இந்தியாவில் ஐடி சேவை வழங்குவதில் முன்னணி நிறுவனமாக டிசிஎஸ் செயல்பட்டு வருகிறது. டிசிஎஸ் நிறுவனத்தில் வேலை கிடைத்துவிட்டது என்றாலே வாழ்க்கை செட்டில் ஆகிவிட்டது என்றுதான் இதற்கு முன்பெல்லாம் பார்க்கப்பட்டது. ஆனால் தற்போது அந்த நிலை மாறிவிட்டது.
டிசிஎஸ் அல்ல எந்த நிறுவனமாக இருந்தாலும் தனியார் நிறுவனங்களில் நாம் செய்யக்கூடிய வேலைக்கு பாதுகாப்பு இல்லை அதுவும் ஏஐ வேகமாக வளர்ச்சி அடைந்து வரக்கூடிய இந்த காலகட்டத்தில் பணி பாதுகாப்பு என்பது பெரிய அளவில் கேள்விக்குறியாகி இருக்கிறது என்று தான் சொல்ல வேண்டும்.

வழக்கமாக ஒரு நிறுவனத்தில் நாம் வேலைக்கு செல்கிறோம் என்றால் ஒவ்வொரு ஆண்டும் நம்முடைய சம்பளமும் பதவியும் உயர வேண்டும். பதவி உயரவில்லை என்றால் கூட சம்பளமாவது அதிகரிக்கப்பட வேண்டும். ஆனால் டிசிஎஸ் நிறுவனத்தில் வேலை செய்த ஒரு ஊழியர் ஐந்து ஆண்டுகளில் தன்னுடைய சம்பளம் குறைந்த இருப்பதாக வெளியிட்டிருக்கும் பதிவு சமூக வலைதளங்களில் வைரலாக மாறி வருகிறது.
2020ஆம் ஆண்டு டிசிஎஸ் நிறுவனத்தில் வேலைக்கு சேர்ந்த ஒரு இளைஞர் தன்னுடைய ரெடிட் பக்கத்தில் வெளியிட்டிருக்கும் பதிவில் டிசிஎஸ் நிறுவனத்தில் நான் 5.5 ஆண்டுகளாக வேலை செய்கிறேன். தொடக்கத்தில் எனக்கு 25 ஆயிரம் ரூபாய் சம்பளம் கொடுத்தார்கள் .தற்போது என்னுடைய சம்பளம் 22,800 ரூபாயாக குறைந்து இருக்கிறது என குறிப்பிடுகிறார்.
மூன்றாம் நிலை நகரத்தை சேர்ந்த ஒரு கல்லூரியில் பட்ட படிப்பை முடித்தவன் நான் டிசிஎஸ்-இல் வேலை கிடைத்து வேலைக்கு சேர்ந்தேன். ஆனால் அதன் பிறகு நான் என்னுடைய நிறுவனம் நடத்திய உள்ளார்ந்த தேர்வுகளில் பெரிய அளவில் கவனம் செலுத்தவில்லை, ஐடி சார்ந்த திறன் மேம்பாட்டிலும் நான் கவனம் செலுத்தாமல் விட்டுவிட்டேன். அதற்கு மாறாக நான் அரசு தேர்வுகளுக்கு பயில தொடங்கிவிட்டேன் என கூறி இருக்கிறார்.
இருந்தாலும் ஜாவா டெவலப்பராக நான் தொடர்ந்து வேலை செய்தேன் என கூறும் அவர் கடந்த ஜூன் மாதம் ஹெச்.ஆர் அதிகாரிகள் தன்னை அழைத்து தன்னுடைய சம்பளத்தை சி பேண்டில் இருந்து டி பேண்டிற்கு குறைத்துவிட்டனர், மேற்கொண்டு எந்த அப்ரைசலும் நடக்கவில்லை என கூறியுள்ளார்.
பெர்ஃபார்மன்ஸ் இம்ப்ரூவ்மெண்ட் பிளானில் என்னுடைய சம்பளத்தை குறைத்து விட்டார்கள் எனக்கு என்ன பிரச்சினை எங்கே நாம் மேம்படுத்தி கொள்ள வேண்டும் என எதையுமே ஆலோசனை செய்யவில்லை என கூறியுள்ளார். ஐடி துறையில் தொடர்ந்து நீடிக்க முடியுமா என்ற நம்பிக்கையை நான் இழந்து விட்டேன் என அந்த இளைஞர் குறிப்பிட்டு இருக்கிறார்.
ஏஐ வேகமாக வளர்ச்சி அடைந்து வரும் இந்த காலத்தில் இளைஞர்கள் வேலை கிடைத்தாலும் அந்த வேலையை தக்க வைக்க தங்களின் திறன்களை தொடர்ந்து மேம்படுத்தி கொண்டே இருக்க வேண்டும். இல்லை என்றால் வேலைவாய்ப்பு கைவிட்டு போய்விடும்.


Click it and Unblock the Notifications