இந்தியாவில் வேலை செய்ய சிறந்த நிறுவனங்கள் எவை.. டாப் லிஸ்டில் டிசிஎஸ், இன்ஃபோசிஸ், விப்ரோ..!

இந்தியாவில் வேலை செய்ய சிறந்த நிறுவனங்களின் பட்டியலை லிங்க்ட்இன் வெளியிட்டுள்ளது.

மொத்தம் வேலை செய்ய சிறந்த 25 நிறுவனங்களின் பட்டியலை லிங்க்ட் இன் வெளியிட்டுள்ளது. இதில் முன்னணி ஐடி நிறுவனங்களான டிசிஎஸ், இன்ஃபோசிஸ், விப்ரோ மற்றும் தனியாரினை சேர்ந்த முன்னணி வங்கியான ஹெச்டிஎஃப்சி வங்கியும் இடம்பெற்றுள்ளது.

ஐந்தாவது ஆண்டாக வெளியிடப்பட்டுள்ள இந்த அறிக்கையானது, இது நிறுவனங்கள் திறமையான ஊழியர்களை பணியமர்த்துவதை காட்டிலும், ஊழியர்களின் திறமைகளில் முதலீடு செய்யும் நிறுவனங்களை கண்டறியவும் உதவுகின்றன.

பல அம்சங்கள்

பல அம்சங்கள்

லிங்க்ட்இன்-னின் இந்த தரவுகள், ஊழியர்களுக்கு ஒரு அடித்தளத்தை உருவாக்க உதவும் என்றும் கூறப்படுகின்றது. லிங்க்ட் இன்னின் இந்த ஆய்வானது ஏழு முக்கிய அம்சங்களைக் கொண்டுள்ளது. இது முன்னேறும் திறன், திறன் வளர்ச்சி, நிறுவனத்தின் ஸ்திரத்தன்மை, வெளிப்புற வாய்ப்புகள், நிறுவனத்தின் தொடர்புகள், பாலின வேறுபாடு மற்றும் கல்வி பின்னணி என்றும் பல அம்சங்களையும் கொண்டுள்ளது.

டிசிஎஸ் பெர்பார்மன்ஸ்

டிசிஎஸ் பெர்பார்மன்ஸ்

டிசிஎஸ் நிறுவனம் இந்த டாப் பட்டியலில் முதலிடத்தில் உள்ளது. இந்த நிறுவனத்தின் மொத்த ஊழியர்களின் எண்ணிக்கையானது, மற்ற ஐடி நிறுவனங்களின் எண்ணிக்கையை விட அதிகம். தற்போதைய நிலவரப்படி டிசிஎஸ் நிறுவனத்தின் ஊழியர்களின் எண்ணிக்கையானது கிட்டதட்ட 4.7 லட்சமாகும். இந்த நிறுவனம் 2025ல் 75% ஊழியர்களை தொலைதூரத்தில் பணியாற்றுவதை நோக்கமாகக் கொண்டுள்ளது. மேலும் கடந்த ஆறு மாதங்களில் டிசிஎஸ் தனது ஊழியர்களுக்கு இரு முறை சம்பள உயர்வினை அறிவித்துள்ளது. எல்லாவற்றுக்கும் மேலாக மார்ச் காலாண்டில் attrition விகிதம் 7.2% ஆக அதிகரித்துள்ளது.

அசெஞ்சரில் என்ன நிலவரம்

அசெஞ்சரில் என்ன நிலவரம்

லிங்க்ட்இன்-னின் இந்த பட்டியலில் மூன்றாவது இடத்தில் அசெஞ்சர் உள்ளது. இதன் வருவாயானது கொரோனாவுக்கு முந்தைய நிலையை எட்டியுள்ளது. டிஜிட்டல் தேவையானது அதிகரித்து வரும் நிலையில், இந்த நிறுவனத்தின் அவுட்சோர்சிங் வருவாயானது அதிகரிப்பினை கண்டுள்ளது.

அடுத்தடுத்த இடங்கள்

அடுத்தடுத்த இடங்கள்

கட்டுமான துறையை சேர்ந்த முன்னணி நிறுவனமான லார்சன் & டூப்ரோ நான்காவது இடத்தினை பிடித்துள்ளது. இதனை தொடர்ந்து ஐடி துறையை சேர்ந்து இன்ஃபோசிஸ் நிறுவனம் இந்த ஆண்டில் கிட்டதட்ட 26,000 பேரை பணியமர்த்த திட்டமிட்டுள்ளது. இதே மேனேஜ்மென்ட் ஆலோசனை நிறுவனமான டெலாய்ட், ஆறாவது இடத்தினை பெற்றுள்ளது. இந்த நிறுவனம் அடுத்த மூன்று ஆண்டுகளில் இந்தியாவில் 75,000 கூடுதல் வேலை வாய்ப்புகளை உருவாக்க திட்டமிட்டுள்ளது.

விப்ரோவின் பணியமர்த்தல்

விப்ரோவின் பணியமர்த்தல்

இதற்கடுத்தாற்போல் EY நிறுவனம் உள்ளது. இந்த நிறுவனம் நடப்பு ஆண்டில் 9,000 பேரை பணியமர்த்த திட்டமிட்டுள்ளது. இதே ஐடி நிறுவனமான விப்ரோ பட்டியலில் எட்டாவது இடத்தில் உள்ளது. இந்த நிறுவனம் நடப்பு ஆண்டில் அதிக பணியமர்த்தலை செய்யும் என்றும் கூறியுள்ளது.

அமேசானின் பிரம்மாண்ட திட்டம்

அமேசானின் பிரம்மாண்ட திட்டம்

ஈ-காமர்ஸ் நிறுவனமான அமேசான் இந்தியா, ஒன்பதாவது இடத்தில் உள்ளது. கடந்த ஆண்டில் 3 லட்சத்திற்கும் மேற்பட்ட வேலை வாய்ப்புகளை உருவாக்கியுள்ளதாக அறிவித்துள்ளது. இது மேலும் 2025ல் 1 மில்லியன் வேலை வாய்ப்புகளை உருவாக்க திட்டமிட்டுள்ளது.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+