உலகளவில் வேகமாக வளர்ச்சி அடைந்து வரும் செயற்கை தொழில்நுட்ப துறையில் அதிகப்படியான வர்த்தகத்தை பெற வேண்டும் என்பதற்காக முன்னணி டெக் சேவை நிறுவனங்கள் இத்துறையில் ஆர்வமாக இறங்கி வகும் வேளையில், இந்திய டெக் சேவை துறையில் முன்னணி நிறுவனமாக இருக்கும் Mphasis, AI சேவை அளிப்பதற்காக தனி பிரிவை உருவாக்கியுள்ளது.
இந்திய ஐடி சேவை நிறுவனமான Mphasis இன்று தனது புதிய AI சேவை பிரிவான Mphasis.ai அறிமுகம் செய்தது. இந்த பிரிவின் வாயிலாக உலகளாவிய நிறுவனங்களுக்கு Generative Artificial Intelligence (AI) தொழில்நுட்பத்தின் கீழ் சேவையை அளிக்க உள்ளது. இதன் மூலம் தனது வர்த்தக வாய்ப்புகளை கூடுதலாக விரிவாக்கம் செய்ய உள்ளது Mphasis நிறுவனம்.

Mphasis முதல் கட்டமாக தற்போது இருக்கும் அனைத்து வர்த்தகம், தொழிற்துறை, வர்த்தகம், வாடிக்கையாளர்கள் உடன் Mphasis.ai இணைத்து கூடுதலான சேவைகளையும், வர்த்தகத்தை உருவாக்க உள்ளது. இதன் மூலம் Mphasis நிறுவனத்தின் வாடிக்கையாளர் சேவை மற்றும் இயக்க அளவுகள் பெரிய அளவில் மேம்படும் என அறிவித்துள்ளது.
சமீபத்தில் இன்போசிஸ் நிறுவனம் TOPAZ என்ற செயற்கை நுண்ணறிவு தளத்தை உருவாக்கி அறிமுகம் செய்துள்ளது. இது ஜெனரேட்டிவ் AI தொழில்நுட்பத்தில் இயங்கும் முதல் தலைமுறை சர்வீசஸ், சொல்யூஷன்கள் மற்றும் பிளாட்பார்ம் ஆக விளங்க உள்ளது. TOPAZ தளத்தின் மூலம் அடுத்த தலைமுறை தொழில்நுட்ப வாய்ப்புகளை 360 கோணத்திலும் பெற உள்ளது.
இன்போசிஸ் கோபால்ட் கிளவுட் மற்றும் டேட்டா அனலிட்டிக்ஸ் இணைப்பின் சக்தி தான் Infosys Topaz. இதன் மூலம் வாடிக்கையாளர்களுக்கு மட்டும் அல்லாமல் இன்போசிஸ் உள் நிர்வாகத்திற்கும் பல்வேறு தீர்வுகளை அளிக்கிறது. இது இன்போசிஸ் நிறுவனத்தின் வர்த்தகம் மற்றும் வருமான வளர்ச்சிக்கு புதிய பாதையாக அமையும்.
இதேபோல் டாடா கன்சல்டன்சி சர்வீசஸ் உலகளவில் வேகமாக வளர்ந்து வரும் ChatGPT-க்கு இணையான ஒரு AI Genarative தொழில்நுட்பத்தை உருவாக்கி அதை enterprise code generation-க்கான பயன்படுத்த உள்ளதாக டிசிஎஸ் தலைமை செயல் அதிகாரியான என் கணபதி சுப்பிரமணியம் தெரிவித்துள்ளார்.

இப்புதிய ப்ராஜெக்ட் மிகவும் ஆரம்பக்கட்டத்தில் தான் உள்ளது, இதை டிசிஎஸ் நிறுவனத்தின் மிகப்பெரிய இன்டர்னல் கோடு, டேட்டா, ரிசோர்ஸ்-க்கு பயன்படுத்த முடியுமான என்பதை ஆய்வு செய்ய வேண்டும். இந்த புதிய தொழில்நுட்பத்தை மொத்தமாக சொந்த ஆல்காரிதம் அடிப்படையில் உருவாக்கப்பட்டு உள்ளது.
இப்படி டிசிஎஸ், இன்போசிஸ், விப்ரோ தொடர்ந்து Mphasis-ம் AI துறையில் நுழைந்தது மூலம் பல புதிய வேலைவாய்ப்புகள் இத்துறையில் கிடைக்கும், ஆனால் இதற்கான திறமையான ஊழியர்கள் சந்தையில் இருக்கிறார்களா என்பது தான் மிகவும் முக்கியமான விஷயம். இத்துறையில் திறமையை வளர்த்துக்கொண்டால் ஓகோன்னு இருக்கலாம் என்பது சந்தை வல்லுனர்களின் கருத்து.
More From GoodReturns

வேலையை விட போறீங்களா? ஏப்ரல் 1 வரை வெயிட் பண்ணுங்க..!! சட்டமே மாறுது.. ஊழியர்கள் கை ஓங்க போகுது!!

மாருதி சுசூகி கார் வைத்திருப்பவர்களுக்கு ஜாக்பாட்.. வந்தது Quickstop சேவை.. பட்டுபட்டுன்னு வேலை முடியும்..!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

மக்களுக்கு பெரும் ஏமாற்றம்.. மத்திய அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு..!!

SGB: தங்க பத்திரம் வாங்கியுள்ளீர்களா.. முதல்ல இதை படிங்க.. ஏப்ரல் 1 முக்கியமான நாள்..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

UPI -இல் பணம் அனுப்ப புதிய விதிமுறை: ஏப்ரல் 1 முதல் வருகிறது மேஜர் மாற்றம்!! மக்களே உஷார்!!

இந்தியாவுக்கு கிரீன் சிக்னல் கொடுத்த ஈரான்..!! 6 ஆண்டுகளில் இல்லாத முடிவினை எடுத்த மோடி அரசு..!!

அமெரிக்கா–ஈரான் பதற்றம்: முதலீட்டாளர்களுக்கு புதிய “ரிவர்ஸ்” ஸ்ட்ராடஜி சொன்ன ஈரான் தலைவர்..!!

டிரம்புக்கு ஈரான் தந்த ரகசிய பரிசு என்ன தெரியுமா? : அவரே சொல்லிட்டாரு..!!



Click it and Unblock the Notifications