டாடா கன்சல்டன்சி சர்வீசஸ் (TCS) நிறுவனம் தனது மொத்த ஊழியர்களில் சுமார் 2% அதாவது சுமார் 12,000 ஊழியர்களை, குறிப்பாக நடுத்தர மற்றும் மூத்த பிரிவைச் சேர்ந்தவர்களை அடுத்த 12 மாதங்களில் பணிநீக்கம் செய்ய திட்டமிட்டுள்ளதாக டிசிஎஸ் சிஇஓ உறுதி செய்துள்ளார். ஊழியர்கள் பணிநீக்கம் AI தொழில்நுட்பத்தால் ஏற்பட்டதல்ல, மாறாக ஊழியர்களின் திறமை பற்றாக்குறையால் பணிநீக்கம் செய்யப்படுவதாக விளக்கம் கொடுத்துள்ளார்.
ஆனால் உண்மையில் இதற்கு பின்னால் சில முக்கியமான காரணங்கள் உள்ளது என்பது தான் சந்தை வல்லுனர்களின் வாதம். கடந்த இரண்டு ஆண்டுகளாக ஐடி துறையில் தேவை கணிசமாக குறைந்துள்ளதற்கு பல காரணங்கள் உள்ளன.

இந்திய ஐடி சேவை நிறுவனங்களுக்கு காலம் காலமாக வெளிநாட்டில் இருந்து தான் சாப்ட்வேர் திட்டங்களை பெற்று வருகிறது. கடந்த 2 வருடத்தில் இத்தகைய திட்டங்களில் இருக்கும் மேனுவல் டெஸ்டிங், சப்போர்ட், லோ லெவல் கோடிங் போன்ற மனித ஊழியர்கள் செய்யும் பணிகள் அனைத்தும் ஏஐ மற்றும் பிற தொழில்நுட்பங்களை வைத்து ஆட்டோமேட் செய்யப்பட்டு உள்ளது. இதனால் ஊழியர்களின் தேவை பெரிய அளவில் குறைந்துள்ளது.
இதை தாண்டி ஐடி சேவை நிறுவனங்களுக்கான வணிகம் குறைகிறது, ஒப்பந்த விலை அளவுகள் குறைந்து, புதிய திட்டங்களின் துவக்கம் ஒத்திவைக்கப்படுகிறது, வாடிக்கையாளர்களின் செலவுகள் கட்டுப்படுத்தப்படுகின்றன.
இதனால், பெரிய தொழில்நுட்ப நிறுவனங்களின் லாபம், மார்ஜின் அளவுகள் ஆகியவை ஏற்கனவே குறைந்துள்ளது. அடுத்த சில காலாண்டில் வருவாய் அளவும் குறையும் என கணிப்புகள் நிலவுகிறது. இதனால் இன்ஃபோசிஸ் மற்றும் டிசிஎஸ் போன்றவை செலவுகளை குறைக்க இன்றைய வர்த்தக நடைமுறைக்கு பொருந்தாத ஊழியர்களை பணிநீக்கம் செய்ய திட்டமிட்டு வருகிறது. இதில் முதல் அடியை டிசிஎஸ் வைத்துள்ளது.

GCC எண்ணிக்கை உயர்வு:
ஐடி நிறுவனங்களின் பிஸ்னஸ் மாடல் அடி வாங்கியிருக்கும் இந்த வேளையில், கூடுதல் தாக்கத்தை GCC நிறுவனங்கள் உருவாக்கி வருகிறது.
உலகளாவிய திறன் மையங்களின் (GCCs) ஆதிக்கத்தையும், வளர்ச்சி குறித்து குட்ரிட்டன்ஸ் தளத்தில் பல முறை விவாதிக்கப்பட்டு உள்ளது. வெளிநாட்டு நிறுவனங்கள் இந்தியாவில் தங்கள் சொந்த அலுவலகங்களை அமைப்பது வேகமாக அதிகரித்துள்ளது. பெரிய வங்கிகள் மற்றும் நிறுவனங்கள், உதாரணமாக JP மோர்கன் மற்றும் கோல்ட்மன் சாக்ஸ், தங்கள் தொழில்நுட்ப பணிகளை முன்பு டிசிஎஸ் மற்றும் இன்ஃபோசிஸ் போன்றவற்றிடம் கொடுத்து வந்தது.
ஆனால் இப்போது இந்தியாவில் நேரடியாக ஊழியர்களை பணியமர்த்தி பணியாற்றுகின்றன. இந்த மாடல் முதலில் வெளிநாட்டு நிறுவனங்களுக்கு பெரும் சவாலாக இருக்கும் என கூறப்பட்டு வந்த நிலையில் தற்போது குறைவான செலவில் இயங்கி, திறன்மிக்க வளர்ச்சியை அளிப்பதை உறுதி செய்துள்ளது.
இதை தொடர்ந்து தற்போது பெரிய நிறுவனங்களை தாண்டி சிறிய நிறுவனங்களும் இந்தியாவில் தனது கிளை டெவலப்மென்ட் சென்டரை திறந்து வருகிறது. இதனால் ஐடி சேவை நிறுவனங்களுக்கு கிடைக்கும் வர்த்தகம் பெரிய அளவிலும், வேகமாகவும் குறைந்து வருகிறது.
GCC-கள் வேகமாக வளர்ந்து வருவதால், அவை பணியமர்த்தும் ஒவ்வொரு நபரும் டிசிஎஸ் மற்றும் இன்ஃபோசிஸ் போன்ற நிறுவனங்களுக்கு இழப்பாக மாறுகிறது. GCC நிறுவனங்கள் வருகை மூலம் புதிய வேலைவாய்ப்புகளை உருவாக்கினாலும், டிசிஎஸ், இன்போசிஸ் போன்று அதிகப்படியான வேலைவாய்ப்புகளை உருவாக்க முடியாது என்பதே தற்போதைய பிரச்சனை.

ப்ராடெக்ட் மீது கவனம் இல்லை:
இந்திய ஐடி சேவை நிறுவனங்கள் பல தசாப்தங்களாக உலகளவில் தொழில்நுட்ப சேவையில் ஆதிக்கம் செலுத்தி வந்தாலும் ப்ராடெக்ட் மீது கவனம் செலுத்தவில்லை. இது தான் தற்போதைய இந்திய ஐடி நிறுவனங்களின் பிரச்சனை, இந்தியாவில் இருக்கும் ஐடி திறமைகளை வைத்து 2 கூகுள், 3 மைக்ரோசாப்ட், 2 பேஸ்புக் உருவாக்கியிருக்க முடியும், ஆனால் ப்ராடெக்ட் டெவலப்மென்ட் என்ற ரேசில் கலந்துக்கொள்ளவில்லை. டிசிஎஸ், இன்போசிஸ், ஹெச்சிஎல், விப்ரோ ஆகியவை இன்றளவும் சில தனிப்பட்ட ப்ராடெக்ட்-களை உருவாக்கியிருந்தாலும் அவை சர்வதேச அளவில் முக்கியத்துவம் பெறவில்லை. இதனால் இன்றளவும் ஐடி சேவை நிறுவனங்களாகவே இருக்கின்றது.
AI பயன்பாடு:
இன்றளவில் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு நிறுவனங்கள் அனைத்தும் இப்போது AI அடிப்படையிலான சேவைகளையே அதிகம் விரும்புகின்றன, இதற்கு முக்கியமான காரணம் செலவு குறைப்பு, மேம்பட்ட சேவை, வாடிக்கையாளர்களுக்கு உடனடி சேவை என அதிகப்படியான பலன்கள் உள்ளது.
இப்படி தொழில்நுட்பம் வேகமாக மாறி வரும் வேளையில், AI சேவைகளை முன்னிறுத்தி, ஆழமான துறை திறன்களை உருவாக்கும் மற்றும் ஆட்டோமேட்டெட் டெலிவரி மாடல்களை உருவாக்கும் நிறுவனங்கள் மட்டுமே இன்றைய தொழில்நுட்ப உலகில் உயிர் வாழ முடியும் என்ற நிலைமை வந்துள்ளது.
இதன் விளைவாக, டிசிஎஸ் போன்ற நிறுவனங்கள் திறமை பற்றாக்குறையால் தவிப்பது மட்டும் அல்லாமல் செலவுகளை குறைக்க ஊழியர்களை பணிநீக்கம் செய்ய வேண்டிய கட்டாயத்தில் தள்ளப்பட்டு உள்ளது. சேவை துறையில் பணியாற்றுபவர்கள் AI/ML, டேட்டா மற்றும் ப்ராடெக்ட் தயாரிப்பில் திறமையை மேம்படுத்துவதற்கு சிறந்த நேரமாக உள்ளது.

30 ஆண்டுகால பயணம்:
இந்திய ஐடி சேவை நிறுவனங்கள் கடந்த 30 ஆண்டுகளாக, குறைவான சம்பளத்தில் கிடைக்கும் இந்திய ஊழியர்களை வைத்து சர்வதேச அளவில் வர்த்தகம் செய்து லாபத்தை பார்த்து வந்தது. ஆனால் தற்போது ஏஐ காலத்தில் இந்த பிஸ்னஸ் மாடல் வொர்க்அவுட் ஆகவில்லை என்பதே நிதர்சனம்.
ஆனால், மேற்கத்திய நாடுகள் ஜென் AI மற்றும் Agentic AI போன்ற தொழில்நுட்பங்களை பயன்படுத்தி வேகமாக வளர்ச்சி அடைந்து வருகிறது. இதனால் ஐடி சேவை நிறுவனங்களின் ஆதிக்கம் மந்தமடை வாய்ப்புகள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.
டிசிஎஸ் மற்றும் இன்ஃபோசிஸ் போன்ற நிறுவனங்கள் ஐடி சேவையில் இருந்து ப்ராடெக்ட் தயாரிப்பு, ப்ராடெக் இன்னோவேஷன்-க்கு மாறுவதில் தாமதமானதால், இப்போது அதன் விளைவுகள் எட்டிப்பார்க்கிறது. தற்போதையை சூழ்நிலையில் ஐடி ஊழியர்கள் தங்களுடைய திறனை மேம்படுத்திக்கொண்டால் GCC நிறுவனங்களுக்கு மாறிவிடலாம், ஆனால் ஐடி சேவை நிறுவனங்களுக்கு தான் இது பெரும் பிரச்சனையாக இருக்கப்போகிறது.
More From GoodReturns

இன்போசிஸ் தலையெழுத்தை மாற்றப்போகும் புது CEO.. சலில் பாரிக் நிலைமை என்ன..?

தமிழ்நாட்டு ஐடி ஊழியர்கள் அதிர்ச்சி!! திடீரென ஊழியர்கள் எண்ணிக்கையை குறைத்த Cognizant!!

ரேஷன் அட்டை வைத்திருப்பவர்களுக்கு முக்கிய அப்டேட்.. 3 மாதத்திற்கான பொருள் ஒரே நேரத்தில்.. மத்திய அரசின் முடிவு

ஆனந்த் ஸ்ரீனிவாசன்: படிச்சு படிச்சு சொன்னேன்.. யாரும் கேட்ல 'Big Drop'.. வெள்ளி அதோ கதி..!!

1986-ல் ஒரு புல்லட் இவ்வளவு தானா? வைரலாகும் பழைய பில்! அப்பவே கெத்து தான்!

தங்கம் விலை - 40 ஆண்டுகளில் இல்லாத வீழ்ச்சி.. இந்திய மக்களுக்கு அடித்தது ஜாக்பாட்..!

அமெரிக்க வங்கி வேலைக்கு டாட்டா.. வீட்டை விற்றுவிட்டு குடும்பத்துடன் உலகம் சுற்றும் IIT இளைஞர்!

கிடுகிடுவென சரியும் தங்கம், வெள்ளி விலை! இது வாங்குவதற்கு சரியான நேரமா? நிபுணர்களின் அதிரடி ஆலோசனை!

கோயம்புத்தூரா கொக்கா..!! சத்தமே இல்லாமல் சாதித்த கோவை..!!பெங்களூர்லாம் பக்கத்துலயே வர முடியாது!!

ஒட்டுமொத்த அமெரிக்காவுக்கும் ஷாக் கொடுத்த எலான் மஸ்க்.. டிரம்ப்-க்கு சவாலா..? யாரு சாமி நீ..?!

வறுமையை வென்று சாதனை படைத்த பொன்னரசி! லட்சங்களில் டர்ன் ஓவர்! முருங்கை டூ மல்டிநேஷனல் பிசினஸ்!



Click it and Unblock the Notifications