ஐடி துறையில் பணிபுரிபவர்கள் மற்ற துறையினரை காட்டிலும் அதிகம் சம்பாதிப்பார்கள் என்று பரவலான நினைப்பு மக்கள் மத்தியில் இருக்கிறது, அது ஒரு வகையில் உண்மைதான். ஆனால் ஐடி நிறுவனங்கள் மத்தியிலேயே அவர்களின் சம்பளத்தில் அதிகப்படியான வித்தியாசம் உள்ளது என்பது தான் உண்மை.
இன்போசிஸ், டிசிஎஸ், விப்ரோ, ஹெச்சிஎல் டெக்னாலஜிஸ் மற்றும் எல் அண்ட் டி போன்ற முன்னணி ஐடி நிறுவனங்கள் திறமையான பணியாளர்களை தக்க வைக்க அவர்களுக்கு சம்பளத்தை அள்ளி கொடுக்கின்றன.

மேலும் ஐடி நிறுவனங்கள் வழங்கும் சம்பளம்தான் பணியாளர்களின் இருப்பை உறுதி செய்வதில் முக்கிய பங்கினை வகிக்கும். இந்த நிறுவனங்களின் வருமானம் கட்டமைப்புகள் பற்றிய நுண்ணறிவுகளை வழங்கும் ஒரு முக்கிய அளவீடாக பணியாளர்களின் சராசரி ஊதியம் (MRE) விளங்குகிறது.
Median Remuneration of Employees என்பதை தான் MRE என கூறப்படுகிறது, இது பணியாளர் சம்பள விநியோகத்தின் மைய புள்ளியை பிரதிபலிக்கிறது. ஒரு நிறுவனத்தில் பணியாற்றும் ஊழியர்களின் பதவி, அனுபவம், பணி இடங்கள், தற்போதைய சந்தை நிலைமை ஆகியவற்றை பிரதிபலிக்கும் சராசரி ஊதியத்தின் அளவு தான் இந்த MRE குறியீடு.
நாட்டின் முன்னணி ஐடி நிறுவனங்களின் 2022-23ம் நிதியாண்டின் அறிக்கைகளில் இருந்து பெறப்பட்ட தரவுகள் அடிப்படையில் ஒவ்வொரு நிறுவனங்களின் பணியாளர்களின் சராசரி ஊதியம் பற்றிய புள்ளிவிவரங்களை இப்போது பார்ப்போம்.
இன்போசிஸ்: 2023 ஆம் நிதியாண்டில் இந்நிறுவனத்தின் பணியாளர்களின் சராசரி ஆண்டு ஊதியம் ரூ.9 லட்சமாக இருந்தது. இது முந்தைய 2021-22ம் நிதியாண்டைக் காட்டிலும் 10.52 சதவீதம் அதிகமாகும்.
டாடா கன்சல்டன்சி சர்வீசஸ்: கடந்த 2022-23ம் நிதியாண்டில் இந்நிறுவனத்தின் பணியாளர்களின சராசரி ஆண்டு சம்பளம் நடுத்தர ஆண் பணியாளர்களுக்கு ரூ.14.23 லட்சமாகவும், நடுத்தர பெண் பணியாளர்களுக்கு ரூ.11.62 லட்சமாகவும் இருந்தது.
விப்ரோ: இந்நிறுவனத்தின் பணியாளர்களின் சராசரி ஆண்டு ஊதியம் ரூ.8.9 லட்சமாக இருந்தது. இது முந்தைய 2021-22ம் நிதியாண்டைக் காட்டிலும் 13.43 சதவீதம் அதிகமாகும்.
ஹெச்சிஎல் டெக்னாலஜிஸ்: இந்நிறுவனத்தில் பணியாளர்களின் சராசரி ஆண்டு சம்பளம் ரூ.11.3 லட்சமாக இருந்தது. இது முந்தைய நிதியாண்டைக் காட்டிலும் 0.01 சதவீதம் அதிகமாகும்.
எல் அண்ட் டி: இந்நிறுவனத்தின் பணியாளர்களின் சராசரி ஆண்டு ஊதியம் ரூ.8.88 லட்சமாக இருந்தது.


Click it and Unblock the Notifications