TCS, இன்போசிஸ், HCL, விப்ரோ-க்கு புது பிரச்சனை.. 40% இழப்பாம்.. ஐடி ஊழியர்களே உஷார்..!

இந்தியாவில் அதிகப்படியான வேலைவாய்ப்புகளை ஒவ்வொரு ஆண்டும் உருவாக்கி வரும் ஐடி துறை கடந்த ஒரு வருடமாக பல்வேறு பிரச்சனைகளை எதிர்கொண்டு வருகிறது, கொரோனா தொற்று காலத்தில் உலகம் முழுவதும் இருக்கும் நிறுவனங்கள் டெக் சேவைக்காக அலைந்த நிலையில், இந்திய ஐடி நிறுவனங்கள் அதிகப்படியான வர்த்தகத்தை பெற்று கலக்கி வந்தது.

ஆனால் அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகளின் பொருளாதாரம் தொடர் சரிவிலும் மந்த நிலையிலும் இருக்கும் காரணத்தால் புதிய திட்டங்களை பெற முடியாத நிலைக்கு தள்ளப்பட்டு உள்ளது. இது இந்திய ஐடி நிறுவனங்களை எந்த அளவுக்கு பாதித்துள்ளது என்பதை தான் இப்போது பார்க்கப்போகிறோம்.

TCS, இன்போசிஸ், HCL, விப்ரோ-க்கு புது பிரச்சனை.. 40% இழப்பாம்.. ஐடி ஊழியர்களே உஷார்..!

இந்தியாவில் 4 பெரிய ஐடி சேவை நிறுவனங்களான TCS, இன்போசிஸ், HCL, விப்ரோ 2022-23 ஆம் நிதியாண்டில் பெரிய வாடிக்கையாளர்களை சேர்ப்பதில் 40 சதவீத சரிவை சந்தித்துள்ளது. பெரிய வாடிக்கையாளர்கள் எனில் அதிக மதிப்புடைய திட்டங்களை அளிக்கும் வாடிக்கையாளர்கள்.

10 மில்லியன் டாலர் மற்றும் 100 மில்லியன் டாலர் பிரிவில் இந்தியாவின் 4 பெரிய ஐடி சேவை நிறுவனங்களான TCS, இன்போசிஸ், HCL, விப்ரோ 2022-23 ஆம் நிதியாண்டில் 90 வாடிக்கையாளர்களை மட்டுமே பெற்றுள்ளது. 2022 ஆம் நிதியாண்டில் இதன் எண்ணிக்கை 132 ஆக இருந்தது.

இதை தாண்டி 2022 மற்றும் 2023 ஆம் நிதியாண்டில் வாடிக்கையாளர் சேர்ப்பில் நிலையாக இருப்பது இன்போசிஸ் மட்டும் தான். இன்போசிஸ் கடந்த இரண்டு நிதியாண்டிலும் 23 வாடிக்கையாளர்களை சேர்த்துள்ளது. இதுவே நாட்டின் மிகப்பெரிய ஐடி சேவை நிறுவனமாக இருக்கும் டிசிஎஸ் 57 சதவீத சரிவுடன் 33 வாடிக்கையாளர்களை மட்டுமே பெற்றுள்ளது.

இதை தொடர்ந்து விப்ரோ 48.1 சதவீத சரிவுடன் 14 வாடிக்கையாளர்களை 2023 ஆம் ஆம் நிதியாண்டில் பெற்றுள்ளது, 2022 ஆம் நிதியாண்டில் விப்ரோ 17 வாடிக்கையாளர்களை பெற்றது. இதேபோல் ஹெச்சிஎல் 30 வாடிக்கையாளர்களை பெற்ற இடத்தில் 21 வாடிக்கையாளர்களை மட்டுமே large clients பிரிவில் பெற்றுள்ளது.

TCS, இன்போசிஸ், HCL, விப்ரோ-க்கு புது பிரச்சனை.. 40% இழப்பாம்.. ஐடி ஊழியர்களே உஷார்..!

TCS, இன்போசிஸ், HCL, விப்ரோ போன்ற பெரிய நிறுவனங்களே பெரிய வாடிக்கையாளர்களை சேர்ப்பதில் 40 சதவீத சரிவை சந்தித்துள்ளது என்றால் சிறிய மற்றும் நடுத்தர நிறுவனங்களின் நிலை என்னவாக இருக்கும். அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகளின் பொருளாதாரத்தின் நிலை என்ன..? இந்திய ஐடி சேவை நிறுவனங்களில் எந்த அளவுக்கு பாதிப்பை கொண்டு உள்ளது.

உதாரணமாக ஐரோப்பாவில் மிகப்பெரிய பொருளாதார நாடாக இருக்கும் ஜெர்மனி ரெசிஷனுக்குள் சென்றுள்ளது, பிரிட்டன் கடந்த ஆண்டே ரெசிஷனுக்குள் சென்றது, அமெரிக்கா பணவீக்கத்தாலும், கடன் வரம்பை உயர்த்தும் பிரச்சனை காரணமாகவும் மோசமான நிலையை எதிர்கொண்டு வருகிறது.

இந்திய ஐடி சேவை நிறுவனங்கள் ஒவ்வொரு காலாண்டிலும் 90 முதல் 95 சதவீத வருமானத்தை அமெரிக்கா, ஐரோப்பிய சந்தையில் இருந்து மட்டுமே பெறுகிறது. இதேபோல் 90 சதவீத வர்த்தகத்தை இவ்விரு சந்தைகளில் மட்டுமே வைத்துள்ளது.

இந்த நிலையில் அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய பொருளாதாரத்தின் வீழ்ச்சி இந்திய ஐடி சேவை நிறுவனங்களை அதிகளவில் பாதித்துள்ளது. சமீபத்தில் ஐரோப்பிய சந்தையில் கிங் ஆக இருக்கும் அக்சென்சர் 19000 ஐடி ஊழியர்களையும், அமெரிக்காவில் இருக்கும் காக்னிசென்ட் 3500 ஊழியர்களையும் பணிநீக்கம் செய்வதாக அறிவித்தது.

இந்திய ஐடி சேவை நிறுவனங்களான TCS, இன்போசிஸ், HCL, விப்ரோ பணிநீக்க அறிவிப்பை வெளியிடவில்லை என்றாலும், செலவுகளை குறைக்கவும், ஊழியர்களின் செயல்திறனை அதிகரிக்கவும் பல முயற்சிகளை வேக வேகமாக செய்து வருகிறது. இந்திய ஐடி நிறுவனங்களில் பலரை தற்போது வாரத்தில் 5 நாளும் அலுவலகத்திற்கு அழைக்கும் பணிகள் துவங்கியுள்ளது.

மேலும் TCS, இன்போசிஸ், HCL, விப்ரோ நிறுவனங்களில் பெரிய வாடிக்கையாளர் சேர்ப்பில் ஏற்பட்டு உள்ள 40 சதவீத சரிவு கட்டாயம் அதன் புதிய வேலைவாய்ப்பு எண்ணிக்கை, ஐடி ஊழியர்களுக்கான சம்பள உயர்வு, வேரியபிள் பே தொகை அளவீடு, புதிய நிறுவனத்தில் சேர்ப்பவர்களுக்கான சம்பள உயர்வு அளவீடு ஆகியவற்றில் கட்டாயம் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும்.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+