இந்தியாவில் அதிகளவிலான ஊழியர்களை கொண்டு இயங்கும் முன்னணி ஐடி மற்றும் டெக் நிறுவனங்களில் ஒன்றாக இருக்கும் டாடா கன்சல்டன்சி சர்வீசஸ் (TCS) இந்த ஆண்டு இந்தியாவின் சிறந்த நிறுவனமாக உருவெடுத்துள்ளது.
ஒவ்வொரு வருடமும் லிங்க்ட்இன் நிறுவனம் பல்வேறு காரணிகளை முன்வைத்து இந்தியாவின் சிறந்த நிறுவனம் என்ற பட்டியலை வெளியிடும். அந்த வகையில் இந்த ஆண்டும் லிங்க்ட்இன் நிறுவனம் இந்தியாவில் ஊழியர்கள் பணியாற்ற சிறந்த நிறுவனம் என்ற பட்டியலை வெளியிட்டு உள்ளது.

இந்த பட்டியலில் டாடா குழுமத்தின் குபேரனான டாடா கன்சல்டன்சி சர்வீசஸ் (TCS) முதல் இடத்தை பிடித்து அசத்தியுள்ளது. டிசிஎஸ்-ஐ தொடர்ந்து அமேசான் மற்றும் மோர்கன் ஸ்டான்லி ஆகிய நிறுவனங்கள் லிங்க்ட்இன் பட்டியலில் முதல் 3 இடத்தை பிடித்துள்ளது என அறிவித்துள்ளது. ப்ரொபஷனல்-க்கான சமூக ஊடக தளமான லின்கிடுஇன் இந்தியாவில் உள்ள சிறந்த 25 நிறுவனங்களை பட்டியலிட்டு வெளியிட்டுள்ளது.
லின்கிடுஇன் எட்டுத் முக்கியமான விஷயங்களை அடிப்படையாக வைத்து இந்த பட்டியலை தயாரித்துள்ளது. ability to advance, திறன் வளர்ச்சி, நிறுவனத்தின் ஸ்திரத்தன்மை, வெளிப்புற வாய்ப்பு, நிறுவனத்தின் தொடர்பு, பாலின வேறுபாடு, கல்விப் பின்னணி மற்றும் நாட்டில் ஊழியர் இருப்பு ஆகியவற்றின் கீழ் ஆய்வு செய்து இப்பட்டியலை வெளியிட்டு உள்ளது.
இந்தப் பட்டியலில் 25 நிறுவனங்களில் 17 நிறுவனங்கள் புதிதாக நுழைந்துள்ளது. முதன்முறையாக, இ-ஸ்போர்ட்ஸ் மற்றும் கேமிங் பிரிவில் இருந்து Dream11 மற்றும் Games24x7 போன்ற நிறுவனங்கள் பட்டியலில் இடம் பிடித்துள்ளன. லிங்க்ட்இனின் இந்த ஆண்டின் சிறந்த ஸ்டார்ட்அப் பட்டியலில் Zepto இடம்பெற்ற நிலையில், இந்தப் பட்டியலில் 16வது இடத்தைப் பெற்றுள்ளது.
தொழில்நுட்பத் துறையில் உள்ள நிறுவனங்கள் செயற்கை நுண்ணறிவு (AI), ரோபாட்டிக்ஸ், எலக்ட்ரானிக்ஸ், சாப்ட்வேர் டெஸ்டிங் மற்றும் கம்பியூட்டர் செக்யூரிட்டி போன்ற துறையில் அதிகப்படியான ஊழியர்களை தேடி வருவதாத லின்கிடுஇன் அறிக்கை கூறுகிறது.
நிதித் துறையில் கமர்சியல் பேங்கிங், பைனான்சியல் அக்கவுண்டிங் மற்றும் Growth Strategies பிரிவில் திறன் கொண்ட பணியாளர்களைத் தேடுகின்றன. EDTech துறையில் பார்ட்னர் டெவலப்மென்ட் மற்றும் Inside Sale பிரிவில் அதிகப்படியான ஊழியர்களுக்கு டிமாண்ட் உள்ளதாக கூறுகிறது.


Click it and Unblock the Notifications