இந்திய ஐடி துறையில் கடந்த 20 மாதங்களில் முதல் முறையாக, முன்னணி ஐ.டி சேவை நிறுவனங்களில் வேலைவாய்ப்புகள் அதிகரித்துள்ளன.
லிங்க்ட்இன் மற்றும் பிற முக்கியமான வேலைவாய்ப்பு தளங்களின் தகவல்களின்படி, மார்ச் மாதத்தில் ஐடி ஊழியர்கள் விண்ணப்பிக்கத் திறக்கப்பட்ட மொத்த பணியிடங்களின் எண்ணிக்கை 82,000 ஆக உயர்ந்துள்ளது. இது ஜனவரி மாதத்தில் 50,000 ஆக இருந்தது குறிப்பிடத்தக்கது.

ஒவ்வொரு வருடமும் இந்தியாவில் அதிகப்படியான வேலைவாய்ப்புகளை அளிக்கும் துறையாக இருப்பது ஐடி துறை முக்கியமானது. அதுவும் முக்கியமாக வொயிட் காலர் ஜாப்ஸ் உருவாக்குவதில் ஐடி துறையை எந்த துறையாலும் அடிச்சிக்க முடியாது.
இப்படியிருக்கும் சூழ்நிலையில் கடந்த 20 மாதங்களாக இந்திய ஐடித் துறையில் புதிய வேலைவாய்ப்புகள் எண்ணிக்கை என்பது மிகவும் குறைவாகவே உள்ளது. சுமார் 250 பில்லியன் டாலர் மதிப்பிலான துறையில் காலியாக இருக்கும் வேலைவாய்ப்புகள் 50000 மட்டுமே என்றால் எப்படியிருக்கும்.
சந்தையில் போதுமான வேலைவாய்ப்புகள் இல்லாத காரணத்தால் ஐடி நிறுவனங்களின் பணியாளர் வெளியேற்ற விகிதம் குறைந்து வருகிறது. இந்த நிலையில் மார்ச் காலாண்டில் நாட்டின் முதன்மை ஐ.டி சேவை நிறுவனங்களின் ஒட்டுமொத்த பணியமர்த்தல் விகிதம் முந்தைய காலாண்டை ஒப்பிடும்போது 4-6% குறைந்துள்ளது என்று ஸ்டாஃபிங் நிறுவனமான Xpheno தெரியவந்துள்ளது.
Xpheno செய்த ஆய்வில் விப்ரோ, இன்ஃபோசிஸ், டிசிஎஸ், ஹெச்.சி.எல், எல்.டி.ஐ மைண்ட்ட்ரீ, எல்&டி டெக்னாலஜி சர்வீசஸ், டெக் மஹிந்திரா மற்றும் காக்னிசண்ட் ஆகிய நிறுவனங்களை அடிப்படையாகக் கொண்டு ஊழியர்களின் பணியமர்த்தல் விகிதம் கணக்கிடப்பட்டு உள்ளதாக Xpheno விளக்கம் கொடுத்துள்ளது.
ஐ.டி துறை ஆலோசகர்கள் கூறுகையில், 2025ஆம் நிதி ஆண்டிலும் பெரும்பாலான ஐடி நிறுவனங்கள், பெஞ்ச்-ல் இருக்கும் ஊழியர்களை குறைப்பது, ஆட்டோமேஷன்-ஐ அதிகரிப்பது, செயல்திறனை மேம்படுத்துவதில் கவனம் செலுத்துகிறது. இதேபோல் முக்கியமான தொழில்நுட்பங்களான ஆர்டிஃபிசியல் இண்டலிஜென்ஸ் (AI) மற்றும் ஜெனரேட்டிவ் AI போன்ற பிரிவில் மட்டுமே புதிய ஊழியர்களை பணியில் சேர்க்கப்பட உள்ளனர்.
இந்த நிலை அனைத்தும் அமெரிக்காவின் பெடரல் ரிசர்வ் வட்டி விகிதத்தைக் குறைத்தால் சீராகிவிடும் என எதிர்பார்க்கப்படுகிறது.
More From GoodReturns

இந்தியர்களே தங்கம் விலையை பத்தின கவலையே இனி வேண்டாம்!! ரெடியானது நாட்டின் பெரிய தங்க சுரங்கம்!!

தங்கம் விலை எங்கே போகும்? கோல்டு ETF-க்கு புதிய அபாயம் – ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை

வேலையை விட போறீங்களா? ஏப்ரல் 1 வரை வெயிட் பண்ணுங்க..!! சட்டமே மாறுது.. ஊழியர்கள் கை ஓங்க போகுது!!

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

மீண்டும் Lockdown..? மீண்டும் வொர்க் ப்ரம் ஹோம்.. சர்வதேச அமைப்பு கொடுத்த வார்னிங்..!!

இந்தியாவுக்கு கிரீன் சிக்னல் கொடுத்த ஈரான்..!! 6 ஆண்டுகளில் இல்லாத முடிவினை எடுத்த மோடி அரசு..!!



Click it and Unblock the Notifications