இந்தியாவின் முன்னணி ஐடி சேவை நிறுவனங்கள், தங்களுடைய வழக்கமான வர்த்தக சந்தையான வட அமெரிக்கா மற்றும் ஐரோப்பா சந்தைகளைத் தாண்டி புதிய வாடிக்கையாளர் தேடி புதிய சந்தைகளை நோக்கித் திரும்பியுள்ளன. வட அமெரிக்கா மற்றும் ஐரோப்பா சந்தைகளில் ஏற்பட்டுள்ள பொருளாதார தடுமாற்றத்தால் புதிய வர்த்தகம் கிடைக்காமல் போகிறது.
இந்த அபாயங்களைக் குறைக்கும் திட்டத்துடன் வளர்ந்த நாடுகளைத் தாண்டி, வளரும் சந்தைகளில் அதிகரித்துள்ள டிஜிட்டல் வர்த்தக வாய்ப்புகளைப் பயன்படுத்திக் கொள்ளும் நோக்கத்துடன் ஐடி சேவை நிறுவனங்கள் தனது கவனத்தைத் திருப்பியுள்ளது.

டாடா கன்சல்டன்சி சர்வீசஸ் (TCS), இன்போசிஸ், விப்ரோ, ஹெச்சிஎல், டெக் மஹிந்திரா போன்ற நிறுவனங்கள் தற்போது வட அமெரிக்கா மற்றும் ஐரோப்பா சந்தைகளை விடுத்து, ஜப்பான், மத்திய கிழக்கு, ஆஸ்திரேலியா மற்றும் ஆசிய-பசிபிக் போன்ற சந்தைகளில் அதிக கவனம் செலுத்துகின்றன.
இந்திய ஐடி சேவை துறையின் 254 பில்லியன் டாலர் சாப்ட்வேர் சேவை ஏற்றுமதியில் அமெரிக்க நிறுவன வாடிக்கையாளர்கள் சுமார் 50 சதவீத பங்களிக்கின்றன, டாப் 5 நிறுவனங்களில் இந்த பங்கீடு 50 சதவீதத்திற்கும் அதிகமாக உள்ளது.
ஒரே சந்தையை நம்பியிருப்பது இந்திய ஐடி நிறுவனங்களுக்கு பெரும் பிரச்சனையாக மாறியுள்ளது. தற்போது வர்த்தக சூழ்நிலையில் ஏற்பட்டுள்ள தாக்கம் தான் புதிய சந்தைகளை தேடத் ஐடி நிறுவனங்களைத் தூண்டியுள்ளது. குறிப்பாக மத்திய கிழக்கு மற்றும் ஆசிய-பசிபிக் பகுதிகள் வேகமான தொழில்நுட்ப முன்னேற்றங்களை நடந்து வருவதால் டிஜிட்டல் சேவைகளுக்கான டிமாண்ட் அதிகரித்துள்ளது.
2025 நிதியாண்டின் ஜூலை-செப்டம்பர் காலாண்டில், TCS தனது இந்திய வர்த்தகத்தின் மூலம் கிடைக்கும் வருவாய் குறிப்பிடத்தக்க வளர்ச்சியைப் பதிவு செய்துள்ளது. மத்திய அரசின் டெலிகாம் நிறுவனமான BSNL உடன் பெரிய ஒப்பந்தம் மூலம் பெரும் வருவாய் கிடைத்துள்ளது. TCS வருவாயில் இந்திய வர்த்தகத்தில் பங்கீடு 8.9% ஆக அதிகரித்தது, இது 2018 ஆம் ஆண்டுக்குப் பிறகு அதிகப்படியான அளவாகும். கூடுதலாக, மத்திய கிழக்கு மற்றும் ஆப்பிரிக்காவில் நிறுவனத்தின் வணிகம் 7.9% வளர்ச்சியைக் கண்டது, ஆசிய-பசிபிக் பகுதி 7.5% அதிகரித்ததுள்ளது.
இதற்கு மாறாக, TCS இன் முக்கிய சந்தையான வட அமெரிக்காவில் வளர்ச்சி 2.1% ஆக குறைந்தது, ஐரோப்பாவில் மிதமான 1.8% வளர்ச்சி ஏற்பட்டது. இதுதான் டிசிஎஸ் நிறுவனத்தை , ஜப்பான், மத்திய கிழக்கு, ஆஸ்திரேலியா மற்றும் ஆசிய-பசிபிக் சந்தைகளை நாடிச் செல்ல தூண்டியுள்ளது.
இது போன்று டிசிஎஸ்-ன் சக போட்டி நிறுவனமான இன்போசிஸ்-ன் நிலையும் இதேதான். வட அமெரிக்காவில் வர்த்தகம் 2.7% சரிந்து, இந்தியாவில் 16% அதிக வளர்ச்சியைக் கண்டது.


Click it and Unblock the Notifications