இந்திய பொருளாதாரத்தில் முக்கிய தூணாக இருக்கும் ஐடி துறை நிறுவனங்கள் 2023 ஆம் ஆண்டு துவக்கம் முதல் பல்வேறு பிரச்சனைகளை எதிர்கொண்டு வரும் வேளையில், அக்சென்சர் மற்றும் சிடிஎஸ் போன்று பணிநீக்க அறிவிப்புகளை வெளியிடாமல் இருக்கும் வரையில் போதும் என்ற மனநிலைக்கு ஐடி ஊழியர்கள் தள்ளப்பட்டு உள்ளனர்.
இந்திய ஐடி நிறுவனங்கள் தற்போது எப்படியாவது செலவுகளை குறைத்து லாபத்தை கூட்டி முதலீட்டாளர்களுக்கு நம்பிக்கை அளிக்க வேண்டும் என்ற இக்கட்டான நிலையில் மாட்டிக்கொண்டு உள்ளது. இப்படியிருக்கும் சூழ்நிலையில் அனைத்து ஐடி நிறுவனங்களும் எளிதாக பணத்தை சேமிக்கும் ஒரு வழி எனில் ஊழியர்களுக்கான செலவுகள் தான்.

ஊழியர்களுக்கான செலவுகள் பிரிவில் சம்பளம், வேரியபிள் பே முக்கிய பங்கு விகிக்கிறது, ஜூன் காலாண்டு முடிந்த நிலையில் இக்காலாண்டுக்கான வேரியபிள் பே தொகையை 60 முதல் 70 சதவீதமாக குறைக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதேபோல் டாப் பர்பாமென்ஸ்களுக்கு 80 சதவீதம் வரையில் சம்பள உயர்வு அளிக்கப்படுகிறது.
தற்போதை சந்தை நிலவரத்தை வைத்து பார்க்கும் போதும் சில நிறுவனங்கள் சிறப்பாக மற்றும் அதிக லாபம் ஈட்டித்தரும் அணிகளுக்கு மட்டும் வேரியபிள் பே தொகையை அளிக்கவும் முடிவுகள் எடுக்க வாய்ப்பு உள்ளது என ADECCO STAFFING நிறுவனத்தின் மூத்த அதிகாரி ஆர்.ரமேஷ் தெரிவித்துள்ளார்.
மேலும் தற்போது ஐடி ப்ராடெக்ட் நிறுவனங்கள் தொடர்ந்து அதிகப்படியான ஊழியர்களை அதிகப்படியான சம்பளத்திற்கு பணியில் அமர்த்தி வந்தாலும், ஐடி சேவைத் துறையில் இருக்கும் நிறுவனங்கள் மட்டுமே செலவுகளை குறைக்கும் படலத்தில் உள்ளது. இது தொடர்ந்தால் அக்சென்சர் மற்றும் சிடிஎஸ் போன்று இந்திய ஐடி சேவை நிறுவனங்களும் பணிநீக்கத்தை அறிவிக்குமா என்ற கேள்வி எழுந்துள்ளது.
இந்திய ஐடி நிறுவனங்கள் சர்வதேச வர்த்தக மந்தநிலை காரணமாக தனது வர்த்தகத்தை இழந்து வருகிறது. இதனாலேயே பல பாதிப்புகளை எதிர்கொண்டு வருகிறது, இதற்கிடையில் பல நிறுவனங்கள் வர்த்தகத்தை இழந்தாலும், புதிய வர்த்தகத்தையும் ஈர்த்துள்ளது.


Click it and Unblock the Notifications