இந்திய ஐடி துறையை புரட்டிப்போட்டும் வரி பிரச்சனை.. ஐடி ஊழியர்களின் நிலைமை என்ன..?

அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் உலக நாடுகள் மீது விதித்திருந்த ரெசிப்ரோக்கல் வரியை 90 நாட்களுக்கு ஒத்திவைத்திருந்தாலும் வர்த்தக போர் அச்சம், ரெசிஷன் அச்சம் முழுமையாக குறையவில்லை. இந்த நிலையில் அமெரிக்கா தற்போது துறைவாரியான வரிகளை விதிக்கும் பணிகளை தீவிரமாக செயல்படுத்தி வரும் வேளையில் ஐடி துறைக்கு தற்போது இருக்கும் வரி விதிப்பை தாண்டி புதிதாக வரி விதிப்பு வருமா என்பது முழுமையாக தெரியவில்லை.

எனவே தற்போது நடைமுறையில் இருக்கும் வரி விதிப்பின் மூலம் இந்திய ஐடி சேவை துறையில் எந்த அளவுக்கு பாதிப்புகள் இருக்கும்..? இதனால் ஐடி ஊழியர்களுக்கு பாதிப்பு ஏற்படுமா..?

இந்திய ஐடி துறையை புரட்டிப்போட்டும் வரி பிரச்சனை.. ஐடி ஊழியர்களின் நிலைமை என்ன..?

அமெரிக்க அரசின் வரி விதிப்பு ஒட்டுமொத்த வர்த்தக சந்தையை மந்தநிலைக்கு தள்ளியுள்ளது மட்டும் அல்லாமல் நுகர்வோர் பொருட்கள், ரீடைல் மற்றும் உற்பத்தி ஆகிய துறைகள் அதிகப்படியான பாதிப்புகளை எதிர்கொண்டு வருகிறது. சரி இதற்கும் இந்திய ஐடி சேவை துறைக்கும் என்ன தொடர்பு..?

இந்திய ஐடி சேவை துறைக்கு கிடைக்கும் மொத்த வர்த்தகத்தில் இந்த 3 துறைகளில் இருந்து கிடைக்கும் வர்த்தகம் அதிகம் என்பதால், இத்துறைக்கு தற்போது ஏற்பட்டுள்ள பாதிப்பு இந்திய ஐடி நிறுவனங்களை நேரடியாக பாதிக்கும். அதாவது நுகர்வோர் பொருட்கள், ரீடைல் மற்றும் உற்பத்தி ஆகிய துறைகளில் இருந்து புதிய ப்ராஜெக்ட்கள் கிடைக்காது, நிலைமை மோசமாகும் பட்சத்தில் தற்போது செயல்பாட்டில் இருக்கும் திட்டங்கள் கூட தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்படலாம் அல்லது ரத்து செய்யப்படலாம்.

இந்தியாவின் 280 பில்லியன் டாலர் மதிப்புடைய ஐடி சேவை துறையின் மொத்த வருவாயில் கன்ஸ்யூமர், ரீடைல் மற்றும் உற்பத்தி ஆகிய துறைகளில் இருந்து மட்டும் சுமார் 25 முதல் 30 சதவீதம் வரையிலான வர்த்தக பங்கீட்டை கொண்டுள்ளது. தற்போது இத்துறையில் ஏற்பட்டுள்ள பாதிப்பு கட்டாயம் இந்திய ஐடி துறையின் வர்த்தகத்தை பாதிக்கும் என்பது தான் அனைவரின் கவலையாக இருக்கிறது.

இந்தியாவின் டாப் ஆறு ஐடி நிறுவனங்களான டிசிஎஸ், இன்ஃபோசிஸ், ஹெச்சிஎல் டெக், விப்ரோ, காக்னிசண்ட் மற்றும் டெக் மஹிந்திரா ஆகியவை இந்த 3 துறைகளில் எவ்வளவு வர்த்தக பங்கீட்டை வைத்துள்ளது தெரியுமா..?

2024 நிதியாண்டு முடிவில் இந்த 6 நிறுவனங்களின் மொத்த வருவாயில் சுமார் 28 சதவீத பங்கீட்டை இந்த 3 துறைகளில் மட்டுமே வைத்துள்ளது. அதாவது மொத்த 97 பில்லியன் டாலர் வணிகத்தில் சுமார் 27 பில்லியன் டாலர் பங்கீடு இந்த 3 துறைகளில் மட்டும் உள்ளது.

தனித்தனியாகப் பார்க்கும்போது, டிசிஎஸ் தனது வருவாயில் கிட்டத்தட்ட 25 சதவீதத்தை உற்பத்தி மற்றும் நுகர்வோர் பிரிவுகளிலிருந்து பெறுகிறது, அதே நேரத்தில் இன்ஃபோசிஸ் தனது மொத்த வருவாயில் 29 சதவீதத்திற்கும் அதிகமான வருமானத்தை உற்பத்தி மற்றும் சில்லறை வணிகத் துறைகளிலிருந்து பெறுகிறது. விப்ரோ ரீடைல் வணிகத்தில் மட்டும் 19 சதவீதத்திற்கும் அதிகமான வருமான பங்கீட்டை கொண்டுள்ளது.

இதை தாண்டி அமெரிக்கா ரெசிஷனில் மூழ்கினால் வங்கி சேவை துறையிலும் பாதிக்கும், இந்திய ஐடி சேவை துறைக்கு அதிகப்படியான வர்த்தகம் மற்றும் வருவாய் பங்கீட்டை கொண்டது BFSI துறை தான். இதனால் ரெசிஷன் அச்சம் இந்திய ஐடி சேவை துறையை கூடுதலாக பாதிக்கும் நிலை உள்ளது.

இதனால் ஐடி ஊழியர்களுக்கு எவ்விதமான பாதிப்பை ஏற்படுத்தும்..? இந்திய ஐடி சேவை துறையில் பணிநீக்கம் என்பது 2008 நிதியியல் நெருக்கடி காலத்தில் ஏற்பட்டது, தற்போது மீண்டும் ரெசிஷன் பீதி கிளம்பியுள்ளது. அமெரிக்காவில் SVB வங்கி உட்பட பல சிறு வங்கிகள் மூடப்பட்ட போதே ரெசிஷன் வரும் என்ற அச்சம் இருந்தது, ஆனால் பெரிய வங்கிகள் இந்த வங்கிகளை கைப்பற்றிய காரணத்தால் அப்போது தடுக்கப்பட்டது.

ஆனால் டிரம்ப் உருவாக்கியுள்ள இந்த வர்த்தக போர் அச்சம் மூலம் உருவாகும் ரெசிஷன் எப்போது அடங்கும் என்பது டிரம்ப்-க்கு மட்டுமே தெரியும். இதேவேளையில் பல மாதங்களுக்கு பின்பு அமெரிக்காவும் - சீனாவும் வர்த்தக ஒப்பந்தம் செய்துக்கொள்ள பேச்சுவார்த்தையை கடந்த வாரம் துவங்கியது, இந்த பேச்சுவார்த்தை வெற்றி அடைந்தால் அனைத்தும் இயல்பு நிலைக்கு திரும்பும்.

அமெரிக்காவின் வரி விதிப்பு உலகளாவிய உற்பத்தி மையமாக விளங்கும் சீனாவில் நிலையற்ற தன்மையை உருவாக்கி உலகளாவிய விநியோகச் சங்கிலியை சீர்குலைத்து வருகிறது. இதன் விளைவாக, அமெரிக்கா மற்றும் ஐரோப்பா போன்ற முக்கியமான சந்தைகளில் செயல்படும் நிறுவனங்கள் பாதிக்கப்பட்டு வருகிறது.

அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நிறுவனங்கள், இந்திய ஐடி சேவை நிறுவனங்களுக்கு முக்கிய வாடிக்கையாளர்களாக இருப்பதால், இந்த பாதிப்பின் தாக்கம் அதிகமாக இருக்கும் என கணிக்கப்பட்டு உள்ளது.

இதேவேளையில் கடந்த இரண்டு வாரங்களில், நாட்டின் மிகப்பெரிய நிறுவனங்களான டிசிஎஸ், இன்ஃபோசிஸ் மற்றும் விப்ரோ ஆகியவை மார்ச் காலாண்டு முடிவுகளை வெளியிட்ட நிலையில், இதில் வருவாய் வளர்ச்சி அளவீட்டை ஒற்றை இலக்க வளர்ச்சியை அல்லது மந்தமான வளர்ச்சியைப் பதிவு செய்துள்ளன.

ஹெச்சிஎல் டெக், எல்டிஐ மைண்ட் ட்ரீ மற்றும் டெக் மஹிந்திரா ஆகியவை இந்த வாரம் 2025 நிதியாண்டின் நான்காவது காலாண்டுக்கான வருவாயை அறிவிக்கத் தயாராகி வருகிறது.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+