ஏப்ரல் மாதம் துவங்கியதும் இந்தியாவின் முன்னணி ஐடி நிறுவனங்கள் காலாண்டு முடிவுகளை வெளியிட்டு வருகிறது. இக்காலாண்டு முடிவுகள் மூலம் நாட்டின் முன்னணி ஐடி நிறுவனங்களின் பல பிரச்சனைகள் வெளிச்சத்திற்கு வந்தது மட்டும் அல்லாமல ரெசிஷன், வங்கி திவால் மூலம் எத்தகைய பிரச்சனைகளை எல்லாம் இந்திய ஐடி நிறுவனங்கள் சந்திக்கிறது என்பது தெரிய வந்துள்ளது.
இந்த நிலையில் தற்போது மார்ச் காலாண்டு முடிவுகளை வெளியிட்டு உள்ள டிசிஎஸ், இன்போசிஸ், ஹெச்சிஎல் நிறுவனங்கள் அனைத்தும் ஐடி ஊழியர்களும், ஐடி துறையில் வேலை தேடுபவர்களுக்கும் முக்கியமான ஒரு சிக்னல் கொடுத்துள்ளது. இது மிகவும் முக்கியமானதாக பார்க்கப்படுகிறது, இதே வேளையில் அடுத்த சில நாட்களில் 4வது பெரிய ஐடி சேவை நிறுவனமான விப்ரோவும் தனது காலாண்டு முடிவுகளை வெளியிட உள்ளது.

இந்தியாவின் மிகப்பெரிய ஐடி சேவை நிறுவனமான டாடா கன்சல்டன்சி சர்வீசஸ் நிறுவனம் 2023 ஆம் நிதியாண்டில் 22,600 ஊழியர்களை மட்டுமே பணியில் சேர்த்துள்ளது. ஆனால் 2022 ஆம் நிதியாண்டில் 1,03,000 ஊழியர்களை பணியில் சேர்த்து இருந்தது. இதன் மூலம் டிசிஎஸ் நிறுவனத்தின் ஆட்சேர்ப்பு விகிதம் கடந்த ஆண்டை காட்டிலும் 2023 ஆம் நிதியாண்டில் 78 சதவீதம் வரையில் குறைந்துள்ளது.
இதேபோல் இந்தியாவின் 2வது பெரிய ஐடி சேவை நிறுவனமான இன்போசிஸ் 2023 ஆம் நிதியாண்டில் 29,219 ஊழியர்களை மட்டுமே பணியில் சேர்த்துள்ளது. ஆனால் 2022 ஆம் நிதியாண்டில் 54,396 ஊழியர்களை பணியில் சேர்த்து இருந்தது. இதன் மூலம் இன்போசிஸ் நிறுவனத்தின் ஆட்சேர்ப்பு விகிதம் கடந்த ஆண்டை காட்டிலும் 2023 ஆம் நிதியாண்டில் 46 சதவீதம் வரையில் குறைந்துள்ளது.
டிசிஎஸ், இன்போசிஸ் நிறுவனங்களை தொடர்ந்து ஹெச்சிஎல் டெக் நிறுவனம் 2023 ஆம் நிதியாண்டில் 17,067 ஊழியர்களை மட்டுமே பணியில் சேர்த்துள்ளது. ஆனால் 2022 ஆம் நிதியாண்டில் 39,900 ஊழியர்களை பணியில் சேர்த்து இருந்தது. இதன் மூலம் இன்போசிஸ் நிறுவனத்தின் ஆட்சேர்ப்பு விகிதம் கடந்த ஆண்டை காட்டிலும் 2023 ஆம் நிதியாண்டில் 57 சதவீதம் வரையில் குறைந்துள்ளது.
இது மட்டும் அல்லாமல் அடுத்த சில காலாண்டுகளுக்கு ஹெச்சிஎல், இன்போசிஸ் நிறுவனத்தில் Hiring அளவு பெரிய அளவில் கணிசமான தாக்கம் இருக்கும் என்பதை தொரிவித்துள்ளது. குறிப்பாக ஹெச்சிஎல் டெக் நிறுவனத்தின் தலைமை மக்கள் அதிகாரி கடந்த 2 காலாண்டில் இருந்த Hiring அளவு தான் அடுத்த சில காலாண்டுகளுக்கு தொடரும் என தெரிவித்துள்ளார்.
இதன் மூலம் இந்திய ஐடி நிறுவனங்கள் கொடுக்கும் முக்கியமான சிக்னல் என்னவென்றால் ஐடி துறையில் அடுத்த சில காலாண்டுகளுக்கு வேவைவாய்ப்பு என்பது மிகவும் குறைவு. குறிப்பாக பிரஷ்ஷர்களுக்கு வேலை கிடைப்பது என்பது மிகவும் கடினமாக இருக்கும் என தெரிவித்துள்ளது.
More From GoodReturns

கேஸ் சிலிண்டர் பயனர்களுக்கு எச்சரிக்கை! இனி நினைத்த நேரத்தில் புக் செய்ய முடியாது?

முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் ஜியோவுக்கு செக் வைத்த TRAI: ஏப்ரல் 14ஆம் தேதி வரை கெடு என அறிவிப்பு..!!

FASTag விதிகளில் மாற்றம்: புதிதாக கொண்டு வரப்பட்ட 72 மணி நேர விதி..!! வாகன ஓட்டிகளே உஷார்..!!

உங்க வீட்டுக் கடனையும் விட்டு வைக்காத ஈரான் போர்.. அடுத்த வாரம் பெரிய அறிவிப்பு வரப் போகுது!!

தங்கம் விலை ரூ.2 லட்சத்தை நெருங்குமா?பீட்டர் ஷிஃப் கொடுத்த மெகா வார்னிங்! ஏப்ரலில் எகிற போகுது?

தங்கம் தந்த டபுள் சர்ப்பிரைஸ்: ஈரான் போரால் நடக்கும் ஒரே நன்மை..!! இனி ஒவ்வொரு நாளும் முக்கியம்..!!

குறைந்த உதயநிதி ஸ்டாலின் சொத்து மதிப்பு! பல மடங்கு எகிறிய கிருத்திகாவின் சொத்து - பின்னணி என்ன?

அட்சய திருதியைக்கு தங்கம் வாங்குற பிளான் இருக்கா? இப்படி செஞ்சா குறைஞ்ச விலைக்கு தங்கம் கிடைக்கும்

பெட்ரோல் விலை லிட்டர் ரூ.119, டீசல் விலை லிட்டர் ரூ.192: உண்மையை போட்டுடைத்த அரசு..!!

90ஸ் கிட்ஸ்களின் Gmail பிரச்சினைக்கு தீர்வு தந்த சுந்தர் பிச்சை: பழைய ஐடி-க்கு குட்பை..!!

PPF-ல் ஒரு சின்ன மேஜிக்! லட்சக்கணக்கில் லாபம் பார்க்க இந்த ஒரு டிப்ஸ் போதும்!



Click it and Unblock the Notifications