உலகப் பொருளாதார சூழல் இந்திய ஐடி நிறுவனங்களின் வருமானத்தில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தி இருக்கிறது. இது தவிர ஏஐ தொழில்நுட்பத்தின் பயன்பாடும் ஐடி நிறுவனங்கள் வேலை செய்யும் விதத்தையே மாற்றி வருகிறது.
டிசிஎஸ் பணிநீக்கம்: இந்த சூழலில் தான் இந்தியாவின் முன்னணி ஐடி சேவை நிறுவனமான டிசிஎஸ் தங்களுடைய ஊழியர்களில் 12,000 பேரை திடீரென வேலையில் இருந்து நீக்குவதாக அறிவித்தது. இந்த நிதி ஆண்டில் தங்கள் நிறுவன ஊழியர்களில் 2 சதவீதம் பேரை பணிநீக்கம் செய்யப் போகிறோம் என டிசிஎஸ் நிறுவனம் அறிவிப்பு வெளியிட்டு ஒட்டுமொத்த ஐடி துறையையும் அதிர்ச்சிக்கு ஆளாக்கியது.

ஐடி துறை அதிர்ச்சி: சமூக வலைத்தளங்கள் ரெடிட் பக்கங்களில் பல ஐடி துறை ஊழியர்களும் டிசிஎஸ் நிறுவனத்தின் இந்த நடவடிக்கை குறித்து தான் இன்னமும் பேசி வருகிறார்கள். டிசிஎஸ் நிறுவனத்தை பின்பற்றி பல்வேறு ஐடி நிறுவனங்களும் பணி நீக்க நடவடிக்கை அறிவிக்கும் என்பதுதான் ஐடி ஊழியர்கள் மத்தியில் நிலவக்கூடிய ஒரு அச்சம்.
12,000 ஊழியர்களின் எதிர்காலம் என்ன: டிசிஎஸ் நிறுவனத்தால் பணிநீக்கம் செய்யப்படும் இந்த 12 ஆயிரம் ஊழியர்களும் இனி என்ன செய்ய செய்வார்கள் என்பது குறித்து ரெடிட் தளத்தில் ஒரு நபர் வெளியிட்டு இருக்கும் பதிவு கவனத்தை பெற்று இருக்கிறது. டிசிஎஸ் நிறுவனத்தால் பணிநீக்கம் செய்யப்படும் இந்த 12,000 ஊழியர்களையும் அவர் இரண்டு பிரிவாக பிரித்து இருக்கிறார்.

உடனே வேலை தேடும் கட்டாயம்: முதல் பிரிவினர் உடனடியாக வேலைக்கு செல்ல வேண்டிய கட்டாயத்தில் இருப்பவர்கள் .அவர்களிடம் அதிக கடன் இருக்கிறது அவர்களிடம் பெரிய சேமிப்பு இல்லை. எனவே ஒப்பந்த முறை வேலைகள், குறைந்த சம்பளம் கிடைக்கும் வேலைகள் அல்லது வேறு நகரங்களுக்கு இடமாற்றம் உள்ளிட்டவற்றை அவர்கள் எடுத்துக் கொள்வார்கள்.
சம்பளத்தை குறைக்காத பிரிவினர்: இரண்டாவது வகையினர் உடனடியாக வேலை தேட மாட்டார்கள் அவர்கள் அடுத்த பல மாதங்களுக்கு வேலை வாய்ப்பே இல்லை என்றாலும் சம்பளத்தை குறைத்துக் கொள்ள மாட்டேன் என்பதில் உறுதியாக இருப்பவர்கள் எது நடந்தாலும் பார்த்துக் கொள்ளலாம் என்ற மனநிலையில் இருப்பவர்கள் என கூறியிருக்கிறார்.
50+ வயதினருக்கு சிக்கல்: மற்றொரு பயனர் வெளியிட்டிருக்கும் அறிவிப்பில் டிசிஎஸ் நிறுவனத்தால் பணிநீக்கம் செய்யப்படுபவர்களில் 50 வயதுக்கு மேற்பட்டவர்கள் இனி வேலைக்கு செல்லக்கூடாது என வேலை வாய்ப்பு சந்தையில் இருந்தே வெளியேறி விடுவார்கள். 45 வயதுக்கு மேற்பட்டவர்களில் 20% பேருக்கு மட்டுமே வேலை கிடைக்கும். மற்றவர்கள் வேலை தேடி இந்த துறையே வேண்டாம் என சென்றுவிடுவார்கள் .
20-30 வயதினரின் நிலை என்ன: 40 லிருந்து 45 வயதுக்கு உட்பட்டவர்களில் 50 சதவீதம் பேருக்கு மறுபடியும் வேலை கிடைப்பதற்கு வாய்ப்பு இருக்கிறது. 30 லிருந்து 40 வயது கொண்டவர்களுக்கு வேலை கிடைக்க வாய்ப்பிருக்கிறது . இவர்கள் தான் அதிக அளவில் வீட்டுக் கடன், வாகன கடன் உள்ளிட்டவற்றில் சிக்கியவர்களாக இருப்பார்கள் என கூறியுள்ளார். அதே வேளையில் 20 லிருந்து 30 வயது கொண்டவர்கள் தங்களுடைய திறமையை மேம்படுத்திக் கொண்டு வேறு நிறுவனத்தில் அதிக சம்பளத்துடன் வேலை வாய்ப்பு பெறுவதற்கான வாய்ப்பை பெற்றவர்கள் என தெரிவித்துள்ளார்.
More From GoodReturns

பெங்களூரு IT ஊழியர்களுக்கு ஷாக்!80% பேர் வேலையை இழக்கப்போகிறார்களா? AI-யால் இன்னும் என்ன ஆகுமோ?

இந்தியர்களே தங்கம் விலையை பத்தின கவலையே இனி வேண்டாம்!! ரெடியானது நாட்டின் பெரிய தங்க சுரங்கம்!!

தங்கம் விலை எங்கே போகும்? கோல்டு ETF-க்கு புதிய அபாயம் – ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை

மாருதி சுசூகி கார் வைத்திருப்பவர்களுக்கு ஜாக்பாட்.. வந்தது Quickstop சேவை.. பட்டுபட்டுன்னு வேலை முடியும்..!

SGB: தங்க பத்திரம் வாங்கியுள்ளீர்களா.. முதல்ல இதை படிங்க.. ஏப்ரல் 1 முக்கியமான நாள்..!!

தங்கம், வெள்ளி விலை அடுத்த 1 வருடத்தில் எங்கிருக்கும்? இப்போது முதலீடு செய்வது லாபமா? நஷ்டமா?

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

மக்களுக்கு பெரும் ஏமாற்றம்.. மத்திய அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

ஓசூர் இளைஞர்களுக்கு குட் நியூஸ்..!! இனிமே ஓசூர் தான் Tech Hub..!! டைடல் பார்க் பணிகள் பரபர..!!



Click it and Unblock the Notifications