ஐடி துறைகள் மந்தமாக இருக்கின்றன, கூகுள் , மைக்ரோசாப்ட் போன்ற பெரிய நிறுவனங்கள் எல்லாம் ஊழியர்களை வேலையில் இருந்து நீக்குகின்றன என்ற செய்தியை நாம் தொடர்ச்சியாக கேட்டு வருகிறோம். இந்தியாவை பொறுத்தவரை பெரிய நிறுவனங்கள் எதுவும் ஊழியர்கள் பணி நீக்க நடவடிக்கையை கையில் எடுக்காமல் இருந்தன.
டிசிஎஸ் பணிநீக்கம்: இந்த சூழலில் ஐடி துறைக்கே அதிர்ச்சி அளிக்க கூடிய வகையில் இந்தியாவின் முன்னணி ஐடி நிறுவனமான டாடா குழுமத்திற்கு சொந்தமான டிசிஎஸ் நிறுவனம் திடீரென தங்களுடைய ஊழியர்களில் 2 சதவீதம் பேரை வேலையில் இருந்து நீக்குவதாக அறிவித்திருக்கிறது. டிசிஎஸ் நிறுவனத்தில் 6,13,000க்கும் அதிகமானவர்கள் வேலை செய்கின்றனர். இவர்களில் 2 சதவீதம் பேர் அதாவது 12,200 பேர் வேலையில் இருந்து நீக்கப்பட இருக்கின்றனர். வரும் மார்ச் மாதத்திற்குள் இவர்கள் படிப்படியாக வேலையில் இருந்து நீக்கப்பட இருக்கின்றனர் என தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

அரசு வேலை போல கருதப்பட்ட டிசிஎஸ் வேலை: இந்த ஏஐ காலத்தில் எந்த ஒரு வேலையும் உறுதி இல்லை, நீங்கள் எவ்வளவு பெரிய முன்னணி நிறுவனத்தில் வேலையில் பணி பாதுகாப்பு என்பது கிடையாது , யாரும் இதிலிருந்து தப்ப முடியாது என்பதை சுட்டிக் காட்டும் வகையில் அமைந்திருக்கிறது டிசிஎஸ் நிறுவனத்தின் அறிவிப்பு. ஐடி துறையை சார்ந்தவர்கள் டிசிஎஸ் நிறுவனத்தின் இந்த நடவடிக்கையால் கடும் அதிர்ச்சிக்கு ஆளாகியுள்ளனர். கொல்கத்தாவை சேர்ந்த அபிஷேக் சர் என்ற டெக்கி தன்னுடைய லிங்குடின் பக்கத்தில் வெளியிட்டிருக்கும் பதிவில் ஒரு காலத்தில் டிசிஎஸ் நிறுவனத்தில் வேலை கிடைத்துவிட்டால் அரசு வேலை கிடைத்தது போல நாம் உணர்ந்தோம் என தெரிவித்துள்ளார்.
ஐடி துறையை மாற்றி அமைக்கும் ஏஐ: டிசிஎஸ் நிறுவனத்தில் வேலை கிடைத்துவிட்டால் பணி பாதுகாப்பு இருக்கும் நல்ல சம்பளம் கிடைக்கும், நீண்ட காலத்திற்கு வேலை நீடித்து நிலைக்கும் என நம்பி இருந்தோம் அரசு வேலைக்கு நிகராக டிசிஎஸ் நிறுவன வேலையை பார்த்தோம் ஆனால் தற்போது காலம் மாறிவிட்டது செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பங்கள் ஐடி துறையை மாற்றி அமைக்க தொடங்கிவிட்டன என கூறியுள்ளார். இதில் இருந்து யாரும் தப்ப முடியாது என குறிப்பிட்டு இருக்கிறார்.

டிசிஎஸ் செயலால் அதிர்ச்சி: டிசிஎஸ் நிறுவனம் மத்திய மற்றும் மூத்த நிலை அதிகாரிகளை தான் அதிக எண்ணிக்கையில் பணியில் இருந்து நீக்கி இருக்கிறது. குறிப்பாக நேரடியாக வாடிக்கையாளர்களுடன் தொடர்பு கொள்ளாத பதவிகளில் இருப்பவர்கள் ,ப்ராஜெக்ட் மேனேஜ்மென்ட் பதவிகளில் இருப்பவர்கள் தான் இதில் அதிகம் பாதிக்கப்பட்டிருக்கின்றனர். அண்மையில் தான் டிசிஎஸ் நிறுவனம் புதிதாக ஒரு பெஞ்ச் பாலிசியை கொண்டு வந்தது. அதாவது ஒரு ஆண்டில் 35 நாட்களுக்கு மேல் ஒரு ஊழியர் எந்த ப்ராஜெக்டிலும் வேலை செய்யாமல் இருக்கிறார் என்றால் அவரை வேலையில் இருந்து நீக்க வழிவகை செய்யக்கூடியது தான் இந்த பாலிசி.
45 வயதிலேயே பணி பாதுகாப்பு இல்லை: இதனிடையே கண்ணன் பால் என்ற ஒரு நிதி ஆலோசகர் லிங்குடின் பக்கத்தில் வெளியிட்ட பதிவில், டாடா குழுமமே தன்னுடைய ஊழியர்களில் 12000 பேரை வேலையில் இருந்து நீக்குகிறது என்றால் மக்களே அனைத்திற்கும் தயாராக இருங்கள் எனக் கூறியிருக்கிறார். முன்பெல்லாம் 60 வயதானால் தான் வேலையில் இருந்து தூக்குவார்கள் தற்போது 45 வயதிலேயே அது தொடங்கிவிட்டது என குறிப்பிட்டு இருக்கிறார். சம்பளத்திற்காக வேலைக்கு செல்லக்கூடிய அனைவருமே தங்களுக்கு என மருத்துவ காப்பீடு திட்டம், டெர்ம் இன்சூரன்ஸ் ஆகியவற்றை தனிப்பட்ட முறையில் வைத்துக் கொள்ள வேண்டும் என அறிவுறுத்தி இருக்கும் இவர் 12 மாதத்திற்கான எமர்ஜென்சி தொகையை உருவாக்கி வைத்திருப்பது சிறந்தது என அறிவுரை வழங்குகிறார்.
More From GoodReturns

பெங்களூரு IT ஊழியர்களுக்கு ஷாக்!80% பேர் வேலையை இழக்கப்போகிறார்களா? AI-யால் இன்னும் என்ன ஆகுமோ?

இந்தியர்களே தங்கம் விலையை பத்தின கவலையே இனி வேண்டாம்!! ரெடியானது நாட்டின் பெரிய தங்க சுரங்கம்!!

தங்கம் விலை எங்கே போகும்? கோல்டு ETF-க்கு புதிய அபாயம் – ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை

மாருதி சுசூகி கார் வைத்திருப்பவர்களுக்கு ஜாக்பாட்.. வந்தது Quickstop சேவை.. பட்டுபட்டுன்னு வேலை முடியும்..!

SGB: தங்க பத்திரம் வாங்கியுள்ளீர்களா.. முதல்ல இதை படிங்க.. ஏப்ரல் 1 முக்கியமான நாள்..!!

தங்கம், வெள்ளி விலை அடுத்த 1 வருடத்தில் எங்கிருக்கும்? இப்போது முதலீடு செய்வது லாபமா? நஷ்டமா?

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

மக்களுக்கு பெரும் ஏமாற்றம்.. மத்திய அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

ஓசூர் இளைஞர்களுக்கு குட் நியூஸ்..!! இனிமே ஓசூர் தான் Tech Hub..!! டைடல் பார்க் பணிகள் பரபர..!!



Click it and Unblock the Notifications