இந்தியாவின் மிகப்பெரிய ஐடி சேவை நிறுவனமான டிசிஎஸ் சமீபத்தில் 12000 ஊழியர்களை பணியில் இருந்து நீக்குவதாக அறிவித்தது ஒட்டுமொத்த டெக் துறைக்கும் பெரும் அதிர்ச்சியாக இருந்தது. ஆனால் தற்போது வெளியாகியுள்ள தகவல்கள் இதைவிட அதிர்ச்சி அளிக்கும் வகையில் அமைந்துள்ளது.
ஏஐ, வர்த்தக மாற்றம், ஹெச்1பி விசா கட்டுப்பாடுகள், குறைந்து வரும் புதிய வர்த்தகம், வர்த்தகத்திற்கு ஏற்ற ஊழியர்கள் இல்லாமல் இருப்பது என பல காரணங்களுக்காக டிசிஎஸ் அடுத்த ஒரு வருடத்தில் 12000 ஊழியர்களை பணியில் இருந்து நீக்குவதாக அறிவித்தது.

இந்த பணிநீக்கத்தில் மீட் லெவல் மற்றும் சீனியர் லெவல் ஊழியர்கள் தான் அதிகம் பாதிக்கப்படுவார்கள் என முன்பே அறிவிக்கப்பட்டது, இதோடு டிசிஎஸ் பென்ச் பாலிசியை அறிமுகம் செய்தது பலருக்கும் நினைவிருக்கும். இதன் வாயிலாகவும் அதிகப்படியான ஊழியர்கள் பாதிக்கப்படுவதாக கணிப்புகள் வெளியானது.
இந்த சூழ்நிலையில் டிவிட்டரில் சோஹம் சர்கார் என்பவர் வெளியிட்ட பதிவு இந்தியா முழுக்க இருக்கும் டெக் ஊழியர்கள் மத்தியில் குண்டை போட்டு உள்ளது என்று தான் சொல்ல வேண்டும்.
சோஹம் சர்கார் தனது பதிவில், என்னுடைய கல்லூரி நண்பரை சந்தித்தேன் அவர் டிசிஎஸ் நிறுவனத்தில் வேலை பார்க்கிறார், சமீபத்தில் இந்நிறுவனத்தில் சுமார் 80000 டெக் ஊழியர்களை பணிநீக்கம் செய்யப்பட்டு உள்ளதாக தெரிவித்தார். இதில் பெரும்பாலான ஊழியர்கள் 3 மாதம் severance pay கொடுத்து அனுப்பப்பட்டு உள்ளனர். இன்னும் சிலர் severance pay கூட இல்லாமல் அனுப்பப்பட்டு உள்ளனர் என தெரிவித்துள்ளதாக பதிவிட்டு உள்ளார்.
இந்த பதிவு கடந்த 2 நாட்களில் 5 லட்சம் பார்வையாளர்களையும், 736 ரீடிவீட் மற்றும் 305 கமெண்ட்களையும் பெற்றுள்ளது. இந்த பதிவுக்கான கமெண்டில் பலர் இதை உண்மை எனவும், தனது நட்பு வட்டார்ங்களும் இதையே தான் சொன்னதாக தெரிவித்துள்ளனர்.
மேலும் சோஹம் சர்கார் பதிவுக்கு கமெண்ட் செய்த ஜஸ்ட் பிகாஸ் என்ற டிவிட்டர் கணக்காளர், இது முற்றிலும் உண்மை, என்னுடைய மேனேஜர் 25 வருடங்களாக டிசிஎஸ் நிறுவனத்தில் பணியாற்றி வந்த நிலையில் அவரை கட்டாயப்படுத்தி VRS எடுக்க வைத்துள்ளனர்.
இதேபோல் என்னுடைய பக்கத்து வீட்டுக்காரர் 20 வருடம் டிசிஎஸ் நிறுவனத்தில் பணியாற்றி வந்தார் அவரும் பணியில் இருந்து நீக்கப்பட்டு உள்ளார். என்னுடைய முன்னாள் மேனேஜர் ஒவ்வொரு வாரமும் fluidity list வருவதாகவும் தெரிவித்துள்ளார். எனக்கு கிடைத்த பல்வேறு தகவலின் படி கிட்டத்தட்ட 40000 முதல் 50000 டெக் ஊழியர்கள் பணியில் இருந்து நீக்கப்பட்டு இருக்கலாம் என தெரிவித்துள்ளார்.
இந்த பதிவு டிரெண்டான நிலையில் டிசிஎஸ் செய்திதொடர்பாளர் சமுக வலைத்தளத்தில் 80000 ஊழியர்கள் பணிநீக்கம் செய்யப்பட்டு உள்ளதாக வெளியான செய்தியை வெறும் வதந்தி என தெரிவித்து, இத்தகவல்களை முற்றிலும் மறுத்துள்ளார்.
கடந்த வாரம் தான் டெக் சேவை துறையில் உலகளவில் மன்னனாக இருக்கும் அக்சென்சர் கடந்த 3 மாதத்தில் 11000 ஊழியர்களை பணியில் இருந்து நீக்கியதாக அறிவித்தது. இதை தொடர்ந்து டிசிஎஸ் நிறுவனத்திலும் இதேபோன்ற செய்திகள் வெளியாகியுள்ளது இந்திய டெக் ஊழியர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது என்று தான் சொல்ல வேண்டும்.
கடந்த 2 வருடங்களாக செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தின் வளர்ச்சி ஒட்டுமொத்த டெக் துறையை தலைகீழாக புரட்டிப்போட்டு உள்ளது என்று தான் சொல்ல வேண்டும். ஏஐ பயன்பாட்டின் காரணமாக பல டெக் சேவை வேகமாக அறிமுகப்படுத்துவர் கவர்ச்சிகரமாக இருந்தாலும் இது வேலைவாய்ப்பு துறையில் பெரும் பாதிப்பை ஏற்படுத்துகிறது.
இந்தியாவில் தற்போது ஐடி சேவை நிறுவனங்கள் மட்டும் அல்லாமல் ஸ்டார்ட்அப், ப்ராடெக்ட் நிறுவனங்களும் ஏஐ அடிப்படையிலான சேவையை அறிமுகம் செய்ய தீவிரமாக பணியாற்றி வருகின்றனர். இதேபோல் அடுத்த 2 வருடத்திற்கு டெக் துறை வேலைவாய்ப்பு சந்தை பெரும் தடுமாற்றத்தை சந்திக்கும் என்பது உறுதி.
More From GoodReturns

பெங்களூரு IT ஊழியர்களுக்கு ஷாக்!80% பேர் வேலையை இழக்கப்போகிறார்களா? AI-யால் இன்னும் என்ன ஆகுமோ?

இந்தியர்களே தங்கம் விலையை பத்தின கவலையே இனி வேண்டாம்!! ரெடியானது நாட்டின் பெரிய தங்க சுரங்கம்!!

தங்கம் விலை எங்கே போகும்? கோல்டு ETF-க்கு புதிய அபாயம் – ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை

மாருதி சுசூகி கார் வைத்திருப்பவர்களுக்கு ஜாக்பாட்.. வந்தது Quickstop சேவை.. பட்டுபட்டுன்னு வேலை முடியும்..!

SGB: தங்க பத்திரம் வாங்கியுள்ளீர்களா.. முதல்ல இதை படிங்க.. ஏப்ரல் 1 முக்கியமான நாள்..!!

தங்கம், வெள்ளி விலை அடுத்த 1 வருடத்தில் எங்கிருக்கும்? இப்போது முதலீடு செய்வது லாபமா? நஷ்டமா?

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

மக்களுக்கு பெரும் ஏமாற்றம்.. மத்திய அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

ஓசூர் இளைஞர்களுக்கு குட் நியூஸ்..!! இனிமே ஓசூர் தான் Tech Hub..!! டைடல் பார்க் பணிகள் பரபர..!!



Click it and Unblock the Notifications