ஐடி ஊழியர்களுக்கு ஜாக்பாட் தான்.. டிசிஎஸ் செம அறிவிப்பு..!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

இந்தியாவின் மிகப்பெரிய வணிக குழுமங்களில் ஒன்றான டாடா குழுமத்தினை சேர்ந்த, நாட்டின் முன்னணி தகவல் தொழில்நுட்ப நிறுவனமான டாடா கன்சல்டன்ஸி நிறுவனம் அடுத்தடுத்து ஐடி ஊழியர்களுக்கு பல அதிரடியான அறிவிப்புகளை கொடுத்து வருகின்றது.

 

தொடர்ந்து பணியமர்த்தலை அதிகரித்து வரும் நிலையில், பல புதிய ஒப்பந்தங்களிலும் கையெழுத்திட்டு வருகின்றது.

4வது நாளாக சரிவில் தங்கம் விலை.. இன்னும் சரியுமா.. நிலவரம் என்ன.. நிபுணர்களின் கணிப்பு என்ன..!

இது அந்த நிறுவனத்தின் வளர்ச்சியினை இன்னும் ஊக்குவிக்கும் என்பதோடு, இன்னும் பணியமர்த்தலை ஊக்குவிக்கும் எனலாம். ஆக இது ஐடி ஊழியர்களுக்கு நல்ல விஷயம் எனலாம்.

டிசிஎஸ் புதிய ஒப்பந்தம்

டிசிஎஸ் புதிய ஒப்பந்தம்

டிசிஎஸ் நிறுவனம், டிரான்ஸ்போர்ட் ஃபார் லண்டனுடன் ஒரு ஒப்பந்தம் செய்துள்ளதாகவும், இது ஒரு புதிய ஸ்மார்ட் மொபிலிட்டி சிஸ்டத்தினை செயல்படுத்தவும், அதனை இயக்கவும் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளது. எனினும் இந்த ஒப்பந்தத்தின் மதிப்பு என்ன? என மற்ற முழு விவரங்கள் ஏதும் வெளியிடப்படவில்லை.

எத்தனை வருட ஒப்பந்தம்

எத்தனை வருட ஒப்பந்தம்

தற்போது போடப்பட்டுள்ள இந்த 10 வருட ஒப்பந்தத்தினை, மேலும் 5 வருடம் நீட்டிப்பதற்கான வாய்ப்பு இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது. டிசிஎஸ் டிஜிட்டல் முறையில் டாக்ஸி மற்றும் தனியார் வாடகை உரிமம் மற்றும் நிர்வாகம், அதன் தொடர்ச்சியான மேம்பாடுகள், கண்டிபிடிப்புகளை மேம்படுத்தும் என கூறப்பட்டுள்ளது.

இங்கிலாந்தில் தொடர்ந்து விரிவாக்கம்
 

இங்கிலாந்தில் தொடர்ந்து விரிவாக்கம்

ஆக இந்த ஒப்பந்தத்தின் மூலம் டிசிஎஸ் விரைவில் டிஜிட்டல் மாற்றத்திற்கான கட்டமைப்பை வடிவமைக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த டிஜிட்டல் சேவைகள் மூலமாக பல்வேறு வகையான சேவைகளை வழங்க திட்டமிட்டுள்ளதாகவும் தெரிகிறது. இங்கிலாந்தில் டிசிஎஸ் ஏற்கனவே மிகப்பெரிய ஐடி சேவை வழங்குனராக இருந்து வரும் நிலையில், சுமார் 18,000 ஊழியர்கள் அங்கு பணிபுரிந்து வருவதாக தெரிவித்துள்ளது.

 பெண்கள் பணியமர்த்தல்

பெண்கள் பணியமர்த்தல்

இதற்கிடையில் இந்தியாவினை பொறுத்த வரையில் டாடா கன்சல்டன்ஸி நிறுவனம், தற்போது அதன் பணியமர்த்தலை தொடங்கியுள்ளது. இது திறன் வாய்ந்த பெண் ஊழியர்களை ஊக்குவிக்கவும், அவர்களுக்கு இது ஒரு சிறந்த வாய்ப்பாகவும் அமையும். மேலும் நீங்கள் திறமையுள்ளராகவும், ஆர்வமுள்ளவர்களாகவும் இருந்தால், டிசிஎஸ் உங்களை அழைக்கிறது என கூறியுள்ளது.

என்ன தகுதி?

என்ன தகுதி?

மேலும் இந்த பணியமர்த்தலுக்கு இரண்டு வருடம் முதல் 5 வருடம் வரையில் அனுபவமுள்ள ஊழியர்கள், விருப்பமிருந்தால் விண்ணபிக்கலாம் எனவும் தெரிவித்துள்ளது. இதற்கு பட்டதாரிகள்/முதுகலை பட்டதாரிகள் விண்ணப்பிக்கலாம் என தெரிவித்துள்ளது.

குறிப்பிட்ட தொழில்நுட்ப அறிவு கொண்ட ஊழியர்களுக்கு தேவை உள்ள நிலையில், அதனை சார்ந்த ஊழியர்களுக்கு இது மிக நல்ல வாய்ப்பு எனலாம். இதனை பற்றிய முழுவிவரங்களுக்கு டிசிஎஸ்-ன் இணையதளத்தில் பார்த்தும் தெரிந்து கொள்ளலாம்.

வளர்ச்சி பாதையில் ஐடி நிறுவனங்கள்

வளர்ச்சி பாதையில் ஐடி நிறுவனங்கள்

சமீபத்தில் ஐடி துறையில் பணியமர்த்தல் விகிதமானது தொடர்ந்து அதிகரித்து வருகின்றது. சம்பள விகிதமும் அதிகரித்து வருகின்றது. நிபுணர்கள் இன்னும் வலுவான வளர்ச்சியினை காணலாம் என்று கூறி வருகின்றனர். இதனை இன்னும் ஊக்குவிக்கும் விதமாக ஐடி நிறுவனங்களில் அட்ரிசன் விகிதமும் அதிகரித்து வருகின்றது.

பணியமர்த்தல் அதிகரிக்கும்

பணியமர்த்தல் அதிகரிக்கும்

இதற்கிடையில் இன்னும் சில ஆண்டுகளுக்கு ஐடி துறையில் பணியமர்த்தல் என்பது அதிகரிக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. அதிலும் ஐடி டிசிஎஸ் கடந்த ஆண்டினை விட இந்த ஆண்டில் பணியமர்த்தலை அதிகரிக்கும். பிரெஷ்ஷர்களுக்கும் வாய்ப்புகள் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

அதிகரித்து வரும் தேவை

அதிகரித்து வரும் தேவை

ஐடி துறையினரின் தேவையானது தொடர்ந்து அதிகரித்து வரும் சூழலில், வளர்ச்சி விகிதமானது அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. குறிப்பாக ஐடி துறையில் கிளவுட் கம்ப்யூட்டிங், டேட்டா அனலிட்டிக்ஸ், டிஜிட்டல் மாற்றங்கள், சைபர் செக்யூரிட்டி, செயற்கை நுண்ணறிவு உள்ளிட்டவற்றின் தேவையானது மிக அதிகரித்து வருகின்றது. ஆக இத்துறைகளில் ஊழியர்கள் தங்களின் திறனை வளர்த்துக் கொள்வது மேற்கொண்டு அவர்களுக்கு இன்னும் வாய்ப்புகளை தேடிக் கொடுக்கும் எனலாம்.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

Read more about: tcs டிசிஎஸ்
English summary

TCS launches mega recruitment drive: it inks 10 year deal with transport for London

TCS latest updates.. TCS launches mega recruitment drive: it inks 10 year deal with transport for London
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X