2023 ஆம் ஆண்டு முடியும் வேளையில் புத்தாண்டு கொண்டாட அனைவரும் ஆர்வமாக இருக்கும் இதேவேளையில் 2024 ஆம் ஆண்டு இந்திய ஐடி துறை எப்படி இருக்கும், ஐடி ஊழியர்கள் தெரிந்துகொள்ள வேண்டிய முக்கியமான விஷயங்கள் என்ன, குறிப்பாகக் கல்லூரியில் பட்டம் பெற்று ஐடி துறை பணியில் சேர திட்டமிடும் பிரஷ்ஷர்கள் இதை முதல்ல கவனிங்க.
இந்தியாவின் முன்னணி ஐடி சேவை நிறுவனங்கள் டிசம்பர் காலாண்டில் பெரிய ஒப்பந்தங்களைப் பெறவில்லை, குறிப்பாக 1 பில்லியன் டாலருக்கு மேல் மதிப்புடைய லார்ஜ் டீல் கீழ் ஒரு டீல்களைக் கூடப் பெறவில்லை. இதற்கு மாறாக இன்போசிஸ் 15 வருடத்திற்கான 1.15 பில்லியன் டாலர் மதிப்பிலான ஒப்பந்தத்தை இழந்துள்ளது.

இதேபோல் ஐடி சேவை துறையில் உலகிலேயே மிகப்பெரிய நிறுவனமாக இருக்கும் அக்சென்சர் நிறுவனம் 2023 ஆம் ஆண்டை போலத் தான் 2024 ஆம் ஆண்டிலும் வருவாய் வரும் என்று தனது கணிப்பை வெளியிட்டு உள்ளது.
இதனால் ஐடி சேவை துறையில் வர்த்தகப் பாதை 2024 ஆம் ஆண்டின் முதல் 6 மாதத்திற்குத் தற்போது இருக்கும் மந்தநிலை தொடரும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் ஐடி சேவைத் துறையின் வளர்ச்சிப் பாதை அக்டோபர் மாதத்தில் இருந்து தான் துவங்கும் என சந்தை ஆய்வாளர்கள் கணித்துள்ளனர்.
தற்போது ஐடி சேவை துறையில் ஜெனரேட்டிவ் ஏஐ சேவை பிரிவு மிகவும் முக்கியமானதாகவும், வேகமாக வளர்ச்சி அடையும் பாதையில் இருந்தாலும், BFSI பிரிவில் வரும் வர்த்தகத்திற்கு இணையான வர்த்தகத்தை ஜெனரேட்டிவ் ஏஐ பிரிவில் வருவதில்லை. இதனால் வருவாய் அளவீட்டிலும் பெரிய வித்தியாசத்தை ஐடி நிறுவனங்கள் எதிர்கொண்டு வருகிறது.
மேலும் பெரும்பாலான ஜெனரேட்டிவ் ஏஐ திட்டங்கள் தற்போது சோதனை கட்டத்திலும், ப்ரூப் ஆஃப் கான்செப்ட் பிரிவிலும் உள்ளது, இதை மேம்படுத்தவும், இதன் மூலம் ஏற்படும் தாக்கத்தை முறையாகக் கணிக்கச் சில காலாண்டுகள் சேவைப்படும் என்பதால் ஜெனரேட்டிவ் ஏஐ மூலம் முன்னணி ஐடி சேவை நிறுவனங்கள் பெரிய திட்டங்களையோ, வருவாய் பெற முடியாத நிலையில் உள்ளது.

இதேபோல் தற்போது பெரும்பாலான நிறுவனங்கள் செலவுகளைக் குறைக்கும் பணியில் தீவிரமாக உள்ளது. இது 2024 ஆம் ஆண்டில் தீவிரமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது, இதேபோல் பெரும்பாலான துறைகளில் நிறுவனங்கள் தற்போது டெக்னாலஜி பட்ஜெட்-ஐ ஒதுக்கவும், அதிகரிக்கவும் விருப்பம் இல்லாமல் உள்ளது.
இதனால் முன்னணி ஐடி சேவை நிறுவனங்கள் புதிய வர்த்தகத்தைப் பெறுவதில் தொடர்ந்து மந்த நிலை இருக்கும் காரணத்தால் புதிய வேலைவாய்ப்புகள், சம்பள உயர்வு ஆகியவற்றிலும் பாதிப்பு இருக்கும். இன்போசிஸ், ஹெச்சிஎல், விப்ரோ ஏற்கனவே மாறிவரும் தொழில்நுட்பத்திற்கு மத்தியில் பிரஷ்ஷர்களைப் பணியில் சேர்ப்பதைக் குறைக்க முடிவு செய்துள்ளது.

இந்தியாவுக்கு வரும் வெளிநாட்டு நிறுவனங்களின் ஜிசிசி-களில் புதிய வேலைவாய்ப்புகள் உருவாக்கப்படுவதாகக் கூறப்பட்டாலும் இதன் எண்ணிக்கை மிகவும் குறைவு, அதேபோல் பிரஷ்ஷர்களுக்கு GCC-களில் வேலைவாய்ப்பு எண்ணிக்கை மிகவும் குறைவு என்பது தான் நிதர்சனம்.
அதேவேளையில் இந்தியாவில் இருக்கும் முன்னணி நிதி ஆலோசனை நிறுவனங்கள், முதலீட்டு ஆலோசனை நிறுவனங்கள் டிசிஎஸ் முன்னாள் சிஇஓ ராஜேஷ் கோபிநாதன் உட்படப் பல ஐடி துறை முன்னணி அதிகாரிகளை முக்கியப் பதவியில் நியமித்துள்ளதால் இந்திய ஐடி மற்றும் டெக் சேவைத் துறையில் ஏற்படும் மாற்றத்திற்கு முதலீட்டுச் சந்தை தயாராகி வருவதும் வெளிப்படையாகத் தெரிகிறது.
More From GoodReturns

தமிழ்நாட்டு ஐடி ஊழியர்கள் அதிர்ச்சி!! திடீரென ஊழியர்கள் எண்ணிக்கையை குறைத்த Cognizant!!

பெங்களூருவில் வீடு வாங்கி லாபம் பார்க்கணுமா? இந்த ஏரியால தான் செம வளர்ச்சி!!

பேருந்து டிக்கெட் கட்டணங்கள் குறைப்பு: எரிபொருளை சேமிக்க பொது போக்குவரத்தை பயன்படுத்த அறிவுரை!!

இன்போசிஸ் தலையெழுத்தை மாற்றப்போகும் புது CEO.. சலில் பாரிக் நிலைமை என்ன..?

இந்தியர்களே தங்கம் விலையை பத்தின கவலையே இனி வேண்டாம்!! ரெடியானது நாட்டின் பெரிய தங்க சுரங்கம்!!

வேலையை விட போறீங்களா? ஏப்ரல் 1 வரை வெயிட் பண்ணுங்க..!! சட்டமே மாறுது.. ஊழியர்கள் கை ஓங்க போகுது!!

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

தங்கம் விலை எங்கே போகும்? கோல்டு ETF-க்கு புதிய அபாயம் – ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!



Click it and Unblock the Notifications