IT ஊழியர்களுக்கு இது மிக நல்ல விஷயமே.. TCS சொன்ன நல்ல விஷயம்..!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

மும்பை: கொரோனாவின் காரணமாக ஒவ்வொரு துறையிலும் உள்ள ஊழியர்களும் மன அழுத்தம் உள்ளிட்ட பல பிரச்சனைகளுக்கும் மத்தியில் சிக்கித் தவித்து வருகின்றனர்.

 

அவர்களை பாதுகாப்பாக வைக்க IUX என்ற சாப்ட்வேரை அறிமுகப்படுத்தியுள்ளது டிசிஎஸ் நிறுவனம்.

இது வணிக பிரச்சனைகளுக்கு ஒரு தீர்வாக அமையும் என்றும், அதோடு ஊழியர்களுக்கும் ஊழியர்களுடன் தொடர்பில் இருக்கும் வாடிக்கையாளர்களுக்கும், நிறுவனங்களை பாதுகாப்பாக வைக்கவும் இது உதவும் என்றும் கூறுகிறது.

IUX மூலம் கண்கானிப்பு

IUX மூலம் கண்கானிப்பு

அதோடு இருப்பிடங்களில் தொற்று அபாயத்தினை கண்கானிக்கவும், அதற்கு உடனடி நடவடிக்கைகளை கண்கானிக்கவும், உடனடி நடவடிக்கைகளை எடுக்கவும் வழிவகுக்கிறது. இது மொபைல்போன்கள் மற்றும் பேட்ஜ் ஸ்கேனர்கள் போன்ற சாதனங்களில் இருந்து தொடர்பு கொள்ளும்படியும் அமைந்துள்ளது.

என்ன பயன்

என்ன பயன்

ஆக இந்த சாப்ட்வேர் ஆனது படங்கள் மற்றும் வீடியோக்களுடன் இணைந்து, இந்த IUX சாப்ட்வேரும் ஊழியர்களின் நிலையை தெரிந்து கொள்ள உதவுகிறது. ஆக இதன் மூலம் சமூக தூரத்தினை தக்க வைத்துக் கொள்ளவதற்கான வழிமுறைகளையும் பரிந்துரைக்கலாம். அதோடு வாடிக்கையாளர்கள் அல்லது ஊழியர்களின் மன நிலை உணர்வினையும் இதன் மூலம் கண்கானிக்கலாம். இது வருமானத்திற்கு ஏற்படும் ஆபத்துகளை அளவிடவும் பயன்படும்.

என்ன  பிரச்சனை
 

என்ன பிரச்சனை

கொரோனாவினால் ஏற்படும் தாக்கம், பாரம்பரிய வணிக தொடர்ச்சி, அதற்கான தீர்வுகள் மீட்டெடுப்பு, அதோடு புதிய தொடர்ச்சியான பல சவால்களை சமாளிக்க இயலாது. அதோடு வணிகங்களை மீண்டும் திறப்பது, தனிப்பட்ட பாதுகாப்பு உபகரணங்கள் மற்றும் சமூக தூரத்திற்கு அப்பாற்பட்ட கடுமையான கட்டளைகளை பின்பற்ற வேண்டும் என பல பிரச்சனைகள் உள்ளன.

சாப்ட்வேர் பயன்பாடு

சாப்ட்வேர் பயன்பாடு

இந்த சாப்ட்வேர் வணிகத் தலைவர்களுக்காக வடிவமைக்கப்பட்டுள்ளது. அதோடு வங்கிகள், சில்லறை விற்பனையாளர்கள், கார்ப்பரேட் அலுவலகங்கள் மற்றும் வர்த்தக வளாகங்களில் உள்ள வணிகத் தலைவர்களுக்காக வடிவமைக்கப்பட்ட கிளவுட் அடிப்படையிலான தீர்வாகும். மேலும் இது ஊழியர்களையும், வாடிக்கையாளர்களை பாதுகாக்கவும், அரசாங்க விதிமுறைகளை பின்பற்றுவதற்கும் இந்த சாப்ட்வேர் பயன்படுகிறது.

வணிகங்கள் அழுத்தம்

வணிகங்கள் அழுத்தம்

ஆக மொத்தத்தில் இந்த சாப்ட்வேர் ஆனது தொடர்புகளை கண்டறிவதற்கும், செயற்கை நுண்ணறிவுகளை கண்டறிவதற்கும் பயன்படுகிறது. மேலும் கணிப்புகளை செய்தல் மேலும் வணிகத்தினை மேம்படுத்த பரிந்துரைகளை வழங்கவும் பயன்படுகிறது. பணியிடங்கள் மீண்டும் திறக்கப்படுவதால், ஊழியர்கள் மற்றும் வாடிக்கையாளர்கள் மற்றும் விசிடர்களின் பாதுகாப்பினை உறுதி செய்வதற்கும், பிரச்சனைகளை தவிர்ப்பதற்கும் வணிகங்கள் அழுத்தம் கொடுக்கின்றன என்றும் டிசிஎஸ் நிறுவனத்தின் உலகளாவிய தலைவர் அஸ்வினி சக்சேனா கூறியுள்ளார்.

வணிக தொடர்ச்சியினை தக்க வைத்துக் கொள்ள உதவும்

வணிக தொடர்ச்சியினை தக்க வைத்துக் கொள்ள உதவும்

ஆக ஒருங்கிணைந்த பகுப்பாய்வு தளங்களிலும் மற்றும் வேறுபட்ட நிறுவனங்களிலும், தரவுகளை பகுப்பாய்வு செய்ய இந்த IUX உதவுகிறது. இதன் மூலம் வணிக தொடர்ச்சியினை தக்க வைத்துக் கொள்ள முடியும். அதே நேரத்தில் பாதுக்காப்பினையும் வழங்க முடியும் என்றும் கூறப்படுகிறது.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

TCS launched IUX for Workplace Resilience; it may support employees and businesses

TCS launched IUX for Workplace Resilience; it may help employees and businesses.
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X