ஐடி துறை மந்தம், ஏஐ பயன்பாடு அதிகரிப்பு, அமெரிக்க அரசின் வரி விதிப்பு நடவடிக்கை ஆகியவை டெக் துறையில் பணியாற்றும் ஊழியர்களுக்கு பணி சார்ந்த சவால்களை அதிகப்படுத்தியுள்ளன.
ஐடி துறை மந்தம்: கூகுள், மைக்ரோசாப்ட் உள்ளிட்ட பல நிறுவனங்களும் தொடர்ச்சியாக ஊழியர்கள் பணி நீக்க நடவடிக்கையை அறிவித்த வண்ணம் இருந்தன. இந்தியாவை பொருத்தவரை சிறு சிறு ஸ்டார்ட் அப் நிறுவனங்களின் ஊழியர்கள் பணி நீக்கம் என்பது நடைபெற்று வந்தது. ஆனால் முதன்முறையாக இந்தியாவின் பெரிய ஐடி சேவை நிறுவனமான டிசிஎஸ் தங்கள் ஊழியர்களில் 12000க்கும் அதிகமானவர்களை வேலையில் இருந்து நீக்குவதாக அறிவிப்பு வெளியிட்டு அனைவரையும் அதிர்ச்சியில் நிற்க வைத்துள்ளது.

டிசிஎஸ் பணிநீக்கம்: டிசிஎஸ் நிறுவனத்தின் இந்த நடவடிக்கையை தொடர்ந்து பல்வேறு ஐடி நிறுவனங்களும் ஊழியர்கள் பணி நடவடிக்கையை கையில் எடுக்கும் என்பதுதான் இந்த கவலையை மேலும் அதிகரிக்க செய்கிறது. இதனிடையே இந்தியாவில் ஐடி நிறுவனங்களுக்கான கூட்டமைப்பான நாஸ்காம் இந்திய ஐடி துறை தற்போது மிகப்பெரிய மாற்றத்திற்கு ஆளாகி இருப்பதாக அறிக்கை வெளியிட்டுள்ளது.
நாஸ்காம் அறிக்கை: அடுத்து தொடர்ச்சியாக நாம் நிறுவனங்கள் பணி நீக்க நடவடிக்கையை எடுப்பதை பார்க்க முடியும் என கூறி நாஸ்காம் அறிக்கை ஐடி ஊழியர்களை மேலும் அச்சமடைய செய்துள்ளது. இந்திய தகவல் தொழில்நுட்பத் துறை கட்டமைப்பு ரீதியாக பெரிய அளவிலான மாற்றத்திற்கு ஆளாகி வருகிறது என நாஸ்காம் தன்னுடைய அறிக்கையில் சுட்டிக்காட்டி இருக்கிறது.

ஏஐ பயன்பாடு: செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் மற்றும் ஆட்டோமேஷன் உள்ளிட்டவை ஐடி நிறுவனங்கள் செயல்படும் போக்கையே மாற்றி அமைத்திருப்பதாக கூறும் நாஸ்காம், ஐடி நிறுவனங்களின் தொழில் செயல்பாடுகளின் மையமாக ஏஐ மற்றும் ஆட்டோமேஷன் மாறி இருக்கிறது என்றும் கூறுகிறது. எனவே பாரம்பரியமான ஐடி வேலைக்கான திறமைகள் மட்டும் ஊழியர்களுக்கு போதாது என்றும் ஐடி வேலைக்கான திறமைகளை மறுமதிப்பீடு செய்வது கட்டாயம் என்றும் சுட்டிக்காட்டியுள்ளது.
திறன் மேம்பாடு அவசியம்: எந்த ஒரு புதிய தொழில்நுட்பம் வந்தாலும் அது சார்ந்த புதிய வேலை வாய்ப்புகளும் , புதிய பதவிகளும் உருவாகும் என்பதை நாம் மறுக்க முடியாது என கூறி இருக்கும் நாஸ்காம் ஐடி ஊழியர்கள் தொடர்ந்து நவீன தொழில்நுட்பங்களின் வருகைக்கு ஏற்ப தங்களுடைய திறன்களை மேம்படுத்திக் கொள்வது கட்டாயம் என்றும் , நிறுவனங்களும் ஊழியர்களின் திறன் மேம்பாட்டுக்கு தேவையான அனைத்து நடவடிக்கைகளும் எடுக்க வேண்டும் என்றும் தெரிவித்திருக்கிறது.
15 லட்சம் பேருக்கு பயிற்சி: பல்வேறு ஐடி நிறுவனங்களும் ஊழியர்களுக்கு ஏஐ சம்பந்தப்பட்ட திறன் பயிற்சிகளை வழங்குவதையும் நாஸ்காம் சுட்டிக்காட்டி இருக்கிறது . 2025 ஆம் நிதியாண்டின் நான்காவது காலாண்டு வரையிலான தரவுகளின் படி இந்தியாவை சேர்ந்த சுமார் 15 லட்சம் ஐடி நிபுணர்கள் ஏஐ மற்றும் ஜென் ஏஐ தொழில்நுட்பங்களுக்கான பயிற்சிகளை பெற்றுள்ளனர் என குறிப்பிட்டு இருக்கிறது .இவர்களில் 95 ஆயிரம் நிபுணர்கள் இந்தியாவில் பங்குச்சந்தையில் பட்டியலிடப்பட்ட பெரிய ஐடி நிறுவனங்களை சேர்ந்தவர்கள் என கூறி இருக்கிறது.
டொமைன் நிபுணத்துவம் முக்கியம்: AI-native cloud, embedded AI, applied intelligence ஆகிய பிரிவுகளில் இவர்கள் சான்றிதழ் பெற்றவர்களாக இருக்கின்றனர் என தெரிவித்துள்ளது. ஐடி சேவையில் ஏஐ முக்கியமான இடத்தை பிடித்திருப்பதால் அதற்கேற்ற வகையில் ஊழியர்களை வேலைக்கு தேர்வு செய்வதிலும் பல்வேறு மாற்றங்கள் ஏற்பட்டு வருகின்றன என கூறி இருக்கிறது. எனவே ஏஐ திறன் கொண்டவர்கள் ,குறிப்பிட்ட டொமைன்களில் நிபுணத்துவம் பெற்றவர்களுக்கு அதிக தேவை இருப்பதாக நாஸ்காம் அறிக்கையில் சுட்டிக்காட்டி இருக்கிறது.
More From GoodReturns

இந்தியர்களே தங்கம் விலையை பத்தின கவலையே இனி வேண்டாம்!! ரெடியானது நாட்டின் பெரிய தங்க சுரங்கம்!!

தங்கம் விலை எங்கே போகும்? கோல்டு ETF-க்கு புதிய அபாயம் – ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை

வேலையை விட போறீங்களா? ஏப்ரல் 1 வரை வெயிட் பண்ணுங்க..!! சட்டமே மாறுது.. ஊழியர்கள் கை ஓங்க போகுது!!

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

மீண்டும் Lockdown..? மீண்டும் வொர்க் ப்ரம் ஹோம்.. சர்வதேச அமைப்பு கொடுத்த வார்னிங்..!!

இந்தியாவுக்கு கிரீன் சிக்னல் கொடுத்த ஈரான்..!! 6 ஆண்டுகளில் இல்லாத முடிவினை எடுத்த மோடி அரசு..!!



Click it and Unblock the Notifications