மும்பை: ஓய்வுபெற்ற ஐஏஎஸ் அதிகாரி ஒருவர் 1984ஆம் ஆண்டு தனக்கு டிசிஎஸ் நிறுவனத்தில் வேலைக்காக அனுப்பி வைக்கப்பட்ட ஆஃபர் லெட்டரை சமூக வலைதளங்களில் வெளியிட்டுள்ளார். 40 ஆண்டு காலத்திற்கு முன்பு டிசிஎஸ் நிறுவனம் அவருக்கு மாதத்திற்கு 1300 ரூபாய் ஊதியம் வழங்குவதற்கு தயாராக இருந்ததாம். தற்போது அவருடைய இந்த ஆஃபர் லெட்டர் பற்றி தான் சமூக வலைதளவாசிகள் தீவிரமாக விவாதித்து வருகின்றனர்.
ஐஐடி நிறுவனத்தில் கல்வி பயின்றவர் தான் ரோகித் குமார் சிங். தற்போது இவர் ஓய்வு பெற்ற ஐஏஎஸ் அதிகாரியாக இருக்கிறார். 1984ஆம் ஆண்டு ராஜஸ்தான் கேடரில் ஐஏஸ் தேர்ச்சி பெற்றவர் இவர். முதன்முதலில் தனக்கு டிசிஎஸ் நிறுவனம் வேலை வாய்ப்பு அளித்து 1984 ஆம் ஆண்டு ஜூன் மாதம் அனுப்பி வைத்த ஆஃபர் லெட்டரை தன்னுடைய சமூக வலைதள பக்கத்தில் வெளியிட்டுள்ளார். 40 ஆண்டு காலத்திற்கு முன்பு டிசிஎஸ் நிறுவனம் இவருக்கு மாதத்திற்கு 1300 ரூபாய் ஊதியத்தில் வேலை வாய்ப்பு வழங்கியது.

ஆனால் அதே காலகட்டத்தில் அவர் ஐஏஎஸ் அதிகாரியாக மாதத்திற்கு 2200 ஊதியம் வாங்கியதாக தன்னுடைய பதிவில் வெளியிட்டுள்ளார். கேம்பஸ் இன்டர்வியூ வாயிலாக தனக்கு டிசிஎஸ் மும்பையில் வேலை கிடைத்ததாகவும் ஆனால் தான் டிசிஎஸ் வேலையை விடுத்து விட்டு சிவில் சர்வீஸ் பணிகளை தேர்வு செய்தேன் என்றும் தெரிவித்துள்ளார்.
அவருடைய இந்த பதிவு ஆயிரக்கணக்கானவர்களின் பார்வையையும் பாராட்டுகளையும் பெற்றுள்ளது. தனிப்பட்ட நிதி ரீதியிலான பலனை பார்க்காமல் பொதுநலனோடு சேவை செய்ய வேண்டும் என்ற நோக்கத்தில் சிவில் சர்வீஸ் செய்ததற்கு நன்றி என பலரும் இவரை பாராட்டி வருகின்றனர்.
ஒருவேளை தற்போது உங்களுக்கு டிசிஎஸ் நிறுவனத்தில் சேர்வதற்கான வாய்ப்பு கிடைத்தால் மீண்டும் இணைவீர்களா என சிலர் கேள்வி எழுப்பி உள்ளனர். ஒரு நபர் 1300 ரூபாயை ஃபிக்சட் டெபாசிட்டில் 40 ஆண்டுகளுக்கு போட்டு வைத்திருந்தால் 8 சதவீத வட்டியில் தற்போது அதன் மதிப்பு 28 ஆயிரம் ரூபாயாக இருக்கும் என்றும் டிசிஎஸ் புதிதாக வேலைக்கு சேரும் ஃபிரஷர்களுக்கே 16,000 ரூபாய் தான் ஊதியமாக தருகிறது, நல்ல வேலை நீங்கள் டிசிஎஸ் நிறுவனத்தில் வேலையை தேர்வு செய்யவில்லை என ஒரு பயனர் விமர்சனம் செய்துள்ளார். உங்களுடைய இந்த கதை சிவில் சர்வீஸ் பணிகளை தேர்வு செய்பவர்களுக்கு ஊக்கம் அளிக்கும் வகையில் இருக்கிறது என ஒரு பயனர் தெரிவித்துள்ளார்.


Click it and Unblock the Notifications