இந்தியாவின் முன்னணி ஐடி நிறுவனங்களான டிசிஎஸ், இன்ஃபோசிஸ், விப்ரோ, ஹெச்சிஎல் டெக் போன்ற தொழில் நுட்ப நிறுவனங்கள் முந்தைய ஆண்டினை காட்டிலும், 2023ம் ஆண்டில் பல சிக்கல்களை எதிர்கொண்டு வருகின்றன.
குறிப்பாக சர்வதேச அளவில் நிலவி வரும் மந்த நிலைக்கு மத்தியில் பணவீக்கம், மேக்ரோ பொருளாதார மந்தம் ஆகியவற்றிற்கு மத்தியில், ஐடி நிறுவனங்கள் சிக்கலை எதிர்கொள்ளலாம்.

ஐடி துறையில் நிலவி வரும் இந்த பிரச்சனையால் பணியமர்த்தல் குறையலாம். புதிய ஆன்போர்டிங்கும் குறையலாம்.
நடப்பு ஆண்டில் இதுவரையில் தொடர்ந்து மந்த நிலையில் இருந்து வரும் நிலையில், இந்த போக்கு இன்னும் சிறிது காலத்திற்கு தொடரலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இதன் காரணமாக பணியமர்த்தல் தாக்கம் இருக்கலாம். சம்பள அதிகரிப்பு என்பது குறையலாம். சொல்லப்போனால் சம்பள குறைப்பு என்பது இருக்கலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
குறிப்பாக இந்தியாவின் முன்னணி ஐடி நிறுவனங்களான டிசிஎஸ், இன்ஃபோசிஸ், விப்ரோ, ஹெச் சி எல் டெக், டெக் மகேந்திரா உள்ளிட்ட நிறுவனங்களின் பணியமர்த்தலானது குறையலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதே போல ஊழியர்களுக்கு வழங்கப்படும் வேரியபிள் பே என்பதும் குறையலாம். நிறுத்தப்படலாம். ஏற்கனவே சர்வதேச அளவில் நிலவி வரும் நெருக்கடிக்கு மத்தியில் பெரும்பாலான நிறுவனங்கள் இந்த வேரியபிள் பேவினை தற்காலிக நிறுத்தியுள்ளன.
லார்ஜ் கேப் நிறுவனங்களில் 85 - 100% அளவுக்கு முடக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இது நிறுவனங்களின் வருவாயை பொறுத்து இருக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஏற்கனவே ஐடி நிறுவனங்கள் பலவும் நிலவி வரும் நெருக்கடியான நிலைக்கு மத்தியில், பணி நீக்க நடவடிக்கையில் இறங்கியுள்ளன. இந்த நிலையில் மீண்டும் மொத்த ஊழியர்களின் எண்ணிக்கையை குறைக்கலாம் என்ற அச்சமும் பல தரப்பினர் மத்தியில் இருந்து வருகின்றது.
கேம்பஸ் மூலமாக தேர்தெடுக்கப்பட்டவர்கள், புதியதாக வேலைக்கு அமர்த்துவதில் ஏற்கனவே தாமதம் நிலவி வரும் நிலையில், மேற்கொண்டு புதிய பணியமர்த்தலும் குறையலாம். இது மேற்கொண்டு ஐடி துறையில் தாக்கத்தினை ஏற்படுத்தலாம்.

மொத்தத்தில் ஐடி துறையில் நிலவி வரும் நெருக்கடியான நிலைக்கு மத்தியில், பல்வேறு பிரச்சனைகளை எதிர்கொள்ளலாம்.


Click it and Unblock the Notifications