டாடா கன்சல்டன்சி சர்வீசஸ் (TCS), இன்ஃபோசிஸ், விப்ரோ போன்ற இந்தியாவின் முன்னணி ஐடி சேவை நிறுவனங்கள் கடந்த நிதியாண்டில் (FY24) சுமார் 64,000 ஊழியர்கள் வெளியேறியுள்ளதாக அதிர்ச்சி தரும் தகவல் வெளியிட்டு உள்ளது. டாப் ஐடி நிறுவனங்கள் பட்டியலில் இன்னும் ஹெச்சிஎல் மற்றும் டெக் மஹிந்திரா தனது காலாண்டு முடிவுகளை வெளியிட வேண்டியுள்ளது.
இந்திய ஐடி துறை: 254 பில்லியன் டாலர் மதிப்புள்ள இந்தியாவின் ஐடி சேவை துறை, உலகளாவிய பொருளாதார தடுமாற்றம் மற்றும் புவிசார் அரசியல் மோதல்களால் பாதிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக, வாடிக்கையாளர்கள் ஐடி செலவினங்களில் கவனமாக இருந்து வருகின்றனர்.

விப்ரோ: வெள்ளிக்கிழமை தனது காலாண்டு முடிவுகளை வெளியிட்ட விப்ரோ நிறுவனம், மார்ச் 2024 நிலவரப்படி தனது பணியாளர் எண்ணிக்கை 2,34,054 ஆக குறைந்துள்ளதாக அறிவித்துள்ளது. கடந்த ஆண்டு மார்ச் மாதத்தில் இந்த எண்ணிக்கை 2,58,570 ஆக இருந்தது. இதன் மூலம், கடந்த நிதியாண்டில் மட்டும் விப்ரோ நிறுவனத்தில் 24,516 பணியாளர்கள் குறைந்துள்ளனர்.
இன்ஃபோசிஸ்: இந்தியாவின் இரண்டாவது மிகப்பெரிய ஐடி சேவை ஏற்றுமதி நிறுவனமான இன்ஃபோசிஸ் நிறுவனத்திலும் பணியாளர் எண்ணிக்கையில் சரிவு ஏற்பட்டுள்ளது. மார்ச் 2024 நிலவரப்படி, மொத்த பணியாளர் எண்ணிக்கை 317,240 ஆக உள்ளது. இது கடந்த ஆண்டு மார்ச் மாதத்தில் இந்த எண்ணிக்கை 343,234 ஆக இருந்தது. இதன் மூலம், கடந்த ஒரு ஆண்டில் இன்ஃபோசிஸ் நிறுவனத்தில் 25,994 பணியாளர்கள் குறைந்துள்ளனர். அதே சமயம், நிறுவனத்தின் பணியாளர் வெளியேற்ற விகிதம் (attrition rate) 12.6% ஆக உள்ளது.
டிசிஎஸ்: இந்திய ஐடி சேவை துறையில் முன்னணியில் இருக்கும் TCS நிறுவனத்திலும் பணியாளர் எண்ணிக்கையில் குறைவு ஏற்பட்டுள்ளது. கடந்த நிதியாண்டை ஒப்பிடுகையில் TCS நிறுவனத்தின் பணியாளர் எண்ணிக்கை 13,249 குறைந்து 601,546 ஆக உள்ளது.
சர்வதேச பொருளாதாரம் மந்தமாக இருக்கும் காரணத்தால் ஐடி சேவைக்கான டிமாண்ட் பெரிய அளவில் குறைந்துள்ளது. இந்த நிலையில் அமெரிக்க மத்திய வங்கி தனது வட்டி விகிதத்தை குறைத்தால் சரியாகிவிடும் என கணிக்கப்பட்ட நிலையில் பணவீக்க உயர்வு தொடர்ந்து பெரும் பிரச்சனையாக உள்ளது.
இதனால் இந்த ஆண்டு ஐடி துறையில் புதிய வேலைவாய்ப்புகளின் எண்ணிக்கை குறைவாகத் தான் இருக்கும், தொடர்ந்து ஊழியர்கள் எண்ணிக்கை குறைவதற்கான வாய்ப்புகள் அதிகமாக உள்ளது. உலகளவில் நிலவும் மந்தமான தேவை மற்றும் வாடிக்கையாளர்களின் கட்டுப்பாடான தொழில்நுட்ப செலவீனம் சூழ்நிலையே டாப் ஐடி நிறுவனங்களில் ஊழியர்கள் எண்ணிக்கை குறைவாகியுள்ளது.
ஐடி நிறுவனத்தில் ஊழியர்கள் எண்ணிக்கை குறைந்துள்ளது என்பது பணிநீக்கம் செய்யப்பட்டதன் மூலம் நடக்கவில்லை, இந்தியாவின் முன்னணி ஐடி நிறுவனங்கள் அனைத்தும் புதியதாக ஊழியர்களை பணியில் சேர்க்காமல், பென்ச்சில் இருக்கும் ஊழியர்களை அதிகளவில் பயன்படுத்தி வருகிறது, இதனால் ஊழியர் பயன்பாட்டு விகிதம் அதிகரித்துள்ளது.
மேலும் நிறுவனத்தை விட்டு வெளியேறிய ஊழியர்களின் இடத்தில் பென்ச் ஊழியர்களை நியமிக்கப்பட்டும், அவர்களுக்கும் புதிய தொழில்நுட்பத்தில் பயிற்சி அளிக்கப்பட்டும் வருவதால் அட்ரிஷன் விகிதமும் குறைந்துள்ளது.
More From GoodReturns

ஆனந்த் ஸ்ரீனிவாசன்: படிச்சு படிச்சு சொன்னேன்.. யாரும் கேட்ல 'Big Drop'.. வெள்ளி அதோ கதி..!!

தங்கம் விலை - 40 ஆண்டுகளில் இல்லாத வீழ்ச்சி.. இந்திய மக்களுக்கு அடித்தது ஜாக்பாட்..!

அமெரிக்க வங்கி வேலைக்கு டாட்டா.. வீட்டை விற்றுவிட்டு குடும்பத்துடன் உலகம் சுற்றும் IIT இளைஞர்!

கிடுகிடுவென சரியும் தங்கம், வெள்ளி விலை! இது வாங்குவதற்கு சரியான நேரமா? நிபுணர்களின் அதிரடி ஆலோசனை!

கோயம்புத்தூரா கொக்கா..!! சத்தமே இல்லாமல் சாதித்த கோவை..!!பெங்களூர்லாம் பக்கத்துலயே வர முடியாது!!

ஒட்டுமொத்த அமெரிக்காவுக்கும் ஷாக் கொடுத்த எலான் மஸ்க்.. டிரம்ப்-க்கு சவாலா..? யாரு சாமி நீ..?!

வறுமையை வென்று சாதனை படைத்த பொன்னரசி! லட்சங்களில் டர்ன் ஓவர்! முருங்கை டூ மல்டிநேஷனல் பிசினஸ்!

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

வேலையை விட போறீங்களா? ஏப்ரல் 1 வரை வெயிட் பண்ணுங்க..!! சட்டமே மாறுது.. ஊழியர்கள் கை ஓங்க போகுது!!

தங்கம் விலை ரூ.17,000 சரிவு: ஈரான் போரால் தங்க சந்தையில் ஏற்பட்ட மாற்றம்..! இந்த வாரமும் விலை குறையுமா?

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!



Click it and Unblock the Notifications