் பெரும் பிரச்சனை இருக்கும் காரணத்தால் முன்னணி ஐடி சேவை நிறுவனங்கள் தற்போது செலவுகளைக் குறையும் நடவடிக்கைகளைக் கடந்த சில வருடங்களைக் கடுமையாக்கி வரும் வேளையில், தற்போது சப்கான்டிராக்டர் பிரிவுக்குச் செலவு செய்யும் தொகை பல வருடங்களுக்குக் கீழ் குறைந்துள்ளது.

கடந்த 12-18 மாதத்தில் இந்தியாவின் 250 பில்லியன் டாலர் மதிப்பிலான ஐடி சேவை துறை குறைந்த மார்ஜின் அளவீட்டில் பெரும் பாதிப்பை எதிர்கொண்டு உள்ளது. இந்த சப்கான்டிராக்டர் இடத்தை நிரப்பவும், செலவுகளைக் குறைக்கும் பிரச்சனைக்குத் தீர்வு காணவும் தற்போது டிசிஎஸ், இன்போசிஸ், ஹெச்சிஎல், விப்ரோ, டெக் மஹிந்திரா உள்ளிட்ட அனைத்து நிறுவனங்களும் தங்களின் ஊழியர்களைத் தேவைப்படும் தொழில்நுட்பத்தில் Upskilling செய்ய கட்டாயப்படுத்து வருகிறது. இதேபோல் பென்ச்-ல் இருக்கும் ஊழியர்களை முழுமையாகப் பயன்படுத்தும் கொள்கையில் மிகவும் உறுதியாக உள்ளது.

2024 ஆம் நிதியாண்டின் டிசிஎஸ் சப்காண்டிராக்ட்-க்காக செலவுகள் செய்யும் தொகை அதன் மொத்த வருவாயில் சுமார் 6.20 சதவீதமாகும், இதில் முக்கியமான விஷயம் என்னவென்றால் இந்த அளவீடு அதன் 2016ஆம் நிதியாண்டுக்கான அளவீட்டுக்கு இணையாக உள்ளது. அதாவது 2-3 வருடத்திற்கு முன்பு இது 10 சதவீதத்திற்கும் அதிகமாக இருந்த நிலையில் தற்போது குறைக்கப்பட்டு உள்ளதை இது காட்டுகிறது.

இதேபோல் இன்போசிஸ் 7.70 சதவீதமாகும், விப்ரோ 11.50 சதவீதமாகவும், டெக் மஹிந்திரா 12.60 சதவீதமாகவும் குறைத்துள்ளது. இவை அனைத்தும் குறைந்தது 5 வருடத்திற்கும் குறைவான அளவீடு என்பது கவனிக்க வேண்டியது.


இதில் ஐடி ஊழியர்களுக்கு என்ன பிரச்சனை என்றால், ஐடி சேவைத் துறையில் நேரடி வேலைவாய்ப்பைக் காட்டிலும் ஒப்பந்த அடிப்படையில் பணியில் அமர்த்தப்படும் முக்கிய தொழில்நுட்பத்தில் திறன் வாய்ந்த ஊழியர்களுக்குச் சற்று அதிகமாகச் சம்பளம் வழங்கப்படும்.

இந்த நிலையில் ஐடி சேவைத் துறை நிறுவனங்கள் சப்கான்டிராக்ட்-க்கு ஒதுக்கப்படும் தொகையும், வர்த்தகமும் குறைத்தால் ஒப்பந்த அடிப்படையில் கிடைக்கும் வேலைவாய்ப்புகள் எண்ணிக்கை சந்தையில் குறையும். இதன் மூலம் மறைமுகமாக ஐடி ஊழியர்கள் பாதிக்கப்படுகிறார்கள்.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+