இந்தியாவில் இயங்கி வரும் முன்னணி தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள் கடந்து மார்ச் காலாண்டில் சில புதிய ஊழியர்களை பணிக்கு நியமித்துள்ளன. ஒட்டுமொத்த பணியாளர் எண்ணிக்கையை பார்க்கும் போது இதில் சிறிய அளவிலான அதிகரிப்பு மட்டுமே தென்படுகிறது. உலகளாவிய பொருளாதார நிச்சயமற்ற நிலைக்கு மத்தியில் தொழில்துறையின் எச்சரிக்கையான அணுகுமுறையை இதை வைத்தே தெரிந்து கொள்ளலாம்.
டாடா கன்சல்டன்சி சர்வீசஸ் (டிசிஎஸ்), இன்ஃபோசிஸ் மற்றும் விப்ரோ ஆகிய நிறுவனங்கள் நான்காவது காலாண்டில் சுமார் 1438 புதிய ஊழியர்களை நியமித்துள்ளன. இது முந்தைய காலாண்டில் இந்த 3 நிறுவனங்களில் ஏற்பட்ட 936 ஊழியர்கள் குறைப்பை சற்று அதிகரித்துள்ளது. டிசிஎஸ் 625 புதிய ஊழியர்களை நியமித்து முதல் இடத்தில் இருக்கிறது. அதை தொடர்ந்து விப்ரோ 614 ஊழியர்களை நியமித்துள்ளது. இன்ஃபோசிஸ் 199 பணியாளர்களை நியமித்துள்ளது.

குறையும் பணியமற்றல் வேகம்: புதிதாக வேலைக்கு ஆட்களை எடுக்கும் எண்ணிக்கை இதற்கு முன்னர் இருந்த தீவிரமான பணியமர்த்தல் செயல்முறையிலிருந்து மாறியுள்ளது. முன்பு இந்தியாவில் இயங்கி வந்த முன்னணி தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள் அதிக அளவிலான ஊழியர்களை வேலைக்கு எடுத்தன. ஆனால் இப்போது இந்த வேகம் குறைந்து வருகிறது.
இந்தியாவில் இயங்கு வரும் முன்னணி ஐந்து தொழில்நுட்ப நிறுவனங்கள் 2587 ஊழியர்களை வேலையை விட்டு பணி நீக்கம் செய்துள்ளன. அதற்கு முந்தைய காலண்டான செப்டம்பர் காலாண்டில் 15,033 புதிய ஊழியர்கள் நியமிக்கப்பட்டிருந்தனர்.
2025-ஆம் நிதியாண்டு முழுவதும் எடுத்துக் கொண்டால் டிசிஎஸ், இன்ஃபோசிஸ் விப்ரோ ஆகிய மூன்று பெரிய நிறுவனங்களும் சேர்ந்து மொத்தமாக வேலைக்கு எடுத்த ஊழியர்களின் எண்ணிக்கை 13,503. ஆனால் இந்த எண்ணிக்கை 2024-ஆம் நிதியாண்டில் 64,000-ஆக இருந்தது. அதோடு ஒப்பிடுகையில் இந்த முறை சற்று குறைவான ஊழியர்கள் தான் நியமிக்கப்பட்டனர்.
இந்தப் பெரிய பணியமர்த்தல் விழிச்சிக்கு காரணம் உலக அளவில் பொருளாதார நிச்சயமற்ற தன்மை நிலவி வருகிறது. அதோடு பணவீக்க பிரச்சினைகள், பல நாடுகள் சேர்ந்து புதிய தொழில்நுட்பங்களில் அதிகம் முதலீடு செய்ய தயக்கம் காட்டுவது என இந்தியா ஐடி துறையின் வருமானம் குறைந்து வருகிறது. இதுவும் பணியமர்த்தல் செயல்முறையில் நிறுவனங்கள் தயக்கம் காட்ட ஒரு காரணமாக உள்ளது.
ட்ரம்பின் வர்த்தக வரி, ஆர்டிபிசியல் இன்டெலிஜென்ஸ் தொழில்நுட்பத்தின் வளர்ச்சி என பல்வேறு விஷயங்கள் IT துறையை கடுமையாக பாதித்துள்ளன. ஆர்டிபிசியல் இன்டெலிஜென்ஸ் தொழில்நுட்பத்தின் அபார வளர்ச்சி காரணமாக மனிதர்கள் செய்யக்கூடிய பல வேலைகளை AI செய்கிறது. இதனால் அதற்கு முன்னர் தேவைப்பட்ட ஊழியர்கள் தற்போது தங்கள் வேலையை இழந்துள்ளனர். நிறுவனங்கள் அதிகம் தொழில்நுட்பத்தை பயன்படுத்த தொடங்கி விட்டதால் புதிய ஆட்களை எடுப்பதும் குறைந்து வருகிறது.
ஸ்டாப்பிங் ஃபிர்ம் என்ற நிறுவனத்தின் அறிக்கையின்படி, 2025-ஆம் நிதியாண்டின் நான்காவது காலாண்டில் தொழில்நுட்ப திறமையுள்ள ஊழியர்களுக்கான தேவை அதற்கு முந்தைய காலாண்டான அக்டோபர் முதல் டிசம்பர் வரையிலான மாதங்களுடன் ஒப்பிடும்போது கிட்டத்தட்ட 20 சதவீதம் குறைந்துள்ளதாக தெரிவித்துள்ளது.
பிப்ரவரி மாதம் நிறுவனங்கள் வேகமாக பணியமர்த்தத் தொடங்கியது. ஆனால் மார்ச் மாதத்தில் பணியமர்த்தும் வேகம் சற்று குறைந்தது. Xpheno என்ற நிறுவனம் சேகரித்த தகவலின்படி பிப்ரவரி மாதம் 80,000 பேரை பணியமர்த்திய நிறுவனங்கள்.. மார்ச் மாதம் 55,000-ஆக ஊழியர் எண்ணிக்கையை குறைத்துள்ளதாக தெரிவித்துள்ளது. இது ஒரு மாதத்திலேயே ஏற்பட்ட மிகப்பெரிய சரிவை சுட்டிக்காட்டுகிறது.
ஏன் ஸ்டார்ட் அப் நிறுவனங்களும் இதே நிலையில் தான் உள்ளன. இதற்கு முன்னர் பணியமர்த்திய ஊழியர் எண்ணிக்கையை விட மார்ச் மாதம் 25,000 ஊழியர்களாக எண்ணிக்கை குறைந்துள்ளது. இனிவரும் காலங்களில் இந்த நிலை மாறுமா? அதிகளவிலான ஊழியர்கள் பணியமர்த்தப்படுவார்களா? தற்போது நிலவும் நிச்சயமற்ற தன்மை சீராகுமா? என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.


Click it and Unblock the Notifications