இந்தியாவின் மிகப்பெரிய ஐடி சேவை நிறுவனம் தான் டாடா குழுமத்திற்கு சொந்தமான டிசிஎஸ் நிறுவனம். கடந்த ஜூலை மாதத்தில் டிசிஎஸ் நிறுவனம் நடப்பு நிதியாண்டில் தங்களுடைய ஊழியர்களில் 2% பேர் அதாவது சுமார் 12000 பேரை வேலையில் இருந்து நீக்க போகிறோம் என அறிவிப்பு வெளியிட்டது.
இந்த அறிவிப்பு டிசிஎஸ் நிறுவன ஊழியர்கள் மட்டுமல்ல நாடெங்கும் இருக்கும் ஐடி துறை சார்ந்த ஊழியர்களுக்கு பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தியது. டிசிஎஸ் நிறுவனம் கூறியதை விட அதிகமான ஊழியர்களை வேலையில் இருந்து நீக்குவதாகவும் கட்டாயப்படுத்தி ஊழியர்களை ராஜினாமா செய்வதாகவும் தொடர்ச்சியாக புகார்கள் வெளிவந்த வண்ணம் இருந்தன.

டிசிஎஸ் முறையற்ற பணி நீக்கங்களையும் கட்டாய ராஜினாமாக்களையும் நிறுத்திக் கொள்ள வேண்டுமென ஐடி ஊழியர்களுக்கான சங்கங்கள் பல்வேறு மாநிலங்களிலும் போராட்டங்களையும் நடத்தின. மத்திய தொழிலாளர் நலத்துறை மற்றும் பல்வேறு மாநிலங்களின் தொழிலாளர் ஆணையங்களிடம் புகார்களும் வழங்கப்பட்டு வந்தன .
இந்த சூழலில் மகாராஷ்டிரா மாநிலம் புனேவை சேர்ந்த தொழிலாளர் ஆணைய அதிகாரிகள் டிசிஎஸ் நிறுவனத்திற்கு நோட்டீஸ் அனுப்பி இருக்கின்றனர் . ஐடி ஊழியர்களுக்கான NITES அமைப்பு டிசிஎஸ் நிறுவன பணி நீக்கங்கள் குறித்தும் ஐடி ஊழியர்களுக்கான பாதுகாப்பு தொடர்பாகவும் தொழிலாளர் ஆணையரிடம் புகார் அளித்திருந்தது. இந்த புகாரின் ஒரு பகுதியாக தான் விளக்கம் கேட்டு தொழிலாளர் ஆணையர் டிசிஎஸ் நிறுவனத்திற்கு சம்மன் அனுப்பி இருக்கிறார்.
இது தொடர்பாக தன்னுடைய எக்ஸ் பக்கத்தில் பதிவு செய்திருக்கும் நைட்ஸ் அமைப்பு டிசிஎஸ் நிறுவனத்தின் முறைகேடான ஊழியர் பணி நீக்க நடவடிக்கைகள் குறித்து பல புகார்கள் வந்தன,அந்த புகாரின் அடிப்படையில் புனே தொழிலாளர் ஆணைய அலுவலகத்திடம் நாங்கள் புகார் சமர்பித்திருந்தோம் என கூறியுள்ளது.
தற்போது புனே தொழிலாளர் ஆணைய அதிகாரிகள் டிசிஎஸ் நிறுவனத்திற்கு சம்மன் அனுப்பி இருக்கின்றனர் என கூறி இருக்கிறது.வரும் 18ஆம் தேதி இது தொடர்பாக விசாரணை நடத்தப்பட இருப்பதாக தகவல்கள் வெளியாகி இருக்கின்றன. கடந்த சில மாதங்களாகவே டிசிஎஸ் நிறுவனம் நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் செயல்படக்கூடிய டிசிஎஸ் அலுவலகங்களில் ஊழியர்கள் திடீரென வேலையில் இருந்து நீக்கப்படுவது, கட்டாயப்படுத்தி ராஜினாமா செய்யப்படுவது, முறையான நிதி இழப்பீடுகள் தராமல் தவிப்பது என மோசமான நடவடிக்கைகளை ஈடுபடுவதாக எங்களுக்கு புகார்கள் வந்த வண்ணம் இருக்கின்றன நைட்ஸ் அமைப்பு கூறி இருக்கிறது.
இந்த புகார்களை கவனமாக நாங்கள் ஆய்வு செய்தோம் இது தொடர்பான ஆவணங்களும் ஆதாரங்களும் எங்களிடம் இருக்கின்றன இதனை அடுத்து பாதிக்கப்பட்ட ஊழியர்கள் சார்பாக சம்பந்தப்பட்ட தொழிலாளர் ஆணையத்திடம் புகார்களை பதிவு செய்து இருக்கிறோம் என கூறியிருக்கிறது.
மேலும் பாதிக்கப்பட்ட ஊழியர்கள் தைரியமாக முன்வந்து எங்களிடம் புகார் தரலாம் என்றும் அவர்களின் உரிமைகளை பாதுகாக்க அனைத்து உதவிகளையும் எங்கள் அமைப்பு மேற்கொள்ளும் என்றும் தெரிவித்து இருக்கிறது . ஜூன் செப்டம்பர் காலாண்டு முடிவுகளில் நிதி முடிவுகளில் டிசிஎஸ் நிறுவன ஊழியர்களின் எண்ணிக்கையில் சுமார் 20000 பேர் குறைந்து இருப்பது தெரியவந்தது. ஆனால் டிசிஎஸ் நிறுவனமோ 6 பேரை மட்டுமே வேலையில் இருந்து நீக்கியதாக கூறி இருந்தது.
More From GoodReturns

மினி பாகிஸ்தான்? அடுத்தடுத்த சர்ச்சையில் TCS, டெக் மகேந்திரா! ஐடி நிறுவனங்களில் என்ன தான் நடக்கிறது?

டிசிஎஸ் நாசிக் அலுவலகத்தில் நடந்தது என்ன? மஃப்டியில் வேலை செய்த மகளிர் போலீஸின் ஷாக் ரிப்போர்ட் !!

திடீரென 300 ஊழியர்களை பணிநீக்கம் செய்ததா Zoho நிறுவனம்? உண்மை என்ன?

TCS முதலீட்டாளர்களுக்கு குட் நியூஸ்!12% எகிறிய லாபம்! 30 காலாண்டுகளில் இல்லாத தரமான சம்பவம்!

PF கணக்கில் வரும் 5 மேஜர் மாற்றங்கள்!! EPFO 3.0இல் இடம்பெற்றுள்ள முக்கிய அம்சங்கள் என்னென்ன?

ஐடி நிறுவன பெண் ஊழியர்களே எச்சரிக்கை!! டிசிஎஸ் நாசிக் அலுவலக சம்பவம் கற்று தரும் பாடம் இது தான்!!

பதவி நீக்கம் செய்யப்படுகிறாரா டிரம்ப்? ஈரான் போரால் டிரம்புக்கு ஏற்பட்டுள்ள புது பிரச்சினை!!

அட்சய திருதியை நாளில் தங்கம் விலை எப்படி இருக்கும்? நகை வாங்குவோர் கவனிக்க வேண்டியது என்ன?

TCS ஊழியர்களுக்கு ஜாக்பாட்! IT லே ஆப் மத்தியில் சம்பளம் எகிறப்போகுது..செம ஹாப்பி தான்!

அமெரிக்காவின் தாக்குதலால் முகம் சிதைந்து போன கமேனியின் மகன்!! வெளியானது அதிர்ச்சி தகவல்!!

தங்கம் விலை மே 1ஆம் தேதிக்கு பிறகு கிடுகிடுனு உயர போகுது!! சிக்னல் கொடுத்துட்டாங்க!!



Click it and Unblock the Notifications