இந்தியாவின் முன்னணி ஐடி நிறுவனங்கள் தங்களுடைய செப்டம்பர் காலாண்டு முடிவுகளை வெளியிடும் போது பெரும்பாலாக அனைத்து முன்னணி நிறுவனங்களும் தனது வர்த்தகம், ஊழியர்கள் எண்ணிக்கை, வருமானம் ஆகியவற்றில் அதிகப்படியான தடுமாற்றத்தை எதிர்கொண்டு வருவதை பார்க்க முடிகிறது. இதன் அடிப்படையில் செய்யப்பட்ட ஆய்வு முக்கியமான விஷயத்தை முன்வைத்துள்ளது.
இந்தியாவின் 245 பில்லியன் டாலர் மதிப்பிலான ஐடி சேவை துறையில் முன்னணி நிறுவனங்கள் சில தனது வரலாற்றில் மிகவும் மந்தமான வளர்ச்சி பாதையை பதிவு செய்யும் என கணிக்கப்பட்டு உள்ளது. உதாரணமாக நாட்டின் 2வது பெரிய ஐடி சேவை நிறுவனமாக விளங்கும் இன்போசிஸ் 2024 ஆம் நிதியாண்டில் 1- 2.5 சதவீதம் மட்டுமே வளர்ச்சி அடையும் என கூறப்பட்டு உள்ளது, தனது வரலாற்றில் மிகவும் குறைவான வளர்ச்சி அளவீடுகள் என பிஎன்பி பரிபாஸ் தரவுகள் கூறுகிறது.

இதேபோல் இந்தயாவின் 4வது பெரிய ஐடி சேவை நிறுவனமாக இருக்கும் விப்ரோ நடப்பு நிதியாண்டுக்கான வளர்ச்சி அளவீடுகள் 1999 ஆம் நிதியாண்டின் வளர்ச்சி விகிதத்திற்கு இணையான அளவீட்டுக்கு இணையாக உள்ளது. மேலும் முதல் இடத்தில் இருக்கும் டிசிஎஸ் மற்றும் 3வது இடத்தில் இருக்கும் ஹெச்சிஎல் டெக் கொரோனா தொற்றுக்கு பின்பு மந்தமான வளர்ச்சியை நடப்பு நிதியாண்டில் பதிவு செய்ய உள்ளது.
உலக நாடுகளில் இருக்கும் நிறுவனங்கள் ரெசிஷன் அச்சம், பணவீக்க பாதிப்புகள் ஆகியவற்றின் காரணமாக செலவுகளை குறைக்கும் விதிமாக டெக் சேவைகளுக்காக செலவிடுவதை குறைத்துள்ளனர். மேலும் இந்திய ஐடி சேவை நிறுவனங்களின் வாடிக்கையாளர்கள் பலர் ஏற்கனவே ஒப்பந்தம் செய்யப்பட்ட, சேவை அளிக்கப்பட்டு வரும் திட்டங்களுக்கு கூட தற்காலிமாக நிறுத்தி வைக்கப்பட்டு உள்ளது.
இந்திய ஐடி சேவை துறையின் இந்த மந்தமான வளர்ச்சி அளவீடுகளுக்கான முழுகாரணம் சர்வதேச பொருளாதாரத்தில் ஏற்பட்டு உள்ள மந்த நிலை தான். இந்திய ஐடி சேவை நிறுவனங்கள் சுமார் 90 முதல் 95 சதவீத வருமானத்தை வெளிநாட்டு சந்தையில் இருந்து பெறும் காரணத்தால் உலக நாடுகளின் மோசமான பொருளாதார பாதிப்பு மூலம் அதிக பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்த நிலையில் கன்சல்டன்சி நிறுவனமான எவரெஸ்ட் குரூப் சிஇஓ பெண்டர்-சாமுவேல் 2024ல் சில நிறுவனங்கள் தங்களுடைய மோசமான வளர்ச்சி அளவீட்டை பதிவு செய்யலாம் என தெரிவித்துள்ளனர். இதோடு 2024 ஆம் ஆண்டின் முதல் 6 மாதம் மிகவும் மோசமாக இருக்கும் என கணிக்கப்பட்டு உள்ளதாக பெண்டர்-சாமுவேல் தெரிவித்துள்ளனர்.
ஜூன் மாதம் முடிவில் இந்திய ஐடி துறை டிசம்பர் காலாண்டில் வர்த்த்கம், வேலைவாய்ப்பு, லாபம் ஆகிய அனைத்திலும் சரிவில் இருந்து மீண்டு வரும் என கணிக்கப்பட்டது. ஆனால் இஸ்ரேல் - ஹமாஸ் மத்தியிலான போர் மூலம் மோசமான நிலைக்கு தள்ளப்பட்டு உள்ளது. இதன் மூலம் ஐடி துறைக்கான மந்தநிலை அடுத்த 9 மாதத்திற்கு பெரும் கேள்விக்குறியாய் நிற்கிறது.
More From GoodReturns

இந்தியர்களே தங்கம் விலையை பத்தின கவலையே இனி வேண்டாம்!! ரெடியானது நாட்டின் பெரிய தங்க சுரங்கம்!!

தங்கம் விலை - 40 ஆண்டுகளில் இல்லாத வீழ்ச்சி.. இந்திய மக்களுக்கு அடித்தது ஜாக்பாட்..!

அமெரிக்க வங்கி வேலைக்கு டாட்டா.. வீட்டை விற்றுவிட்டு குடும்பத்துடன் உலகம் சுற்றும் IIT இளைஞர்!

ஒட்டுமொத்த அமெரிக்காவுக்கும் ஷாக் கொடுத்த எலான் மஸ்க்.. டிரம்ப்-க்கு சவாலா..? யாரு சாமி நீ..?!

வேலையை விட போறீங்களா? ஏப்ரல் 1 வரை வெயிட் பண்ணுங்க..!! சட்டமே மாறுது.. ஊழியர்கள் கை ஓங்க போகுது!!

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

பொசுக்குன்னு தங்கம் விலை எகிறிவிட்டதே.. மொத்தமும் காலி.. இதென்ன மாயம்.. !

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!

தங்கம் விலை: மதுரையில் அதிரடி சரிவு! மார்ச் 23, 2026 நிலவரம் மற்றும் எதிர்கால கணிப்புகள் வெளியானது



Click it and Unblock the Notifications