இந்தியாவில் இருக்கும் பெரும்பாலான ஐடி ஊழியர்கள் தங்களுடைய சம்பள உயர்வை வாங்காமல் இருக்கும் வேளையில் ஜூன் காலாண்டுக்கான வேரியபிள் பே தொகைக்காக வழிமேல் விழி வைத்து காத்திருக்கின்றனர். இந்த நிலையில் ஐடி நிறுவனங்கள் முக்கியமான முடிவை எடுத்துள்ளது, இதனால் ஐடி ஊழியர்களின் வாழ்க்கையே மாறிடும் நிலை உள்ளது.
இந்திய தகவல் தொழில்நுட்ப சேவை நிறுவனங்கள், 2023 ஆம் நிதியாண்டில் அதிகப்படியான மாற்றத்தையும், பாதிப்புகளையும் எதிர்நோக்கி வந்துக்கொண்டு இருக்கும் வேளையில் சர்வதேச பொருளாதார மந்த நிலை பெரும் தடுமாற்றத்தை ஐடி நிறுவனங்களின் வர்த்தகத்திற்கு கொடுத்தது.

இந்த நிலையில் இருந்து மீண்டு வருவதற்கு புதிய தொழிற்நுட்பத்தில் வர்த்தகத்தை ஈர்க்கவும், சேவை அளிக்கவும் முடிவு செய்தது. ஆனால் இதற்கு போதுமான திறன்வாய்ந்த ஊழியர்கள் இல்லாத காரணத்தால் அதிகளவிலான ஊழியர்களுக்கு வேகமாக புதிய தொழில்நுட்பத்தில் பயிற்சி அளிக்க முடிவு செய்யப்பட்டு உள்ளது.
இதன் அடிப்படையில் பெரும் தொகையை முதலீடு செய்து நாட்டின் முன்னணி ஐடி சேவை நிறுவனங்கள் அனைத்தும் தங்களது ஊழியர்களுக்கு ஜெனரேட்டிவ் ஏஐ துறையில் பயிற்சி அளிக்க முடிவு செய்துள்ளது. இதற்காக மைக்ரோசாப்ட், கூகுள் மற்றும் இதர முன்னணி நிறுவனங்களின் AI suite-ல் பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது.
இதில் சமீபத்திய அறிவிப்பாக டெக் மஹிந்திரா நிறுவனம் 2023- 24 ஆம் நிதியாண்டின் முதல் காலாண்டில் சுமார் 8000 ஊழியர்களுக்கு பயிற்சி கொடுத்துள்ளதாக இந்நிறுவனத்தின் தலைமை மக்கள் அதிகாரி மற்றும் மார்கெட்டிங் பிரிவின் தலைவருமான ஹர்ஷ்வேந்திர சோயின் தெரிவித்துள்ளார்.
இதுமட்டும் அல்லாமல் அதிகப்படியான ஊழியர்களுக்கு புதிய தொழில்நுட்பத்தில் தொடர்ந்து பயிற்சி அளிக்கப்படும் என ஹர்ஷ்வேந்திர சோயின் தெரிவித்துள்ளார். கடந்த மாதம் இதேபோன்ற அறிவிப்பை டிசிஎஸ் வெளியிட்டது.
டிசிஎஸ், மைக்ரோசாப்ட் உடன் இணைந்து கடந்த மாதம் 25000-த்திற்கும் அதிகப்படியான ஊழியர்களுக்கு AI suite-ல் பயிற்சி அளிக்கப்பட்டு உள்ளது என அறிவித்துள்ளது. இது மட்டும் அல்லாமல் Microsoft's AI Council -லில் டிசிஎஸ் இணைந்து டேட்டா மற்றும் AI துறையில் பார்ட்னராக உள்ளது.
இதேபோல் விப்ரோ, கூகுள் கிளவுட் உடன் இணைந்து 20000 ஊழியர்களுக்கு AI பிரிவில் பயிற்சி அளித்து திறனை மேம்படுத்தியுள்ளது. இன்போசிஸ் கிளவுட், டேட்டா, சைபர் செக்யூரிட்டி போன்ற புதிய தொழில்நுட்ப துறையில் தொடர்ந்து பயிற்சி அளிக்கும் முடிவை எடுத்துள்ளது.
முன்னணி ஐடி நிறுவனங்கள் கிளவுட், AI துறையில் பயிற்சி அளித்து வேலைவாய்ப்பு, அனுபவத்தையும் கொடுத்த தயாராக உள்ளது. இந்த நிலையில் ஐடி ஊழியர்கள் இதில் தேர்ச்சி பெறுவதன் மூலம் புதிய மற்றும் வளர்ந்து வரும் தொழில்நுட்பத்திற்கு மாறும் வாய்ப்பை பெற உள்ளனர். இதன் மூலம் ஐடி ஊழியர்களின் பணி வாழ்க்கையில் சிறப்பு மிக்க மாற்றத்தை ஏற்படுத்தும்.
More From GoodReturns

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!

தங்கம் விலை அதிரடி சரிவு: மதுரை மக்களுக்கு கிடைத்த பொன்னான வாய்ப்பு!!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

டிரம்ப்-இன் ஈரான் போர் நிறுத்த அறிவிப்பு பின்னணியில் விளையாடிய பல்லாயிரம் கோடி பணம்!!

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

தங்கம் விலை தான் குறையுதே.. இப்போ வாங்கலமா? மக்கா இது தெரியாம வாங்குன மொத்த பணமும் அதோகதி தான்..!!



Click it and Unblock the Notifications