நடப்பு வாரத்தில் இந்திய ஐடி நிறுவனங்கள் பலவும் தங்களது காலாண்டு முடிவினை வெளியிட்டு வருகின்றன. குறிப்பாக இந்தியாவின் முன்னணி ஐடி நிறுவனங்களான டிசிஎஸ், இன்ஃபோசிஸ், விப்ரோ,ஹெச் சி எல் டெக் மற்றும் சில நிறுவனங்கள் தங்களது நிதி நிலை அறிக்கையினை தாக்கல் செய்துள்ளன.
பெரும்பாலான நிறுவனங்கள் நல்ல லாபத்தினையே பதிவு செய்துள்ளன.
எனினும் வேரியபிள் என்பது குறைந்துள்ளது ஊழியர்கள் மத்தியில் சல சலப்பினை ஏற்படுத்தியுள்ளது. அதுவும் பெரும்பாலும் ஊழியர்களின் செயல்பாட்டின் அடிப்படையில் வழங்க திட்டமிடப்பட்டுள்ளது.
வேரியபிள் பே என்றால் என்ன?
நிறுவனத்தின் வளர்ச்சிக்கும் வெற்றிக்கும் பங்களிக்கும் ஊழியர்களுக்கு, நிறுவனத்தால் வழங்கப்படும் ஒரு ஊக்கத்தொகை எனலாம். இது பெரும்பாலும் பெர்பார்மன்ஸ் பே என்றும் அழைக்கப்படுகிறது. சில நிறுவனங்களில் ஊழியர்களின் திறன் அடிப்படையில் வழங்கப்படுகிறது.
இரு வகை வேரியபிள் பே
இந்த வேரியபிள் பே என்பது இரண்டு விதங்களில் வழங்கப்படுகிறது. ஒவ்வொரு மாதமும் ஊழியர்களின் செயல்பாடுகளை பொறுத்தும் இது வழங்கப்படுகிறது. பெஞ்ச் ஊழியர்கள் அல்லாத அனைத்து ஊழியர்களும் இதை பெறுவார்கள். இரண்டாவது வேரியபிள் பேவில் நிறுவனங்கள், காலாண்டில் அவர்களின் செயல்பாட்டின் அடிப்படையில் வழங்கின்றனர்.
டிசிஎஸ் நிகரலாபம்
நடப்பு நிதியாண்டின் இரண்டாவது காலாண்டில் வளர்ச்சி விகிதம் நன்றாகவே இருந்தது. டிசிஎஸ் நிறுவனத்தின் நிகரலாபம் 10,431 கோடி ரூபாயாக அதிகரித்தது. இது முதன் முறையாக ஒரு காலாண்டில் 10,000 கோடி ரூபாய்க்கு மேலாக அதிகரித்துள்ளது. இது கடந்த ஆண்டினை காட்டிலும் 8.4% ஆக அதிகரித்துள்ளது.
இன்ஃபோசிஸ் & ஹெச்சிஎல்
இதே இன்ஃபோசிஸ் நிறுவனத்தின் 11% லாபம் அதிகரித்து, 6021 கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது. இதே ஹெச் சி எல் டெக் நிறுவனத்தின் லாபம் 3489 கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது. இது கடந்த ஆண்டினை காட்டிலும் 7% அதிகரித்துள்ளது. இதே விப்ரோவின் நிகர லாபம் 2659 கோடி ரூபாயாக குறைந்துள்ளது. இது முந்தைய ஆண்டினை காட்டிலும் 9.3% குறைந்துள்ளது.
டிசிஎஸ் & விப்ரோ
கடந்த காலாண்டில் டிசிஎஸ் 100% வேரியபிள் பேயினை வழங்கியது. ஆனால் இந்த முறை 70% ஊழியர்கள் மட்டுமே 100% வேரியபிள் பேயினை கொடுக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
விப்ரோவும் அதன் ஊழியர்களுக்கு 85% வேரியபிள் பேவினை வழங்க உறுதி கொடுத்துள்ளது. எனினும் இன்ஃபோசிஸ் இது குறித்து எந்த அறிவிப்பினையும் கொடுக்கவில்லை.
More From GoodReturns

தங்கம் விலை எங்கே போகும்? கோல்டு ETF-க்கு புதிய அபாயம் – ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை

வேலையை விட போறீங்களா? ஏப்ரல் 1 வரை வெயிட் பண்ணுங்க..!! சட்டமே மாறுது.. ஊழியர்கள் கை ஓங்க போகுது!!

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!

தங்கம் விலை அதிரடி சரிவு: மதுரை மக்களுக்கு கிடைத்த பொன்னான வாய்ப்பு!!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

டிரம்ப்-இன் ஈரான் போர் நிறுத்த அறிவிப்பு பின்னணியில் விளையாடிய பல்லாயிரம் கோடி பணம்!!



Click it and Unblock the Notifications