மிரட்டல்.. அச்சுறுத்தல்.. கண்ணீர்: மாஃபியாவாக மாறிவிட்டதா TCS? கதறும் ஊழியர்கள் – உண்மை என்ன?

டாடா குழுமத்துக்கு சொந்தமான டிசிஎஸ் நிறுவனம் இந்தியாவின் முன்னணி ஐடி சேவை நிறுவனமாக செயல்பட்டு வருகிறது. கடந்த சில மாதங்களாகவே இந்த நிறுவனத்தின் மீது பல்வேறு புகார்களும் குற்றச்சாட்டுகளும் எழுந்த வண்ணம் இருக்கின்றன.

டிசிஎஸ் நிறுவனம் தங்கள் ஊழியர்களில் 2 சதவீதம் பேரை வேலையில் இருந்து நீக்குவதாக அறிவிப்பு வெளியிட்டதை அடுத்து டிசிஎஸ் நிறுவனத்தின் மீது பல்வேறு குற்றச்சாட்டுகளும் புகார்களும் எழுந்த வண்ணம் இருக்கின்றன . டிசிஎஸ் நிறுவனம் வேண்டுமென்றே ஊழியர்களுக்கு பிராஜெக்டுகளை ஒதுக்காமல் அவர்களை பெஞ்ச் பாலிசி அடிப்படையில் கட்டாயப்படுத்தி ராஜினாமா செய்ய வைப்பதாகவும் , 45 வயதுக்கு மேல் இருக்கும் ஊழியர்களையும் ,மேலாளர் பொறுப்பில் இருப்பவர்களையும் இலக்கு வைத்து செயல்படுவதாகவும் தொடர்ச்சியாக ரெடிட் தளங்களில் டிசிஎஸ் ஊழியர்களே பதிவிட்டு வருவதை நாம் காண முடிகிறது .

மிரட்டல்.. அச்சுறுத்தல்.. கண்ணீர்:  மாஃபியாவாக மாறிவிட்டதா TCS? கதறும் ஊழியர்கள் – உண்மை என்ன?

இந்த சூழலில் ரவி ஹண்டா என்ற பெர்சனல் பைனான்ஸ் நிறுவனத்தின் நிறுவனர் எகஸ் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில் டிசிஎஸ் நிறுவனம் Fluidity list என ஒரு பட்டியலை தயாரித்து வைத்திருப்பதாகவும், யாரையெல்லாம் வேலையை விட்டு அனுப்ப வேண்டுமோ அவர்களின் பெயரை எல்லாம் பட்டியலிட்டு அதன் அடிப்படையில் மோசமான செயல் திறன் ,புதிய தொழில்நுட்பங்களுக்கு ஏற்ப தகவமைத்துக் கொள்ளவில்லை ,வயது அதிகமாக இருப்பது என்பன உள்ளிட்ட பல்வேறு காரணங்களை குறிப்பிட்டு அவர்களை அழைத்துச் கட்டாயப்படுத்தி எந்தவித நோட்டீஸ் பீரியடும் இல்லாமல் ராஜினாமா செய்ய வைப்பதாகவும் சுட்டிக்காட்டி இருக்கிறார்.

இதற்கு ஆதாரமாக ஒரு ரெடிட் பதிவையும் அவர் வெளியிட்டு இருக்கிறார். அதில் சென்னை சிறுசேரியில் இருக்கும் டிசிஎஸ் வளாகத்தில் ஒரு ஊழியரை திடீரென ஹெச் ஆர் குழுவினர் அழைத்தனர் , அவர் உள்ளே சென்றார் அப்போது எந்தவித நோட்டீஸ் பீரியடும் இல்லாமல் உடனடியாக வேலையை ராஜினாமா செய்ய வேண்டும் என அங்கிருந்த ஹெச்ஆர் தரப்பினர் அவரை கட்டாயப்படுத்தியதாக இந்த பதிவில் குறிப்பிடப்பட்டிருக்கிறது . உடனடியாக ராஜினாமா செய்த அடுத்த நொடியே ஐடி கார்டு தொடங்கி லேப்டாப் உள்ளிட்ட அனைத்தையும் வாங்கி இருக்கிறார்கள் என குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த டிசிஎஸ் அலுவலகம் மட்டுமல்ல இந்தியாவின் அனைத்து டிசிஎஸ் அலுவலகங்களிலும் இதுதான் நடக்கிறது என குறிப்பிடப்பட்டுள்ளது. ஊழியர்களின் எண்ணிக்கை குறைக்க ஹெச்.ஆர் குழுவினருக்கு டார்கெட் வழங்கப்பட்டிருப்பதாகவும் அதன் அடிப்படையில் அவர்கள் பட்டியல் தயாரித்து ஒவ்வொருவராக அழைத்து கட்டாயப்படுத்தி வேலையிலிருந்து நீக்கி வருகின்றனர் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது . இது மிக மோசமான நியாயமற்ற செயல்முறை என அந்த பதிவில் சுட்டிக்காட்டப்பட்டிருக்கிறது.

மிரட்டல்.. அச்சுறுத்தல்.. கண்ணீர்:  மாஃபியாவாக மாறிவிட்டதா TCS? கதறும் ஊழியர்கள் – உண்மை என்ன?

டிசிஎஸ் நிறுவனம் மாஃபியா போல செயல்பட தொடங்கிவிட்டது , மிகவும் மோசமான ஒரு நிறுவனமாக மாறி விட்டது என அந்த பதிவில் குறிப்பிடப்பட்டிருக்கிறது. இதற்கிடையே டிசிஎஸ் நிறுவனத்தின் மீது மற்றொரு ஊழியரே குற்றம்சாட்டி ரெடிட் பக்கத்தில் பதிவு வெளியிட்டுள்ளார். அதில் டிசிஎஸ் நிறுவனத்தில் நான் வேலை செய்கிறேன், என்னை ஹெச்ஆர் அழைத்து உடனடியாக வேலையில் இருந்து ராஜினாமா செய்யும்படி கூறினார்கள் . நான் அழுதேன் இருந்தாலும் அவர்கள் அதனை ஏற்கவில்லை என கூறியுள்ளார்.

டிசிஎஸ் தான் என்னுடைய முதல் நிறுவனம் நான் அவர்களிடம் வேலையை ராஜினாமா செய்ய முடியாது எனக் கூறிவிட்டேன், அவர்கள் அதற்கு உங்களுக்கு மோசமான ரிவ்யூ வழங்குவோம் என அச்சுறுத்தினார்கள் ஆனால் நான் நீங்கள் என்ன வேண்டுமானாலும் செய்து கொள்ளுங்கள் நான் வேலையை ராஜினாமா செய்ய மாட்டேன் என கூறிவிட்டு கிளம்பி விட்டேன் என தெரிவித்துள்ளார். எனக்கு பிராஜெக்ட்டை ஒதுக்காமல் பெஞ்ச் ஊழியராக வைத்திருக்கிறார்கள் தினமும் என்னை போல பலரை அழைத்து மிரட்டுகிறார்கள் என தெரிவித்திருக்கிறார்.

டிசிஎஸ் நிறுவனத்தின் அனைத்து அலுவலகங்களிலும் தினந்தோறும் இதுபோன்ற சம்பவம் நடக்கிறது என குறிப்பிட்டு இருக்கும் அவர் உளவியல் ரீதியாக இது எங்களை பாதிக்கிறது என தெரிவித்துள்ளார். டிசிஎஸ் நிறுவனத்தின் பணி கலாச்சாரம் பணி பாதுகாப்பாக இரண்டையும் கருத்தில் கொண்டுதான் சம்பளமாக இருந்தாலும் பரவாயில்லை என இந்த நிறுவனத்தை தேர்வு செய்தேன் ஆனால் பதிலுக்கு இந்த நிறுவனம் எனக்கு என்ன தந்திருக்கிறது என பார்த்தீர்களா என வினவி இருக்கிறார். ரத்தன் டாடா மறைவுக்கு பின் டிசிஎஸ் நிறுவனத்தின் செயல்பாடுகள் தலைகீழாக மாறிவிட்டன என அவர் சுட்டிக்காட்டி இருக்கிறார்.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+