இந்திய பொருளாதாரத்திற்கும், நாட்டின் அன்னிய செலாவணிக்கும் ஐடி சேவை துறை மிகவும் முக்கியமானதாக இருக்கும் வேளையில், சமீபத்தில் பிரஷ்ஷர்களுக்கான வேலைவாய்ப்பு பெரிய அளவில் குறைந்துள்ளது, புதிய திட்டங்கள் பெறுவதில் மந்த நிலையும் உருவாகியுள்ள செய்தி இத்துறையினரை பெரும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.
இது ஒருபக்கம் இருக்க, மறுமுனையில் இந்தியாவின் ஐடி துறை ஒரு மாபெரும் மாற்றத்தைச் சந்தித்து வருகிறது, இதைப் பலரும் கவனிக்க மறந்துள்ளனர். ஏஐ மொத்த மென்பொருள் சேவை துறையை மாற்றிவிடும், இதனால் அதிகளவிலான வர்த்தகத்தையும், வருமானத்தையும் இழந்து விடும் என்ற அச்சத்தில் அதிரடி நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது

டாடா-வின் டிசிஎஸ், ஹெச்சிஎல் டெக், விப்ரோ மற்றும் டெக் மஹிந்திரா போன்ற முன்னணி ஐடி நிறுவனங்கள் கடந்த ஒரு வருடமாக தங்கள் வர்த்தகத்தையும், தலைமை குழுக்களையும் பெரிய அளவில் மறுசீரமைப்பு செய்து வருகின்றன.
250 பில்லியன் டாலர் மதிப்பிலான இந்த ஐடி சேவை துறை மந்த நிலைக்கு தள்ளப்பட்டு வரும் நிலையில் இந்த மறுசீரமைப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இது ஐடி ஊழியர்கள் கட்டாயம் கூர்ந்து கவனிக்க வேண்டிய விஷயமாக உள்ளது.
ஐடி நிறுவனங்கள் தற்போது ஜெனரேட்டிவ் ஏஐ (Gen AI) மீது கவனம் செலுத்தும் பிரிவுகளை தனியாக உருவாக்கியும், இப்பிரிவில் புதிய ஊழியர்களை படையை வளர்த்து வருகின்றன. மேலும், புதிய துறையில் வர்த்தகத்தை வளர்க்க இத்துறையில் இருக்கும் நிறுவனங்களை கையகப்படுத்தும் பணியிலும், புதிய அமைப்புகளை நிறுவனத்திற்குள்ளேயே டிஜிட்டல் நிபுணத்துவத்துடன் மேம்படுத்திக் கொண்டு வருகிறது.
டாடா கன்சல்டன்சி சர்வீசஸ்: TCS சிஇஓ கே.கிருதிவாசன் இந்நிறுவனத்தின் செயற்கை நுண்ணறிவு மற்றும் கிளவுட் வணிகங்களைச் சிவா கணேசன் தலைமையில் ஒரே AI.Cloud பிரிவாக இணைத்துள்ளார். இதேவேளையில் உலகளவில் தலைமைப் பதவிகளிலும் மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன.
டிசிஎஸ் நிறுவனம், நிறுவன செயல்பாடுகளான நிதி மற்றும் கணக்கியல் மீது கவனம் செலுத்தும் விதமாக "எண்டர்பிரைஸ் சிபிஓ" (cognitive business practices) பிரிவை உருவாக்கியுள்ளது. இதனை அசோக் பாய் தலைமையில் இயங்கி வருகிறது. Enterprise CBO பிரிவில் செயற்கை நுண்ணறிவு மூலம் இயங்கும் மனித-இயந்திர தளமான TCS Cognix சேர்க்கப்பட்டுள்ளது.
இன்ஃபோசிஸ், HCL டெக் மற்றும் விப்ரோ:
டெக் மஹிந்திரா போன்ற புதிய சிஇஓ மோஹித் ஜோஷி தலைமையில் 12 நிர்வாக பிரிவுகள் 6 பிரிவுகளாக குறைக்கப்பட்டு உள்ளது.
ஹெச்சிஎல் சேல்ஸ் அணிகளை ஒன்றாக இணைத்துள்ளது, இதேபோல் பல முக்கிய பிரிவில் உயர்மட்ட பிரிவில் முக்கிய அதிகாரிகளை நியமித்துள்ளது.
இன்போசிஸ் மொத்தமாக AI first company ஆக செயல்பட துவங்கியுள்ளதாக இதன் சிஇஓ சலில் பாரிக் தெரிவித்தார். அதாவது அனைத்து பிரிவுகளும் ஏஐ அடிப்படையிலான சேவைக்கு முன்னுரிமை கொடுத்து செயல்படுவதாக தெரிவித்துள்ளார். இதோடு இன்போசிஸ் Internet of Things (IoT) பிரிவில் புதிய வாய்ப்புகளை தேட முடிவு செய்துள்ளது.


Click it and Unblock the Notifications