இந்திய பொருளாதாரத்தின் முக்கிய தூணாக இருக்கும் ஐடி சேவைத் துறை கொரோனா தொற்று காலத்திலும், அதற்கு பிந்தைய காலத்திலும் அதிகப்படியான வர்த்தகத்தைப் பெற்றது. இதனால் போட்டி நிறுவனத்தில் இருந்ததெல்லாம் அதிக சம்பளத்திற்கு ஆட்களை எடுக்கும் நிலை உருவானது. ஆனால் 2023 ஆம் ஆண்டின் பிற்பகுதியில் இருந்து ஜூன் காலாண்டு வரையில் இந்திய ஐடி சேவைத் துறைக்குக் கிடைக்கும் புதிய வர்த்தகத்தின் எண்ணிக்கை பெரிய அளவில் குறைந்தது.
இந்த பிரச்சனையில் நீட்சியாக தற்போது இந்தியாவின் முன்னணி ஐடி சேவை நிறுவனங்களாக டிசிஎஸ், விப்ரோ, இன்போசிஸ், ஹெச்சிஎல் மற்றும் இந்தியாவில் அதிகப்படியான ஊழியர்களைக் கொண்டு இயங்கும் வெளிநாட்டு ஐடி சேவை நிறுவனமுமான ஐபிஎம், அக்சென்சர், கேப்ஜெமனி ஆகியவை வைத்திருக்கும் அதிக மதிப்புடைய ஐடி சேவை ஒப்பந்தங்கள் ரினிவல் செய்யப்பட உள்ளது.

இந்த ரினிவல் செய்யும் தருணத்தில் வெளிநாட்டு நிறுவனங்கள் இந்த ஐடி சேவை ஒப்பந்தத்தை தற்போது இருக்கும் அதே ஐடி நிறுவனத்திற்கும் கொடுக்கலாம் அல்லது மற்றொரு ஐடி நிறுவனத்திற்கும் மாற்றலாம். இதனால் இந்திய ஐடி சேவை நிறுவனங்களுக்கு ஜனவரி 2025 முதல் மார்ச் 2026 வரையில் மிகவும் இக்கட்டான காலகட்டமாக இருக்கப்போகிறது.
இதைவிட முக்கியமாக இந்தியாவில் பல வெளிநாட்டு நிறுவனங்கள் தனது ஜிசிசி அலுவலகத்தை அமைத்து வரும் வேளையில், இந்திய ஐடி சேவை நிறுவனங்களிடம் இருந்து மொத்தமாக ப்ராஜெக்ட்-ஐ திரும்ப பெற்று சொந்தமாக டெவலப்மென்ட் செய்யலாம்.
டாலர் மதிப்பு உயர்ந்தது ரூபாய் மதிப்பு குறைந்த காரணத்தால் இந்திய ஐடி சேவை நிறுவனங்களுக்கு அதிகளவிலான வருமானம் வருவது உண்மையாக இருந்தாலும், ரினிவல் செய்யப்படாமல் போகும் வர்த்தகம் மூலம் பெரும் பிரச்சனை வெடிக்கும் நிலை உருவாகியுள்ளது.
உதாரணமாக ஏதேனும் ஒரு நிறுவனம் பெரிய ஒப்பந்தத்தை ரினிவல் செய்ய முடியாமல் வர்த்தகத்தை இழந்தால் இது நேரடியாக நிறுவனத்தின் வருவாய், லாப அளவீடுகளைப் பாதிக்கும். இதன் எதிரொலியாக வேரியபிள் பே, சம்பள உயர்வு, ப்ரோமேஷன் போன்றவற்றை நிர்வாகம் குறைக்கும். இதேபோல் நிலைமை கையை மீறினால் ஐடி நிறுவனங்கள் பணிநீக்கம் செய்யவும் தயங்காது என்பதை தற்போதைய நிலை.
ஜனவரி 2025 முதல் மார்ச் 2026 வரையிலான காலத்தில் நீல்சன், ஜெராக்ஸ், பிரிட்டன் கோ ஆப்ரேட்டிவ் வங்கி, அமெரிக்காவின் கல்வி துறை, எதிஹாத் ஏர்வேஸ், TietoEvry, ஜூனிபர் நெட்வொர்க்ஸ், பேயர், மெட்ரோ குரூப் போன்ற பல முன்னணி நிறுவனங்களின் ப்ராஜெட் திட்டம் ரினிவல் செய்யப்பட உள்ளது. இதில் பெரும்பாலான திட்டம் 500 மில்லியன் டாலர் முதல் 1 பில்லியன் டாலர் வரையிலான மதிப்பை கொண்டது.


Click it and Unblock the Notifications