இந்தியாவின் முன்னணி ஐடி சேவை நிறுவனங்கள் அடுத்தடுத்து பெரும் ஆபத்தை எதிர்கொண்டு வருகிறது. ஒருப்பக்கம் ஏஐ தொழில்நுட்பத்தால் புதிய திட்டங்களை பெற முடியாத நிலையில் மாட்டிக்கொண்டு இருக்கும் வேளையில், டிரம்ப் அரசு விசா கட்டுப்பாடு, HIRE மசோதா என முட்டுக்கட்டைகளை போட்டு வருகிறது.
இப்படியிருக்கையில் இந்திய ஐடி சேவை நிறுவனங்கள் எப்படி புதிய வர்த்தகத்தை பெற்று தொடர்ந்து வளர்ச்சி பாதையில் இருப்பது என முட்டி மோதிக்கொண்டு இருக்கும் வேளையில் புதிதாக ஒரு பிரச்சனை வந்துள்ளது.

டிசிஎஸ், இன்போசிஸ், ஹெச்சிஎல், விப்ரோ ஆகிய நிறுவனங்கள் கையில் இருக்கும் சுமார் 13 பில்லியன் டாலர் மதிப்பிலான டெக் சேவை திட்டங்கள் அடுத்த 6 மாதத்தில் ரினிவல் செய்ய வேண்டிய கட்டாயத்தில் உள்ளது. இதனால் அடுத்த 6 மாதத்தில் ஐடி துறையினரும், ஐடி துறை முதலீட்டாளர்களும் மிகுந்த கவனத்தில் இருக்க வேண்டிய கட்டாயம் உள்ளது.
ஐடி திட்டங்கள் ரினிவல் என்பது எப்போதும் நடக்கும் விஷயம் என்றாலும், தற்போதைய காலக்கட்டத்தில் இது மிகவும் முக்கிய பிரச்சனையாக பார்க்கப்படுகிறது. பொதுவாக ஐடி திட்டங்களை பல வருட ஒப்பந்தமாக இருக்கும், இத்தகைய திட்டங்களை பெறும் ஐடி சேவை நிறுவனங்கள் திறம்பட உருவாக்கி அவற்றை தொடர்ந்து இயங்கி வரும்.
ஒப்பந்த காலம் முடிந்து, ரினிவல் செய்யப்படும் காலம் வரும் போதும் பெரும்பாலும் அதே நிறுவனம் இத்திட்டத்தை பெறும் இதனால் ரினிவல் காலக்கட்டத்தில் பதற்றம் இருக்காது. ஆனால் தற்போது உலகளவில் அனைத்து நிறுவனங்களும் ஏஐ தொழில்நுட்பத்தை பயன்படுத்தி வேகமாக திட்டங்களை முடிப்பது மட்டும் அல்லாமல் செலவுகளை குறைக்கவும் தீர்க்கமாக உள்ளனர்.
இதனால் இந்த முறை ரினிவல் செயல்முறையில் ஏஐ முக்கிய பேசு பொருளாக இருக்கும், அதேபோல் ஏஐ அடிப்படையிலான சேவைகளை உருவாக்குவது கட்டாயமாகும். இவ்விரண்டும் இந்திய ஐடி சேவை துறைக்கு பிரச்சனையாக உள்ளது. இந்திய டெக் சேவை நிறுவனங்களின் ஊழியர்கள் ஏஐ துறையில் திறன்களை பெற்று இருந்தாலும் இது போதுமானதாக இல்லை என்பது பல ஆய்வுகள் மூலம் தெரிய வந்துள்ளது.
மேலும் புதிய திட்டங்களின் வரத்து குறைந்துள்ளதால், இந்த 13 பில்லியன் டாலர் திட்டங்களை கைப்பற்றுவதிலும் இந்திய ஐடி நிறுவனங்கள் மத்தியில் போட்டியிருக்கலாம் என்பதால் இதுவும் கவனிக்கப்பட வேண்டிய விஷயமாக உள்ளது. எப்படி ஊழியர்களை ஈர்ப்பதில் போட்டி இருக்கிறதோ, அதேபோல் தற்போது திட்டங்களை பெறுவதிலும் போட்டியிருக்க வாய்ப்பு உள்ளது.
இதேவேளையில் இத்தகைய ஏஐ திட்டங்களை செயல்படுத்த வேண்டுமாயின் அதிக சம்பளம் கொடுத்து ஊழியர்களை நியமிக்க வேண்டிய கட்டாயம் உள்ளது. இது நிறுவனங்களின் செலவை அதிகரிக்க செய்யும் என்பது மற்றொரு பிரச்சனையாக விளங்குகிறது.
2025ஆம் நிதியாண்டின் 2ஆம் பாதியில் சுமார் 20 மில்லியன் டாலர் முதல் 2 பில்லியன் டாலர் மதிப்பிலான 600 ஐடி சேவை திட்டங்கள் ரினீவல்-க்காக வருகிறது என அமெரிக்காவின் எவரஸ் குரூப் தெரிவித்துள்ளது.
இந்த காலக்கட்டத்தில் டிசிஎஸ்-ன் ஸ்டார் அலையென்ஸ் மற்றும் நீல்சன் திட்டங்களும், இன்போசிஸ்-ன் டையம்லர் ஏஜி மற்றும் ஜிஈ அப்லையன்ஸ் திட்டங்களும், ஹெச்சிஎல் டெக்ஜன் ஈரிக்சன் மற்றும் Chesnara, விப்ரோ-வின் E.ON, Fortum, Petrobras ஆகிய நிறுவனங்களின் ஒப்பந்தம் ரினிவல் செய்யப்பட உள்ளது.
இதேவேளையில் மற்றொரு நல்ல விஷயம் என்னவென்றால் அமெரிக்காவின் மத்திய வங்கியான பெடரல் ரிசர்வ் நாளை தனது வட்டி விகிதத்தை குறைக்க உள்ளது. இந்த வட்டி குறைப்பு மூலம் கடன் விகிதம் குறையும் என்பதால் டெக் சேவைக்காக நிறுவனங்களின் முதலீடுகள் அதிகரிக்கும், இதனால் இந்திய ஐடி சேவை நிறுவனங்கள் புதிய திட்டங்களை பெற வாய்ப்புகள் அதிகமாக உள்ளது.
More From GoodReturns

கேஸ் சிலிண்டர் பயனர்களுக்கு எச்சரிக்கை! இனி நினைத்த நேரத்தில் புக் செய்ய முடியாது?

சம்பள கமிஷனுக்கு முன்பாகவே அரசு ஊழியர்களுக்கு சம்பள உயர்வு: அதுவும் ஏப்ரல் மாதத்திலேயே வர போகுது!!

முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் ஜியோவுக்கு செக் வைத்த TRAI: ஏப்ரல் 14ஆம் தேதி வரை கெடு என அறிவிப்பு..!!

உங்க வீட்டுக் கடனையும் விட்டு வைக்காத ஈரான் போர்.. அடுத்த வாரம் பெரிய அறிவிப்பு வரப் போகுது!!

தங்கம் விலை ரூ.2 லட்சத்தை நெருங்குமா?பீட்டர் ஷிஃப் கொடுத்த மெகா வார்னிங்! ஏப்ரலில் எகிற போகுது?

FASTag விதிகளில் மாற்றம்: புதிதாக கொண்டு வரப்பட்ட 72 மணி நேர விதி..!! வாகன ஓட்டிகளே உஷார்..!!

வேலையும் போச்சு; சம்பளமும் போச்சு - ஆனாலும் நிம்மதியா வாழ்றேன்: Oracle ஊழியர் கற்றுத்தரும் பாடம்!!

வீட்டு கடன் வாங்கியவர்களுக்கு ரிசர்வ் வங்கி முக்கிய அறிவிப்பு: ரெப்போ வட்டியில் மாற்றமா?

தங்கம் தந்த டபுள் சர்ப்பிரைஸ்: ஈரான் போரால் நடக்கும் ஒரே நன்மை..!! இனி ஒவ்வொரு நாளும் முக்கியம்..!!

குறைந்த உதயநிதி ஸ்டாலின் சொத்து மதிப்பு! பல மடங்கு எகிறிய கிருத்திகாவின் சொத்து - பின்னணி என்ன?

PPF-ல் ஒரு சின்ன மேஜிக்! லட்சக்கணக்கில் லாபம் பார்க்க இந்த ஒரு டிப்ஸ் போதும்!



Click it and Unblock the Notifications