டிசிஎஸ், இன்போசிஸ் நிறுவனங்களை கண்டுக்கொள்ளாத இளைஞர்கள்.. இப்படியொரு விஷயம் நடக்குதா..?

இந்தியாவின் முன்னணி ஐடி சேவை நிறுவனங்களான டாடா கன்சல்டன்சி சர்வீசஸ் மற்றும் இன்ஃபோசிஸ் ஆகியவை மிகப்பெரிய பிரச்சனையை எதிர்கொண்டு வருகிறது. ஐடி துறை என்றால் இளம் தலைமுறையினர் அதிகம் பணியாற்றும் துறையாக இருந்த நிலை, தற்போது மொத்தமாக மாற்றி வருவது பலரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

டிசிஎஸ் மற்றும் இன்போசிஸ் நிறுவனத்தில் இளம் பணியாளர்களின் எண்ணிக்கையில் கடந்த 5 வருடத்தில் பெரிய அளவில் குறைந்துள்ளது. 30 வயதுக்குக் கீழ் உள்ள ஊழியர்களின் எண்ணிக்கை குறைந்து வருவது ஐடி சேவை துறையின் பிரபலமான ஊழியர்களின் பிரமிடு மாடலில் பெரிய ஓட்டையை போட்டுள்ளது என்று தான் சொல்ல வேண்டும்.

டிசிஎஸ், இன்போசிஸ் நிறுவனங்களை கண்டுக்கொள்ளாத இளைஞர்கள்..  இப்படியொரு விஷயம் நடக்குதா..?

இந்திய, குறிப்பாக தமிழ்நாட்டின் வேகமாக பொருளாதாரம், தனி நபர் வருமான வளர்ச்சிக்கு ஐடி சேவை துறை முக்கியமான காரணமாக இருந்த வேளையில் இந்த முக்கியமான மாற்றம் ஏன் நடக்கிறது..? இதன் விளைவுகள் என்ன..? என்பதை ஐடி ஊழியர்கள் மட்டும் அல்லாமல் படித்து பட்டம் பெற்ற மாணவர்கள், படித்துக்கொண்டு இருக்கும் மாணவப்கள் முதல் பெற்றோர்கள் வரை அனைவரும் தெரிந்துக்கொள்ள வேண்டும்.

டிசிஎஸ் மற்றும் இன்ஃபோசிஸ் இளம் பணியாளர்கள் எண்ணிக்கை:

2025 மார்ச் நிலவரப்படி, டிசிஎஸ் (TCS) நிறுவனத்தின் இந்திய பணியாளர்கள் எண்ணிக்கையில் வெறும் 47.7% ஊழியர்கள் மட்டுமே 30 வயதுக்குக் கீழ் உள்ளனர், இது 2022 நிதியாண்டில் 59% ஆக இருந்த நிலையில் தற்போது குறைந்துள்ளது.

இதேபோல், இன்ஃபோசிஸ் நிறுவனத்தில் 2025 நிதியாண்டு இறுதியில் 52% ஊழியர்கள் மட்டுமே 30 வயது அல்லது அதற்குக் கீழ் உள்ளனர், இது 2022-ல் 60% ஆக இருந்தது குறிப்பிடத்தக்கது.

டிசிஎஸ் மற்றும் இன்ஃபோசிஸ் நிறுவனத்தில் என்ன நடக்கிறது..?:

புதிதாக பட்டம் பெற்ற இளைஞர்கள், டிசிஎஸ் (TCS) மற்றும் இன்ஃபோசிஸ் போன்ற ஐடி சேவை நிறுவனங்களை விட, ஸ்டார்ட்அப் நிறுவனங்கள், கூகுள் மற்றும் மைக்ரோசாஃப்ட் போன்ற உலகளாவிய நிறுவனங்களின் தொழில்நுட்ப நிறுவனங்கள் மற்றும் ப்ராடெக் அடிப்படையிலான தொழில்நுட்ப நிறுவனங்களையே தற்போது அதிகம் விரும்புகின்றனர்.

இத்தகைய நிறுவனங்களில் அதிக ஊதியம், வேகமான கரியர் வளர்ச்சி, புதிய தொழில்நுட்பத்தை கற்றுக்கொள்ளும் வாய்ப்புகள், இன்னோவேஷன், தினமும் ஒரே பணியை செய்யக்கூடிய நிலை இல்லாமல் தினம் தினம் தீபாவளி என்பது போல் தினமும் ஒரு சேலஞ்ச் வழங்குவதால் இளைஞர்களை இப்பிரிவு நிறுவனங்கள் ஈர்க்கின்றன.

இதுக்குறித்து Fabevy நிறுவனத்தின் நிறுவனர் மற்றும் சிஇஓ-வான வேல்முருகன் கூறுகையில், "Startup நிறுவங்களுடன் ஒப்பிடும்போது TCS, Infosys போன்ற நிறுவனங்களில் ஒருவரின் Learning Curve முதல் மூன்று ஆண்டுகள் பெரிதாக இருக்காது. இங்கே Process & Practice க்குத்தான் முக்கியத்துவம் கொடுக்கப்படும். ஆனால் இன்றைய இளைஞர்கள் "Quick Growth" க்கு முக்கியத்துவம் கொடுக்கிறார்கள். மேலும், TCS, Infosys போன்ற நிறுவங்கள் Work From Home கொடுப்பதில்லை. முன்னர் போல Onsite வாய்ப்புகள் கொடுக்கப்படுவதில்லை" என தெரிவித்துள்ளார்.

இத்தகைய சூழ்நிலை இந்திய ஐடி சேவை துறை நிறுவனங்களில் இல்லை என்பது இளைஞர்கள் தரப்பில் இருக்கும் வாதம். இதேபோல் தொழில்நுட்ப சேவைகள் சந்தையில் ஏற்பட்டுள்ள மாற்றங்களும், ஆட்டோமேஷன் காரணமாக என்டரி லெவல் அதாவது Freshers-களை அதிகளவில் பணியில் அமர்த்துவது குறைந்துள்ளது தான் இத்தகைய சூழ்நிலைக்கு முக்கியமான காரணமாக உள்ளது.

ஐடி துறையின் நிலை: பொதுவாக ஐடி சேவை துறையில் ஆரம்பக்கட்ட பணிகளில் தான் பட்டதாரி மாணவர்களை அதிகம் பணியில் அமர்த்துவார்கள். ஆனால் தற்போது ஏஐ உதவியுடன் அதிகளவில் ஆட்டோமேஷன் செய்யப்பட்டு உள்ளதால் ஆரம்பக்கட்ட பணிகள் குறைந்து வருகிறது. இதனால் டிசிஎஸ், இன்போசிஸ் போன்ற நிறுவனங்கள் கல்லூரியில் இருந்து மாணவர்களை பணியில் அமர்த்துவது என்பது குறைந்துவிட்டது.

மேலும் டிசிஎஸ், இன்போசிஸ் போன்ற நிறுவனங்களுக்கு பிரஷ்ஷர்களை பணியில் அமர்த்துவது மூலம் கூடுதல் லாபம் கிடைக்கும், அனுபவமிக்க ஒரு ஊழியர்களுக்கு கொடுக்கப்படும் சம்பளத்தில் சிறிய அளவே பிரஷ்ஷர்களுக்கு கொடுக்கப்படும். இதனால் இந்நிறுவனங்களின் லாப வரம்பு அதாவது Profit Margin அதிகரிக்கும், ஆயினும் பிரஷ்ஷர்களை நியமிப்பதை குறைத்து வருகிறது கவனிக்க வேண்டியதாக உள்ளது.

டிசிஎஸ், இன்போசிஸ் நிறுவனங்கள் 2025ஆம் நிதியாண்டில் 24.3% மற்றும் 22.1% அளவிலான ஆப்ரேட்டிங் லாப வரம்பு பதிவு செய்துள்ளது.

கடைசியாக டிசிஎஸ், இன்போசிஸ் போன்ற பெரிய நிறுவனங்களில் இளம் பணியாளர்கள் குறைந்துள்ளது என்பது நீண்ட கால அடிப்படையில் பாதிப்பை எற்படுத்தும் ஒரு விஷயமாகவே உள்ளது. இதை எப்படி ஐடி சேவை துறை சரி செய்யப்போகிறது என்பது தான் தற்போதைய முக்கிய சவால்.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+