இந்தியாவின் முன்னணி ஐடி சேவை நிறுவனங்களான டிசிஎஸ், இன்போசிஸ் கடந்த வாரம் தனது மார்ச் காலாண்டு முடிவுகளை வெளியிட்டு ஐடி நிறுவன முதலீட்டாளர்களை கதற விட்ட நிலையில் இன்று ஹெச்சிஎல் மற்றும் விப்ரோ தனது காலாண்டு முடிவுகளை வெளியிடும் காரணத்தால் பங்குச்சந்தை முதலீட்டாளர்கள் மற்றும் ஐடி ஊழியர்களின் கவனம் அனைத்தும் ஐடி துறை பங்குகள் மீது உள்ளது.
வல்லரசு நாடுகளில் உருவாகியுள்ள பொருளாதார மந்த நிலை காரணமாக இந்தியாவின் முன்னணி ஐடி சேவை நிறுவனங்களான டிசிஎஸ், இன்போசிஸ், ஹெச்சிஎல், விப்ரோ, டெக் மஹிந்திரா-வின் வர்த்தகம் கடுமையாக பாதிக்கப்பட்டு உள்ளது. இதன் வெளிப்பாடாகவே கடந்த ஒரு வருடத்தில் ஐடி சேவை துறையின் பங்குகள் பெரிய அளவில் பாதிப்பு அடைந்துள்ளது. இதற்கு என்ன காரணம்..?

இந்தியாவின் 2வது பெரிய ஐடி சேவை நிறுவனமாக இருக்கும் இன்போசிஸ் சுமார் 97 சதவீத வருமானத்தை வட அமெரிக்கா, ஐரோப்பா மற்றும் உலகின் பிற நாடுகளில் இருந்து பெற்று வருகிறது. இந்திய வர்த்தகத்தில் இருந்து வெறும் 3 சதவீத வருமானத்தை மட்டுமே பெறுகிறது இன்போசிஸ். இதன் மூலம் அமெரிக்கா, ஐரோப்பாவில் பொருளாதார மந்தநிலை அதாவது ரெசிஷன் உருவானால் இன்போசிஸ் நிறுவனத்திற்கு கிடைக்கும் புதிய வர்த்தகம், வருமானம் ஆகியவை பாதிக்கும்.
இதேபோல் டிசிஎஸ் தனது மொத்த வருமானத்தில் சுமார் 95 சதவீதத்தை வட அமெரிக்கா, ஐரோப்பா மற்றும் உலகின் பிற நாடுகளில் இருந்து பெற்று வருகிறது. இதன் எதிரொலி தான் மும்பை பங்குச்சந்தையில் எதிரொலித்துள்ளது. ரஷ்ய -உக்ரைன் போர் துவங்கிய நாளில் இருந்து அமெரிக்கா மற்றும் ஐரோப்பாவின் பொருளாதாரம் பாதிப்பு அடைந்து வருகிறது. குறிப்பாக பணவீக்கத்தை குறைக்க வட்டி விகிதம் உயர்த்திய நாளில் இருந்து புதிய முதலீடுகளும், செலவுகளும் குறைக்கப்பட்டு உள்ளது.
இந்த நிலையில் ஏப்ரல் 18, 2023 வரையிலான ஒரு வருட காலத்தில் இன்போசிஸ் பங்குகள் 22.2 சதவீதமும், டிசிஎஸ் 11.30 சதவீதமும், விப்ரோ 32 சதவீதமும், ஹெச்சிஎல் டெக்னாலஜிஸ் 4 சதவீதமும், டெக் மஹிந்திரா பங்குகள் 24 சதவீதமும் சரிந்துள்ளது. இதேகாலக்கட்டத்தில் சென்செக்ஸ் 4.5 சதவீதம் வரையில் உயர்ந்துள்ளது. இதன் மூலம் ஐடி நிறுவனங்களின் வீழச்சிக்கு கிளியரான மேப் கிடைத்துள்ளது.

ஆனால் இதே காலக்கட்டத்தில் வெளிநாட்டில் குறைவான வரத்தகத்தை கொண்டு இருக்கும் Cigniti Technologies எந்தொரு ஐடி நிறுவனமும் பெற்றிடாத 68.50 சதவீத வளர்ச்சியை கடந்த ஒரு வருடத்தில் பெற்றுள்ளது. Cigniti Technologies பங்குகஶ் 452.25 ரூபாயில் இருந்து 761.85 ரூபாயாக உயர்ந்துள்ளது.
இதேபோல் சிறிய ஐடி நிறுவனங்கள் பிரிவில் D-Link 64.50 சதவீதமும், KPIT Technologies 57.90 சதவீதமும், Accelya Solutions 51.60 சதவீதமும், Nucleus Software Exports 35.20 சதவீதமும், Sonata Software 35.20 சதவீதம் அளவில் கடந்த ஒரு வருடத்தில் வளர்ச்சி அடைந்துள்ளது.


Click it and Unblock the Notifications