செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தின் வளர்ச்சிக்கு பின்பு ஒட்டுமொத்த ஐடி மற்றும் டெக் சேவைகள் வேகமாக மாறி வரும் சூழ்நிலையில், இந்திய ஐடி சேவை நிறுவனங்கள் இதற்கு ஏற்றார் போல் மாறி வருகிறது.
முன்பெல்லாலம் வெறும் கோடிங் தெரிந்திருந்தால் மட்டும் போதும் என்ற நிலை இருந்தது, ஆனால் இப்போது நிலைமை மொத்தமாக மாறியுள்ளது. ஒவ்வொரு நிறுவனமும் ஊழியர்கள் ஏஐ தொழில்நுட்பத்துடன் பணியாற்ற தெரிந்திருக்க வேண்டும் என்ற எதிர்பார்ப்பை புதிய ஊழியர்களிடம் வைக்க துவங்கியுள்ளது.

இதேபோல் ஒவ்வொரு ஐடி சேவை நிறுவனமும் தற்போது ஏஐ பிரிவு திட்டத்தையும், வருமானத்தையும் பெறுவதை முக்கிய இலக்காக வைத்திருக்கும் வேளையில், இந்திய ஐடி நிறுவனங்கள் Forward-Deployed Engineers (FDEs) எனப்படும் புதிய வகை டெக் இன்ஜினியர்களுக்கு அதிகப்படியான டிமாண்ட் உருவாகியுள்ளது.
ஆனால், இதில் முக்கியமான பிரச்சனை உள்ளது. 2030ஆம் ஆண்டுக்குள் FDE திறன் கொண்ட ஊழியர்களுக்கான டிமாண்ட் 88 சதவீதம் வரையில் அதிகரிக்கும் என கணிக்கப்பட்டு உள்ள நிலையில், இந்தியாவில் தற்போது வெறும் 1 சதவீத டெக் இன்ஜினியர்கள் மட்டுமே இத்திறன் கொண்டு உள்ளனர்.
FDE பணி என்பது எளிதாக பெறக்கூடிய திறனில்லை, இதேபோல் இந்த பிரிவில் அமர்த்தப்படுபவர்கள், வாடிக்கையாளர் அதாவது ஐடி சேவை பெறும் நிறுவனத்திற்கே நேரடியாகச் சென்று அவர்களின் தேவையின் அடிப்படையில் ஏஐ தொழில்நுட்பத்தைதின் மூலம் சாப்ட்வேர் சேவையில் மாற்றங்களை செய்து செயல்படுத்த வேண்டும்.
இதேபோல் வாடிக்கையாளர் நிறுவனம் தனது வர்த்தகத்தில் எதிர்கொள்ளும் பிரச்சனைகளுக்கு தீர்வு காண வேண்டும். முன்பெல்லாம் இத்தகைய பணியை பெரும் ஊழியர்கள் படை கொண்டு செய்யப்படும் வேளையில் தற்போது ஏஐ உதவியுடன் FDE இன்ஜினியர்கள் சிறிய அணியை கொண்டு செய்ய வேண்டும்.
மேலும் ஐடி நிறுவனங்கள் காலம் காலமாக கல்லூரி மாணவர்களை தேர்வு செய்து அவர்களுக்கு பயிற்சி அளித்து அதன் மூலம் FDE இன்ஜினியர்களை உருவாக்க முடியாது, இந்த பதவியில் அமரும் நபர் நேரடி ப்ராஜெக்ட் அனுபவம், தொழில்நுட்ப அறிவு, வணிகப் புரிதல் ஆகியவை 3 அவசியம். இதை தாண்டி தற்போதை செயல்பாட்டில் இருக்கும் ஏஐ மாடல்களை வைத்து பணியாற்றும் திறனும் பெற்று இருக்க வேண்டும்.
ஏஐ வர்த்தகத்திற்கு இத்தகைய FDE இன்ஜினியர்கள் மிகவும் அவசியம் என்பதால் இந்திய ஐடி நிறுவனங்கள் ஏஐ திட்டம் கிடைகிறதோ இல்லையோ சந்தையில் இருக்கும் திறமையானவர்களைத் தேர்வு செய்து பணியில் அமர்துவதில் மிகுந்த ஆர்வத்துடன் உள்ளது.
சொல்லப்போனால் இப்பணியில் செல்பவர்கள் தான் ஐடி நிறுவனங்களுக்கே பாடம் புகட்ட உள்ளனார்கள். காரணம் இந்து இந்திய ஐடி நிறுவனங்களுக்கும் புதுசு கண்ணா புதுசு.


Click it and Unblock the Notifications