இந்திய ஐடி துறையை கலங்கடித்துள்ள பன்னாட்டு நிறுவனங்களின் இந்திய கிளைகளான குளோபல் கேபிலிட்டி சென்டர்கள் (GCCs), தற்போது இன்போசிஸ், டிசிஎஸ், விப்ரோ ஊழியர்களை ஈர்க்கும் வகையில் அதிகளவிலான சம்பள உயர்வை அறிவிக்க தயாராகி உள்ளது.
2024 ஆம் ஆண்டு முடிந்தது மட்டும் அல்லாமல் 2025 ஆம் நிதியாண்டு முடிய இன்னும் 3 மாதங்களாக இருக்கும் வேளையில், அனைத்து மாத சம்பளக்காரர்களும் இந்த வருடத்திற்கான சம்பள உயர்வை எதிர்பார்த்து காத்திருக்கும் வேளையில் ஐடி ஊழியர்களை குஷிப்படுத்தும் முக்கியமான தகவல் வெளியாகியுள்ளது.

இந்தியாவின் முன்னணி ஐடி சேவை நிறுவனங்களான டிசிஎஸ், இன்போசிஸ், விப்ரோ, ஹெச்சிஎல் போன்ற நிறுவனங்களை காட்டிலும் அதிக சம்பள உயர்வை இந்த ஆண்டு GCC நிறுவனங்கள் வழங்க தயாராக உள்ளன. இந்த தகவல் ஐடி சேவை துறையில் பெரும் கிளர்ச்சியை உருவாக்கியுள்ளது. ஏற்கனவே ஐடி துறையில் பிரஷ்ஷர்களுக்கான சம்பளம் உயர்த்தப்படாமல் இருப்பது பெரும் விவாதமாக இருக்கும் வேளையில், தற்போது சம்பள உயர்வு முக்கிய பிரச்சனையாக மாறியுள்ளது.
இந்திய ஐடி சேவை நிறுவனங்கள் சராசரியாக 5% முதல் 8% வரை சம்பள உயர்வை வழங்கும், சிறப்பாக செயல்படும் ஊழியர்களுக்கு 12-14% சம்பள உயர்வைப் பெறுவார்கள். ஆனால் ஜிசிசி நிறுவனங்கள் சராசரியாக 10% சம்பள உயர்வை அளிக்க உள்ளது, இதேபோல் சிறந்த செயல்பாடு ஊழியர்களுக்கு 15-20% உயர்வை வழங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதேவேளையில் இந்தியாவில் இருக்கும் பல்லாயிரம் ஜிசிசி-க்கள் தற்போது பல பிரிவில், பல தொழில்நுட்பத்தில் அனுபவம் கொண்ட டெக் ஊழியர்களை பணியில் சேர்த்து வருகிறது. இதனால் இந்த சம்பள உயர்வு டிசிஎஸ், இன்போசிஸ், விப்ரோ, ஹெச்சிஎல் போன்ற ஐடி சேவை நிறுவனங்களில் இருக்கும் ஊழியர்களை இடம்பெயரவைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
தற்போது சந்தை நிலவரம் அடிப்படையில் டேட்டா சையின்ஸ் / மெஷின் லேர்னிங் மற்றும் கிளவுட் கம்ப்யூட்டிங் போன்ற முக்கிய பிரிவில் ஜிசிசி-க்கள் இந்திய ஐடி சேவை நிறுவனங்களை காட்டிலும் 15-20% அதிக சம்பளத்தை வழங்குகின்றன. இப்படி ஒவ்வொரு துறையில் ஐடி சேவை நிறுவனங்களை காட்டிலும் அதிக சம்பளத்தை வழங்குவதும் ஐடி சேவை நிறுவனங்களில் இருக்கும் ஊழியர்களை இடம்பெயரவைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இவை அனைத்தையும் விட முக்கியமாக இந்திய ஜிசிசி நிறுவனங்களில் மீடியன் சம்பளம் என்பது 27.3 லட்சம் ரூபாயாக உள்ளது, இதுவே ஐடி சேவை நிறுவனங்களில் வெறும் 11.7 லட்சமாக உள்ளது.


Click it and Unblock the Notifications